இந்தியத் தொழில்நுட்பத் துறையில் பிரகாசமான எதிர்காலத்தைக் கொண்டுள்ள 10 வேலை வாய்ப்புகள்!

  லிங்க்டுஇன் (LinkedIn) என்னும் உலகின் மிகப்பெரிய இணையப் பகுப்பாய்வு நிறுவனத்தின் கணிப்பின்படி, வேகமாக வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகளைக் கொண்ட முதல் பத்துத் துறைகளில் எட்டுத் துறைகள் தொழில் நுட்பத் துறையைச் சார்ந்தவையாக உள்ளன.

  பல இலட்சக்கணக்கான உறுப்பினர்களிடம் இருந்து 2013 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் இந்நிறுவனம் இக்கருத்தைத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தொழில் நுட்பத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் 10 வேலை வாய்ப்புகள் குறித்து இங்குக் காண்போம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  கணினித் தரவுகள் வழி கற்றல் நுட்பப் பெறியாளர்

  Machine learning Engineer


  பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது , Machine learning Engineer என்னும் வேலை வாய்ப்புதான். இணையம் வழியாகப் பொருட்களை விற்கும் நிறுவனம், இணையம் வழியாக தொலைக்காட்சித் தொடர்களை வழங்கும் நிறுவனம் போன்றவை தங்களுடைய வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பொருட்களையும் நிகழ்ச்சிகளையும் வழங்குகின்றன. வங்கிகள் பண மோசடி அல்லது முறையற்ற பணப்பரிமாற்றம் ஆகியன குறித்து உடனடியாக அறிந்து கொள்கின்றன. இது போன்ற நிறுவனங்களின் செயல்பாட்டுக்குக் காரணம், வாடிக்கையாளரிடமிருந்து தகவல்களைத் திரட்டி அதிலிருந்து துல்லியமாகச் சில முடிவுகளை எடுக்கும் தொழில்நுட்பம்தான். இதற்கு செயற்கைத் தொழில்நுட்ப அறிவும் (Artificial Intellegence) பயன்படுத்தப் படுகிறது. இந்தப் பணிக்காகத்தான் "கணினித் தரவுகள் வழி கற்றல் நுட்பப் பெறியாளர்" அதாவாது, Machine learning Engineer தேவைப்படுகிறார். கணினிகள் தங்களிடம் உள்ள தகவல்களின் அடிப்படையில் துல்லியமான முடிவுகளை எடுக்கின்றன. இந்த முடிவுகளுக்கு ஏற்பச் செயலாற்ற மென்பொருள் பொறியாளர்கள் இப் பணிக்குத் தேவைப்படுகின்றனர்.

  பயன்பாட்டுச் செயலிகள் உருவாக்க பகுப்பாய்வாளர்

  Application Developmwnt Analyst

  இந்தப் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருப்பது பயன்பாட்டுச் செயலிகள் உருவாக்க பகுப்பாய்வாளர் பணிதான். கணிப்பொறி சார்ந்த பயன்பாட்டுச் செயலிகளை உவாக்கி, சோதித்து, அதில் உள்ள செயற்பாட்டுக் குறைபாடுகளை நீக்கி, வாடிக்கையாளர்களின் தேவைக்கு எற்ப இயங்க வைப்பதுதான் இவர்களின் பணி. இதற்குப் பொருத்தமான மென் பொறியாளர்கள் தேவை.

  பின்புல மென்பொருள் உருவாக்குநர்

  Back-end Developer

  இப்பட்டியலில் மூன்றாமிடம் பிடித்திருப்பது Back-end Developer என்னும் கணினிப் பயன்பாட்டுச் செயலிகளை முறைப்படுத்தலுக்கான பணியாகும். வெற்றிகரமாக இயங்கும் ஒவ்வொரு கணினி மற்றும் மொபைல் பயன்பாட்டுச் செலிகளின் பின்னாலும் இவர்களுடைய உழைப்பு உள்ளது.

  முழு நிலை மென் பொறியாளர்

  Full Stack Engineer

  இந்தப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்திருப்பது Full Stack Engineer எனச் சொல்லப்படுகின்ற, முழு நிலை மென் பொறியாளர் பணியாகும். இணையம் சார்ந்த பயன்பாட்டுச் செயலிகளை உருவாக்கி, அதனைப் பயன்படுத்தும் நிலை, பராமரிக்கும் நிலை, குறைபாடுகளை நீக்கும் நிலை என அனைத்து நிலைகளிலும் பணியாற்றக் கூடிய மென் பொருள் நிபுணர்களுக்கு உடனடி வேலை வாய்ப்பு உள்ளது. பயன்பாட்டுச் செயலியை உருவாக்கும் நிறுவனம் அதனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் ஆகிய இருவருக்கும் இவர்களுடைய பணி தேவைப்படுகிறது.

