Home
News

இந்த 3 திட்டம் போதும்.. ஒரு மாதம் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. அள்ளிக் கொடுக்கும் Airtel.. என்ன விலை?

ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. ஆனால் இப்போதும் கூட பட்ஜெட் விலையில் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. சரி இப்போது இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கும் 3 அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்கள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 379 plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும். இதுதவிர பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

இந்த 3 திட்டம் போதும், ஒரு மாதம் வேலிடிட்டி, அள்ளிக் கொடுக்கும் Airtel

அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 429 plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 77.5ஜிபி வரை டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ609 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 609 plan) ஆனது மொத்தம் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 60ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த 60ஜிபி டேட்டாவை எப்போது வேண்டும் என்றாலும்
பயன்படுத்தலாம்.

இந்த 3 திட்டம் போதும், ஒரு மாதம் வேலிடிட்டி, அள்ளிக் கொடுக்கும் Airtel

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.609 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் 300 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தைக் கொண்டுவந்தது. அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் விரைவில் மலிவு விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
These 3 Airtel prepaid plans offer one month validity and high data offer: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X