Nothing போன் 1 உடன் போட்டியிடும் 5 ஸ்மார்ட்போன்கள் இது தானா? இதில் எது உங்க சாய்ஸ்?

|

Nothing நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் மாடலான நத்திங் போன் 1 (Nothing Phone 1) அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் சில மணிநேரம் மட்டுமே உள்ளது. நத்திங் போன் 1, ஜூலை 12 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது. அதாவது, செவ்வாய்கிழமை (நாளை) நிறுவனம் நிகழ்த்தும் Return to Instinct என்ற நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு இந்திய நேரப்படி இன்று இரவு 8:30 மணிக்கு தொடங்குகிறது.

நத்திங் போன் 1 உடன் போட்டியிடப் போகும் 5 போன்கள்

நத்திங் போன் 1 உடன் போட்டியிடப் போகும் 5 போன்கள்

நத்திங் போன் 1 உடன் இந்தியாவில் போட்டியிடப் போகும் 5 தரமான ஸ்மார்ட்போன்கள்எது என்பதைத் தான் பார்க்க போகிறோம். இந்த புதிய டிவைஸ் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாகவே அதிகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கான முக்கிய காரணம், இந்த டிவைஸில் பொருத்தப்பட்டிருக்கும் LED லைட் அம்சம் மற்றும் வித்தியாசமான வடிவமைப்பு தான் என்று கூறப்படுகிறது. OnePlus இன் முன்னாள் இணை நிறுவனரான Carl Pei ஆல் ஸ்மார்ட்போன் ஆதரிக்கப்படுவதால் இந்த டிவைஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது.

நத்திங் போன் 1 எதிர்பார்க்கப்படும் விலை

நத்திங் போன் 1 எதிர்பார்க்கப்படும் விலை

நத்திங் ஃபோன் 1 ஆனது அண்டர் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டிருக்கக்கூடும் என்று சமீபத்திய லீக் தெரிவித்திருந்தது. அதேபோல், நத்திங் போன் 1 ஆனது ரூ.28,000 முதல் ரூ.30,000 வரையிலான விலைக்குள் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இது இந்த விலைப் பிரிவில் உள்ள Samsung, Motorola, iQoo மற்றும் Poco போன்ற ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நத்திங் போன் 1 டிவைஸிற்கு போட்டியாக இருக்கும் 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

Samsung Galaxy M52

Samsung Galaxy M52

கடந்த ஆண்டு சாம்சங் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட Samsung Galaxy M52 டிவைஸ் நத்திங் போன் 1 உடன் போட்டியிடும் வகுப்பில் ஒன்று சேருகிறது. இந்த சாதனத்தின் அம்சங்கள் அனைத்தும் நத்திங் உடன் நெருக்கமாக இருக்கிறது. குறிப்பாக இதன் விலை ரூ.25,000 என்ற புள்ளியில் வருகிறது. இது ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, Nothing Phone 1 டிவைஸ் ஆனது Snapdragon 778G+ சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Poco F4 5G

Poco F4 5G

Poco F4 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.28,000 விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது கிளாஸ் பின்புற பேனல் உடன் வருகிறது. இதுவும் கூட அட்டகாசமான டிஸைனுடன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Poco F4 ஆனது டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் டூயல் சிம் ஆதரவுடன் வருகிறது. இதன் டிஸ்பிளே HDR10+ ஆதரவுடன் FullHD+ உடன் வருகிறது. இந்த டிவைஸின் விலையை வைத்துப் பார்க்கையில் நத்திங் போன் 1 உடன் நெருக்கமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2iதிருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2i

Vivo V23

Vivo V23

கடந்த ஆண்டு விவோ நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட Vivo V23 5G ஸ்மார்ட்போன் இன்னும் மக்களுக்குப் பிடித்த மாடலாக இருக்கிறது. இது நத்திங் போன் 1 உடன் போட்டியிடும் அம்சம் நிரம்பிய ஸ்மார்ட்போன் மாடலாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான V சீரிஸ் தொடர் போன்களைப் போலவே, Vivo V23 ஆனது சிறந்த கேமரா மற்றும் நேர்த்தியான வடிவமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலைப் புள்ளியும் நத்திங் போனுக்கு நெருக்கமாக உள்ளது.

Motorola Edge 30

Motorola Edge 30

மோட்டோரோலா எட்ஜ் 30 இன் மிகப் பெரிய சிறப்பம்சமே இதன் poOLED டிஸ்பிளேவாகும். இது மிகவும் சிறப்பான OIS இயக்கப்பட்ட முதன்மை கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 778+ சிப்செட் உடன் வருகிறது. இது நத்திங் போன் 1 இல் காணப்படும் சிப்செட் உடன் வருகிறது. மோட்டோ எட்ஜ் 30 இன் டிஸ்பிளே 144Hz ரெபிரெஷ்ஷிங் ரேட் உடன் வருகிறது. இந்த டிவைஸ் 33W சார்ஜருடன் வருகிறது. இதுவும் நத்திங் போன் 1 டிவைஸிற்கு போட்டியாக கருதப்படுகிறது.

Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?

iQoo Neo 6

iQoo Neo 6

iQoo Neo 6 ஸ்மார்ட்போன் ஒரு கேமிங்கை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் Snapdragon 870 SoC உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் AMOLED டிஸ்பிளேவை வழங்குகிறது. இந்த டிவைஸில் 80W பாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இந்த 5 ஸ்மார்ட்போன் சாதனங்களும் நத்திங் போன் 1 டிவைஸ் உடன் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ௬ டிவைஸ்களும் மிக நெருக்கமான சிறப்பம்சம் மற்றும் விலை புள்ளியில் தான் வருகிறது. இதில் எது உங்களுடைய சாய்ஸ் என்பதை தெரியப்படுத்துங்கள்.

Best Mobiles in India

English summary
These 5 Smartphones Will Compete Directly With Nothing Phone 1

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X