  தரவு ஆய்வறிஞர்

  Data Scientist

  இன்றை வணிக நிறுவனங்களுள் பெரும்பாலானவை தரவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் இயங்குகின்றன. நிதி சார்ந்த ஆய்வுகள் மற்றும் வாடிக்கையாளர்களின் மனப் போக்குகள் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்குத் தரவுகளை ஆராய்ந்து தீர்வுகளைத் தரும் வல்லுநர்களின் பணி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. எனவேதான் இந்தத் துறை சார்ந்த வேலை வாய்ப்பு 5 ஆம் இடத்தில் உள்ளது.

  வாடிக்கையாளர் வெற்றி மேலாளர்

  Customer Success Manager

  வளர்ந்து வரும் வேலை வாய்ப்புகள் உள்ள துறையில் ஆறாவது இடத்தில் வாடிக்கையாளர் வெற்றி மேலாளர் - Customer Success Manager - பணி இருப்பதாக லிங்க்டுஇன் (LinkedIn) நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களோடு நேரடியாகத் தொடர்பு கொள்ள வேண்டிய இந்த வேலைக்கு மேலாண்மை அறிவும் தொழில்நுட்ப அறிவும் தேவைப்படுகிறது. வாடிக்கையாளர்களோடு பழகி அவர்களுடைய குறைகளையும், தேவைகளையும் அறிந்து அவர்களின் மனதுக்கு ஏற்பச் சேவையை வழங்க நிறுவனங்களுக்கு இந்த மேலாளர்களின் பணி முக்கியத் தேவையாக உள்ளது.

  டிஜிடல் சந்தை நிபுணர்

  Digital Marketing Specialist

  இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது இப்பணி. டிஜிடல் தொழில் நுட்பத்தின் தேவைகளையும் அந்தத் துறையில் வெளிவரும் புதுமையான முயற்சிகளையும் தெளிவாக எடுத்துக் கூறும் ஆற்றல் மிக்கவர்கள் இப்பணிக்குப் பொருத்தமானவர்கள். இதற்கு, தொழில் நுட்ப அறிவும் ஆங்கிலம் மற்றும் பணியாற்றும் இடத்திற்கேற்ற மொழியில் சரளமாகவும் பேசக்கூடிய பேச்சாற்றலும் தேவை.

  பெரும் தரவுகள் உருவாக்குநர் பணி


  Big Data Developer

  பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது பெரும் தரவுகள் உருவாக்குநர் பணி (Big Data Developer). இந்தப் பணிக்குத் தொழில்நுட்ப அறிவும், திரட்டப்பட்ட தரவுகனைப் புரிந்து கொண்டு புதிய கோட்பாடுகளை உருவாக்கும் மேலாண்மை அறிவும் தேவை. ஒரு மென்பொருள் உருவாக்கத்தின் போது கடந்து வர வேண்டிய பல படிநிலைகளையும் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும். மதிப்பீடு, தொழில்நுட்ப வடிவமைப்பு, சோதித்தல், செயல்படுத்தல், ஆவணப்படுத்துதல், வாடிக்கையாளர் உதவிப் பயன்பாட்டுச் செயலி போன்ற பல நிலைகளிலும் திறன்ட பெற்றவர்களுக்கு இந்த வேலை வாய்ப்புப் பொருத்தமானதாக இருக்கும்.

  பணியமர்த்துநர்

  Sales Recruiter

  தொழில் நுட்ப அறிவு மிக்கவர்கள் தங்களுடைய வாடிக்கையாளரின் நிறுவனத்திற்குத் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வேலை - Sales Recruiter - இந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது. பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பித்தவர்களை இணையம் வழியாக ஒருங்கிணைத்தல், பணி நாடுநர்களின் திறன்களைச் சோதித்தறிதல் போன்ற பணிகள் இதில் அடங்கும். தகவல் தொழில் நுட்பத்துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் மிக்கவர்கள் இப்பணிக்குப் பொருத்தமானவர்கள்.

  மென் பொருள் உருவாக்குநர் பணி

  Python Developer

  உயர்நிலைக் கணிப் பொறி மொழியான பைத்தான் (Python) மொழி வழியாக மென் பொருளை உருவாக்கி அதனைப் பராமரிக்கும் பணி பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. வாடிக்கையாளரின் தேவை அறிந்து அதற்கேற்ற குறியீட்டுக் கட்டளைகளுடன் பிழையில்லாத மென் பொருளை உருவாக்கித் தர வேண்டும். Python, Django, Git, SQL, DRF போன்ற கணிப்பொறி மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்குப் பொருத்தமானவர்கள்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  These 10 jobs are the fastest-growing jobs in the Indian tech industry: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more