ஏர்டெல் & ஜியோவை "தெறிக்கவிடும்" டாப் 5 பிஎஸ்என்எல் திட்டங்கள்.!

|

ரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான திட்டங்களை எந்தவிதமான இடைவெளியும் இல்லாது வழங்குவதில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தை - அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனமான - பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் மிஞ்சி விட்டது என்றே கூறலாம்.

ஏர்டெல் & ஜியோவை

முகேஷ் அம்பானி தலைமையின்ன்கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோவுடன் சேர்த்து ஏர்டெல், வோடபோன், ஏர்செல் உட்பட சந்தையில் உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களுடனும் போட்டிப்போடும் முனைப்பில், பிஎஸ்என்எல் அதன் கட்டண யுத்தத்தை தீவிரப்படுத்தியது. ஜியோவின் வருகையை சரியாக பயன்படுத்திக் கொண்டது யாரும் கூறலாம்.

ரூ.97/-க்கு தொடங்கி ரூ.485/-க்குள் கிடைக்கும் டாப் 5.!

ரூ.97/-க்கு தொடங்கி ரூ.485/-க்குள் கிடைக்கும் டாப் 5.!

அவ்வண்ணமே பிஎஸ்என்எல், அதன் ப்ரீபெயிட் சந்தாதாரர்களுக்கான பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்ததுடன், அந்த திட்டங்கள் வழியே நம்பமுடியாத தரவு மற்றும் அழைப்பு நன்மைகளையும் வழங்கிவருகிறது. அப்படியாக ரூ.97/-க்கு தொடங்கி ரூ.485/-க்குள் கிடைக்கும் டாப் 5 பிஎஸ்என்எல் திட்டங்களை இங்கே தொகுத்துள்ளோம். நீங்களொரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் என்றால் இந்த தொகுப்பு சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க உங்களுக்கு நிச்சயம் உதவும்.

பிஎஸ்என்எல் ரூ.186/- திட்டம்.!

பிஎஸ்என்எல் ரூ.186/- திட்டம்.!

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த ரூ.186/- திட்டமானது, பயனர்கள் 28 ஜிபி தரவுடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை அனுபவிக்கலாம். இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் செல்லுபடி காலமானது 180 நாட்களாகும். ஆனால் இதன் தரவு நன்மைகள் வெறும் 28 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த விளம்பர சலுகை ஒரு நிரந்தரமான திட்டமல்ல, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ட்ரிபிள் ஏஸ் (அ) எஸ்டிவி 333 ஆபர்.!

பிஎஸ்என்எல் ட்ரிபிள் ஏஸ் (அ) எஸ்டிவி 333 ஆபர்.!

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான மிகச் சிறந்த திட்டமாக டிரிபிள் ஏஸ் அல்லது எஸ்டிவி 333 திகழ்கிறது. இந்தத் திட்டமானது அதன் பயனர்களுக்கு, நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான அதிவேக தரவை வழங்குகிறது மற்றும் இந்த திட்டம் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

மிகவும் பயனுள்ள ரீசார்ஜ் திட்டம்.!

மிகவும் பயனுள்ள ரீசார்ஜ் திட்டம்.!

2017-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் இந்த திட்டம், நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான தரவு தேவைப்படும் பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பின்குறிப்பு: சில பகுதிகளில், இந்த பிஎஸ்என்எல் 1ஜிபி அல்லது 2ஜிபி என்ற அளவிலான தேர்வு நன்மையை கொண்டுள்ளது.

பிஎஸ்என்எல் ரூ.97/- திட்டம்.!

பிஎஸ்என்எல் ரூ.97/- திட்டம்.!

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து, மலிவான விலையில் 4ஜி செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் ஆன பாரத் 1 கருவியை அறிமுகப்படுத்தியது. .2,200/- என்ற விலை நிர்ணயம் கொண்டுள்ள இக்கருவிடன் சேர்த்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் விளம்பர சலுகையான ரூ.97/- ரீசார்ஜ் கிடைக்கிறது.

வரம்பற்ற அழைப்பு, தரவு நன்மை.!

வரம்பற்ற அழைப்பு, தரவு நன்மை.!

இந்த ரூ.97/- என்ற பிஎஸ்என்எல் திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். வெளியூர் ,மற்றும் உள்ளூர் அழைப்புகள் என்ற வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்கும் இந்த திட்டம் வரம்பற்ற தரவு நன்மைகளையும் வழங்குகிறது. இருப்பினும் அதிவேக தரவு பயன்பாடு 5ஜிபி அளவில் மட்டுமே கிடைக்கும். அதற்கு மேலான தரவின் வேகம் 80கேபிபிஎஸ் ஆக குறையும். இருப்பினும் இந்த திட்டம் பார்த் 1 ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும், எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது.

தில் கோல் கெ போல் (அ) ரூ.349/- திட்டம்.!

தில் கோல் கெ போல் (அ) ரூ.349/- திட்டம்.!

ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் 0ஜியோவின் குரல் மற்றும் தரவு நன்மைகளை வழங்கும் காம்போ திட்டங்களுடன் போட்டிபோடும் முனைப்பில் வெளியான இந்த திட்டத்தின் கீழ், நாள் ஒன்றிற்கு 2.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கான நன்மையையும் கிடைக்கும். எஸ்டிவி349 என்றும் அழைக்கப்படும் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

பிஎஸ்என்எல் ரூ.485/- திட்டம்.!

பிஎஸ்என்எல் ரூ.485/- திட்டம்.!

இந்த ரூ.485/- திட்டமானது மொத்தம் 90ஜிபி அளவிலா டேட்டாவுடன் உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு மற்றும் இலவச உள்வரும் ரோமிங் ஆகிய நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 180 நாட்களும் ஆகும்.

சில பகுதிகளில் ரூ.429/-க்கு கிடைக்கும்.!

சில பகுதிகளில் ரூ.429/-க்கு கிடைக்கும்.!

இருப்பினும் இதன் தரவு நன்மைகளின் செல்லுபடியாகும் காலம் 90 நாட்கள் மட்டுமே என்பதும், 90 நாட்களுக்கு பிறகு தரவு முடிவடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது பின்குறிப்பு: சில பகுதிகளில், பிஎஸ்என்எல்485 திட்டமானது ரூ.429/-க்கு மேற்கூறப்பட்டுள்ள நன்மைகளை வழங்குகிறது. மேலும் இதுபோன்ற பல்வேறு டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் இணையத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
These 5 Tariff Plans of BSNL Under Rs. 500 Gives Run to Private Telecom Operators Plans. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X