Home
News

இதுல எது வேணும்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-க்கு முன்பு.. iOS 26-ல கிடைக்கும் 5 பெஸ்ட் பீச்சர்கள்.. என்னென்ன வருது?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் 26 (iOS 26) வெளியாகிய சூட்டிலேயே ஆண்டார்ய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) குறிப்பிட்ட பிக்சல் மாடல்களுக்கு அப்டேட் மூலம் கிடைக்க தொடங்கிவிட்டது. அடுத்த வாரங்கள் அல்லது மாதங்களில் மற்ற ஸ்மார்ட்போன் பிராண்ட்களுக்கும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்க இருக்கிறது. இந்த நேரத்தில் ஐஓஎஸ் 26-இல் கிடைக்கும் 5 பெஸ்ட் பீச்சர்களை பார்ப்போம். இதில் எந்த பீச்சர்களை ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அப்டேட்டில் கிடைக்க விரும்புகிறீர்கள் என்பதை போலில் (Poll) சொல்லுங்கள்.

இதுல எது வேணும்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-க்கு முன்பு.. iOS 26 கிடைக்குது!

போர்டிங் பாஸ் & டிஜிட்டல் ஐடி (Boarding Pass & Digital ID): ஆப்பிள் வாலெட்டில் (Apple Wallet) மூலம் போர்டிங் பாஸ் பீச்சர்கள் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. விமான பயணங்களின் போது, உங்களது லைவ் ஆக்டிவிட்டி மூலம் ரியல்-டைம் அப்டேட்களை பேமிலி அல்லது நண்பர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம். இதை டிராக் செய்ய முடியும்.

அதாவது, ஷேட் பிளைட் டிராக்கர் (Share Flight Tracker) பட்டனை அழுத்தி உங்களது கான்டாக்ட்களுக்கு லைவ் ஆட்டிவிட்டியை ஷேர் செய்யலாம். இதன் மூலம், உங்களை அவர்கள் டிராக் செய்து கொள்ளலாம். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். அதேபோல டிராக் லக்கேஜ் (Track Luggage) பீச்சர் மூலம் லக்கேஜ் இருக்கும் இடத்துக்கு செல்லலாம்.

அதேபோல போர்டிங் பாஸ் விவரங்களை வாலெட்டில் கொடுத்தாலோ அல்லது வாலெட் மூலம் புக்கிங் செய்தாலோ நீங்கள் செல்ல வேண்டிய டெர்மினலுக்கான மேப் ஆக்டிவேட் ஆகும். இதை வைத்து எளிதாக அங்கே செல்லலாம். இதற்காக டிஜிட்டல் ஐடியை பாஸ்போட் மூலம் உருவாக்க வேண்டும். இது குறிப்பிட்ட ஏர்போர்ட்களில் மட்டும் கிடைக்கிறது.

இதுல எது வேணும்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-க்கு முன்பு.. iOS 26 கிடைக்குது!

அடாப்டிவ் லாக் ஸ்கிரீன் கிளாக் (Adaptive Lock Screen Clock): ஐஓஎஸ் 26 பீச்சர்களில் லாக் ஸ்கிரீன் கிளாக் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. இது ஆட்டோமேட்டிக் அட்ஜஸ்ட்மென்ட் கொடுக்கிறது. அதாவது, லாக் ஸ்கிரீனில் நீங்கள் ஏதாவது ஒரு போட்டோவை வைத்தாலோ அல்லது லாக் ஸ்கிரீன் வால்பேப்பராக இருந்தாலோ அதிலுள்ள ஆப்ஜெக்ட்களுக்கு ஏற்ப கிளாக் அட்ஜஸ்ட்மென்ட் ஆகும்.

இது ஒவ்வொரு போட்டோவுக்கும் ஏற்ப மாறுபடும். ஆகவே, லாக் ஸ்கிரீனில் இருக்கும் ஆப்ஜெக்ட்களை மறைக்காமல் உங்களுக்கு கிளாக் காண்பிக்கப்படும். அதேபோல நோட்டிபிகேஷன்கள் வரும்போது, கிளாக்கின் சைஸ் ஆட்டோமேட்டிக் அட்ஜஸ்ட்மென்ட் செய்யப்படும். ஆகவே, எந்தவொரு இடையூறும் இல்லாமல், லாக் ஸ்கிரீன் கிளாக் மற்றும் வால்பேப்பர் காண்பிக்கப்படும்.

இதுல எது வேணும்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-க்கு முன்பு.. iOS 26 கிடைக்குது!

போன் ஆப் யுனிஃபைட் லேஅவுட் (Phone App Unified Layout): போன் ஆப்-இல் லேஅவுட் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ஃபேவரட்ஸ் (Favourites), ரீசண்ட்ஸ் (Recents) மற்றும் வாய்ஸ் மெயில்கள் (Voicemails) ஒரே இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல கால், கீபாட், கான்டாக்ட்ஸ் ஆகியவையும் ஒரே லேஅவுட்டில் அக்சஸ் செய்ய முடியும். புதிய ஐபோன் யூசர்களும் எளிதாக பயன்படுத்தலாம்.

இதுல எது வேணும்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-க்கு முன்பு.. iOS 26 கிடைக்குது!

கிரியேட் போல் மேசேஜ் (Create Polls Messages): வாட்ஸ்அப் சாட்டில் போல் (Poll) கிடைத்ததை போல ஐமெசேஜ் ஆப்-இல் போல் ஆப்ஷன் கிடைக்கிறது. அதேபோல இமேஜ் பேங்கிரவுண்ட், பேங்கிரவுண்ட் ஜெனரேட் போன்ற பீச்சர்களும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளன. இதுபோக குரூப் சாட்டில் ஆப்பிள் கேஷ் (Apple Cash) ரெக்கொஸ்ட் அனுப்பி பணத்தை பெற்று கொள்ளலாம்.

ஆப்பிள் மியூசிக் லிரிக்ஸ் டிரான்லேஷன் (Apple Music Lyrics Translation): ஆப்பிள் மியூசிக் ஆப் மூலம் ரியல்-டைம் லிரிக்ஸ் டிரான்லேஷன் செய்து கொள்ளலாம். லிரிகிஸ் புரொடெக்சன் மூலம் இந்த ஆப்ஷன் கொடுக்கப்படுகிறது. அதேபோல ஆட்டோமிக்ஸ் (AutoMix) பீச்சர கிடைக்கிறது. இதன் மூலம் டிஜே (DJ) போல ஆடியோ மிக்ஸ் செய்து கொள்ளலாம். பார்டி பிரியர்களுக்கு இது பக்காவாக இருக்கும்.

இதுல எது வேணும்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-க்கு முன்பு.. iOS 26 கிடைக்குது!

மேற்கண்ட பீச்சர்களை ஆண்ட்ராய்டு யூசர்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை கீழே தெரியும் போல் மூலம் தெரிவிக்கலாம். ஆப்பிள் நிறுவனத்தை போலவே கூகுள் நிறுவனத்தின், கூகுள் வாலெட், போன் ஆப், லாக் ஸ்கிரீன், மெசேஜ் ஆப் ஆகியவற்றை கோடிக்கணக்கான யூசர்கள் பயன்படுத்துகின்றனர். ஆகவே, இவர்களுக்கும் இதேபோன்ற பீச்சர்கள் தேவையாக இருக்கலாம்.

Take a Poll

More from GizBot

Best Mobiles in India

English summary
These 5 iOS 26 Features Android Users Will Want On Their Phones Ahead of Android 16 Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X