AI அம்சங்களால் நிரம்பிய HyperOS 2.2 அப்டேட்.. முதலில் இந்த 12 Xiaomi, Redmi, POCO போன்களுக்கு தான் வருமாம்!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் சும்மா தீயாக வேலை செய்கிறது. அதன் 15வது ஆண்டு விழாவில், தனது நிறுவனத்தின் முதல் இன்-ஹவுஸ் மொபைல் சிப்செட் (First-ever in-house mobile chipset) ஆன ஸிரிங் ஓ1 (Xring 01) சிப்செட்டை அறிமுகம் செய்த கையோடு.. மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டை (HyperOS 2.2 Update) ரிலீஸ் செய்ய "கிட்டத்தட்ட" தயாராக உள்ளது!
ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டின் டின் அதிகாரப்பூர்வ சேஞ்ச்லாக் இன்னும் "மறைக்கப்பட்டு" உள்ள நிலையில், சிஸ்டம் முழுவதுமாக பல மேம்பாடுகள் மற்றும் சில யுஐ அப்டேட்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். கூடவே சில புதிய அம்சங்களையும், ஷாவ்மீ ஈகோசிஸ்டமின் சிறந்த ஒருங்கிணைப்பையும் நாம் காணலாம். எந்தெந்த ஷாவ்மீ மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட் கிடைக்கும்?ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்? இதோ விவரங்கள்:

எந்தெந்த ஷாவ்மீ மற்றும் போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட் கிடைக்கும்? பட்டியலை பார்க்கும் முன்னர், எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட் கிடைக்கும் அல்லது வெளியீட்டின் முதல் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள டிவைஸ்களின் பட்டியலை ஷாவ்மீ இன்னும் அறிவிக்கவில்லை.
கீழ்வரும் பட்டியல் ஷாவ்மீடைம்-ல் (XiaomiTime) இல் உள்ளவர்கள் புதிய ஃப்ரிம்வேர் பதிப்பில் ஹைப்பர் ஓஎஸ் சோர்ஸ் கோட் இல் 12 ஷாவ்மீ டிவைஸ்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் பொருள் - இந்த 12 டிவைஸ்களுக்கு புதிய ஹைப்பர் ஓஎஸ் தயாராக உள்ளது. அதன் அடிப்படையில், பின்வரும் பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்கள் ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டை பெறலாம்.
1. போக்கோ எப்7 (POCO F7) / ரெட்மி டர்போ 4 ப்ரோ (REDMI Turbo 4 Pro)
2. போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 Pro 5G) / ரெட்மி நோட் 14 (Redmi Note 14)
3. போக்கோ எக்ஸ்7 (POCO X7) / ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro)
4. ரெட்மி கே70 (Redmi K70) / போக்கோ எப்6 ப்ரோ (POCO F6 Pro)
5. ரெட்மி கே70இ (Redmi K70E) / போக்கோ எக்ஸ்6 ப்ரோ (POCO X6 Pro)
6. ஷாவ்மீ 14 (Xiaomi 14)
7. ஷாவ்மீ 14 ப்ரோ (Xiaomi 14 Pro)
8. ஷாவ்மீ 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra)
9. ஷாவ்மீ 15 (Xiaomi 15)
10. ஷாவ்மீ 15 ப்ரோ (Xiaomi 15 Pro)
11. ஷாவ்மீ 15 அல்ட்ரா (Xiaomi 15 Ultra)
12. ஷாவ்மீ பேட் 6எஸ் ப்ரோ 12.4 (Xiaomi Pad 6S Pro 12.4)
இந்த ஷாவ்மீ டிவைஸ்கள், ஹைப்பர் ஓஎஸ் 2,2 ரிலீஸ் தொடங்கியவுடன், மற்ற ஷாவ்மீ டிவைஸ்களுக்கு முன்பே குறிப்பிட்ட அப்டேட்டை பெற வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்த தகவல் நேரடியாக ஷாவ்மீ நிறுவனத்திடம் இருந்து வராததால், இதை மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது. எப்போதும் போல, உலகளாவிய பயனர்களை சென்றடைவதற்கு முன்பு, ஹைப்பர் ஓஎஸ் 2.2 ரிலீஸ் ஆனது முதலில் சீனாவில் தான் தொடங்கப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஹைப்பர் ஓஎஸ் 2.2 அப்டேட்டில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- இது சாஃப்ட்வேர் அனுபவத்தை மேம்படுத்த சிஸ்டம் முழுவதும் பல மேம்பாடுகளை உள்ளடக்கியிருக்கும்
- ஏஐ மேம்பாடுகள் மற்றும் யூஸர் இன்டர்பேசில் பல மாற்றங்களை காணலாம்.
- ஏஐ அடிப்படையிலான போட்டோ அம்சங்களைக் கொண்டுவரும்
- அன்றாட பணிகளை கையாள பல புதிய ஏஐ அம்சங்களையும் காணலாம்
- புதுப்பிக்கப்பட்ட நோட்டிபிகேஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம்
- புதிய கேமரா இன்டர்பேஸ் ஆகியவைகளை கொண்டுவரலாம்


Click it and Unblock the Notifications








