டாப் கியர் போட்ட அம்பானி.. 5 முக்கிய OTT இலவசம்.. ரூ.180 குள்ள இப்படி ஒரு Jio என்டர்டெயின்மென்ட் பிளான்-ஆ!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Jio) நிறுவனம் அதன் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான திட்டங்களை கொண்டுள்ளது. நீங்கள் நீண்ட கால திட்டங்களை தேடினாலும் சரி அல்லது குறுகிய கால திட்டங்களை தேடினாலும் சரி.. பட்ஜெட் ரீசார்ஜை தேடினாலும் சரி பிரீமியம் பிளான்களை தேடினாலும் சரி.. ஜியோ அனைத்தையும் கொண்டுள்ளது!
இதில் என்டர்டெயின்மென்ட் பிளான்களும் அடக்கம். நீங்கள் மிகவும் மலிவான விலையில், பல்வேறு ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களை தேடினால் ஜியோ சேவையின் கீழ் 2 அருமையான திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்று ரூ.180 க்குள் என்கிற பட்ஜெட்டிலும், .இன்னொன்று ரூ.450 க்குள் என்கிற பட்ஜெட்டிலும் கிடைக்கிறது!

1. ஜியோ ரூ.175 பிளான்: ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது அதிக செலவு இல்லாமல் பல்வேறு ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களை வழங்குகிறது. இந்த பிளானின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இதன்கீழ் உங்களுக்கு 10 ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இதுவொரு டேட்டா பிளான் என்பதால், இதன்கீழ் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் கிடைக்காது
இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை சோனி லைவ், ஜீ5, லயன்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் என்எக்ஸ்டி, காஞ்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால் மற்றும் ஜியோ டிவி உள்ளிட்டவைகள் இலவசமாக கிடைக்கும்.
2. ஜியோ ரூ.445 பிளான்: ஒருவேளை உங்களுக்கு ரூ.175 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதே ஓடிடி நன்மைகளும் வேண்டும். கூடவே டெய்லி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளும் வேண்டும் என்றால்.. நீங்கள் ரூ.445 பிளானை ரீசார்ஜ் செய்யலாம். முந்தைய திட்டத்தைப் போலவே இந்தத் திட்டமும் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
நன்மைகளை பொறுத்தவரை இது எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை வழங்கும். மேலும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. டேட்டா நன்மையை பொறுத்தவரை இந்த திட்டம் ஒவ்வொரு நாளும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, அதாவது செல்லுபடியாகும் 28 நாட்களுக்கு மொத்தம் 56 ஜிபி டேட்டா கிடைக்கும்.
எண்டர்டெயின்மெண்ட் நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் சோனி லைவ், ஜீ5, லயன்கேட் ப்ளே, டிஸ்கவரி பிளஸ், சன் என்எக்ஸ்டி, காஞ்சா லங்கா, பிளானட் மராத்தி, சௌபால் மற்றும் பேன் கோட் உள்ளிட்ட தளங்களுக்கான இலவச அணுகல்களை கொடுக்கும். குறிப்பிடத்தக்க வகையில், இது ஜியோ ஹாட்ஸ்டாருக்கான 90 நாள் இலவச சந்தாவையும் கொண்டுள்ளது . மேலும் இது அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது.
டெலிகாம் துறை தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் எப்போது அதன் அடுத்த விலை உயர்வை அறிவிக்கும் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில், சந்தாதாரர்களின் சேர்க்கை நிலையாகி உள்ளதாலும், கடந்த ஜூலை 2024 இல் அறிவிக்கப்பட்ட விலை உயர்வின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளதாலும், டெலிகாம் நிறுவனங்கள் மற்றொரு சுற்று கட்டண உயர்வுகளை செய்யக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த ஜூலை 2024 இல் அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வானது கஸ்டமர்களால் முழுமையாக உள்வாங்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே தனியார் டெலிகாம் நிறுவனங்கள் இப்போது அடுத்த சுற்று விலை உயர்விற்கு தயாராக இருக்கலாம் என்றும் ஜெஃப்பெரிஸின் ஆய்வாளர்கள் குறிப்பிட்டு உள்ளனர். இந்த விலை உயர்வு எப்போது வேண்டுமானாலும் அமலுக்கு வரலாம். ஒருவேளை இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் பதற்றம் காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டு இருக்க்கலாம்.
ஏனென்றால் கடந்த 2025 ஜனவரி மாதமே, தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 10% வரை இன்னொரு விலை உயர்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஃபைனனாஷியல் எக்ஸ்ப்ரெஸ் வழியாக கிடைத்த அந்த தகவல் தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் பணமாக்குதலின் மீது தங்கள் கவனத்தை தொடரக்கூடும் என்பதால் 2025 ஆம் ஆண்டில் மீண்டுமொரு கட்டண உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications








