Home
News

Jio ஃபேமிலி ரீசார்ஜ் 2025.. ரூ.450 க்கு மொத்த குடும்பத்துக்கும் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனமானது கடந்த 2024 ஆம் ஆண்டை போலவே இந்த 2025 ஆம் ஆண்டிலும் கூட 2 பேமிலி போஸ்ட்பெய்டு மொபைல் திட்டங்களை (Family Postpaid Mobile Plans) தன்வசம் கொண்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போல இவ்விரு திட்டங்களுமே 4 பேர் கொண்ட குடும்பத்திற்கான திட்டங்களாகும்.

அதாவது இவ்விரு திட்டங்களிலும் ஒரு முதன்மை சிம் கார்டு இருக்கும், அதற்கு மேல் பயனர்கள் கூடுதலாக 3 சிம் கார்டுகளை பெறலாம். ஆனால் இந்த 4 சிம் கார்டுகளுக்குமே ஒரே ஒரு பில் தான் வரும், பேமிலி போஸ்ட்பெய்டு மொபைல் திட்டத்தின் கீழ் கிடைக்கும் கூடுதல் சிம் கார்டுகளை குடும்பத்தினர் மட்டுமின்றி, நண்பர்கள் மற்றும் சக பணியாளரக்ளும் கூட பயன்படுத்தலாம், அதற்கு எந்த தடையும் இருக்காது!

Jio ஃபேமிலி ரீசார்ஜ் 2025.. மொத்த குடும்பத்துக்கும் டேட்டா, வாய்ஸ்!

இந்த 2025 ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் கிடைக்கும் 2 பேமிலி மொபைல் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலை ரூ.449 மற்றும் ரூ.749 ஆகும். இந்த 2 திட்டங்களுமே இந்தியா முழுவதும் உள்ள பயனர்களுக்கு அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

ரிலையன்ஸ் ஜியோ ரூ.449 பேமிலி போஸ்ட்பெய்டு மொபைல் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.449 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, ப்ரைமரி சிம் கார்ட்டை பயன்படுத்தும் பயனருக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 75 ஜிபி மாதாந்திர டேட்டா கிடைக்கும்.

குறிப்பிட்ட டேட்டா வரம்பிற்குப் பிறகு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கூடுதல் ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதல் குடும்ப சிம் கார்டுகளை வைத்திருக்கும் பயனர்களுக்கும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும், ஆனால் டேட்டா லிமிட் ஆனது மாதத்திற்கு 5ஜிபி மட்டுமே கிடைக்கும். ரூ.449 திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை அன்லிமிடெட் 5ஜி, ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவைகள் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.449 பேமிலி போஸ்ட்பெய்டு மொபைல் திட்டத்தின் கீழ் எத்தனை கூடுதல் சிம் கார்டுகள் கிடைக்கும்? ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.449 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டமானது 3 அடிஷனல் பேமிலி சிம்களுடன் வருகிறது. கூடுதலாக கிடைக்கும் பேமிலி சிம் கார்டு ஒவ்வொன்றும் ஆக்டிவேட் செய்யப்படும் போது மாதத்திற்கு ரூ.150 செலவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

ரிலையன்ஸ் ஜியோ ரூ.749 பேமிலி போஸ்ட்பெய்டு மொபைல் திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ரூ.749 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, ப்ரைமரி சிம் கார்ட்டை பயன்படுத்தும் பயனருக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 100 ஜிபி மாதாந்திர டேட்டா கிடைக்கும்.

குறிப்பிட்ட டேட்டா வரம்பிற்குப் பிறகு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு கூடுதல் ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதல் குடும்ப சிம் கார்டுகளை வைத்திருக்கும் பயனர்களுக்கும் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கும், ஆனால் டேட்டா லிமிட் ஆனது மாதத்திற்கு 5ஜிபி மட்டுமே கிடைக்கும்.

ரூ.749 திட்டத்தின் கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் 5ஜி, ஜியோசினிமா, ஜியோடிவி மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவைகளை வழங்கும். கூடவே நெட்ஃபிளிக்ஸ் பேஸிக் (Netflix Basic), அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) ஆகிய ஓடிடி நன்மைகளையும் வழங்கும்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.749 பேமிலி போஸ்ட்பெய்டு மொபைல் திட்டத்தின் கீழ் எத்தனை கூடுதல் சிம் கார்டுகள் கிடைக்கும்? ரூ.449 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டத்தை போலவே இதூவும் 3 அடிஷனல் பேமிலி சிம்களுடன் வருகிறது. கூடுதலாக கிடைக்கும் பேமிலி சிம் கார்டு ஒவ்வொன்றும் ஆக்டிவேட் செய்யப்படும் போது மாதத்திற்கு ரூ.150 செலவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
These 2 Jio Family Postpaid Mobile Plans Rs 449 Rs 749 Give Benefits to Many in Single Bill
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X