இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!

|

கூகுள் சர்ச் பாரில் இந்தியர்கள் அதிகம் சர்ச் செய்த வார்த்தை என்ன தெரியுமா? பெஸ்ட் மொபைல் அண்டர் 10,000 (Best mobile under 10000) என்ற வார்த்தை தான் அதிகமாக சர்ச் செய்யப்படாதாம். சந்தேகத்திற்கு இடமின்றி, மிகவும் பிரபலமான தேடலில் அதிகம் தேடப்பட்ட தகவல் இது தான்.

இந்தியாவில் ரூ. 10,000 விலைக்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களை வாங்க தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கான காரணம், மலிவு விலையில் கையில் ஒரு போன் இருந்தால் போதும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் டிவைஸ்களில் இப்போது AI அம்சம் கொண்ட சில சக்திவாய்ந்த CPUகள் கிடைக்கின்றன.

இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்!

10,000 ரூபாய் போன்லேயே எல்லாம் அம்சமும் வருது.!

அதேபோல், இந்த விலை பிரிவில் உள்ள தற்போதைய போன்களில் டூயல் கேமராக்கள், 4G VoLTE இணைப்பு, பெசல்-லெஸ் டிஸ்ப்ளே, பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 4000mAh பேட்டரி திறன் போன்றவை இடம்பெறுகின்றன. இதனால், மக்களும் கூடுதல் பணம் போட்டு, விலை உயர்ந்த போன்களை வாங்க ஆர்வம் காட்டுவதில்லை.

சரி, நீங்களும் இப்படி குறைந்த விலை பெஸ்டான ஒரு ஸ்மார்ட்போனை வாங்க ஆசைப்படுகிறீர்கள் என்றால், இந்த பதிவு உங்களுக்கானது தான். சிறந்த ஃபோனைத் தேர்வுசெய்ய உதவும் வகையில், இந்தியாவில் ரூ.10,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த 5 ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கு தொகுத்துள்ளோம்.

ரூ.10,000 விலைக்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

1. Realme C33
2. Infinix Hot 20 Play
3. Poco M4 Pro
4. Samsung Galaxy M04
5. Redmi 10

இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்!

1. Realme C33

Realme C33 ஆனது 6.5' இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 120Hz தொடு மாதிரி விகிதத்தைக் கொண்டுள்ளது. இது Unisoc T612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் 1TB வரை SD கார்டு விருப்பத்தைக் கொண்டுள்ளது. இது பின்புறத்தில் 50MP கேமராவை பேக் செய்கிறது. இது 10W சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Realme C33 இன் விலை ரூ .8,999 ஆகும்.

2. Infinix Hot 20 Play

Infinix Hot 20 Play ஆனது 6.82' இன்ச் கொண்ட 90Hz HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது முன்பக்கத்தில் 8MP சிங்கிள் கேமரா உடன் பின்புறத்தில் 13MP மற்றும் AI சென்சார் கொண்ட டூயல் கேமராவுடன் வருகிறது. இது MediaTek Helio G37 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் இல் இயங்குகிறது.
Infinix Hot 20 Play போனின் விலை ரூ.8,999 ஆகும்.

இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்!

3. POCO M5

POCO M5 ஆனது 6.58' இன்ச் 90Hz முழு HD+ LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது MediaTek Helio G99 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் இயங்குகிறது. SD கார்டு மூலம் 512ஜிபி வரை ஸ்டோரேஜ். 50MP + 2MP Depth Sensor + 2MP Macro Sensor | 8MP முன்பக்க கேமராவுடன், இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
POCO M5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,799 ஆகும்.

4. Samsung Galaxy M04

Samsung Galaxy M04 ஆனது 6.5-இன்ச் PLS LCD HD+ கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது MediaTek
Helio P35 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128ஜிபி உஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 5MP முன்பாக கேமரா மற்றும் பின்புறத்தில் 13MP + 2MP கேமராவுடன் 10W சார்ஜிங்கை 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy M04 டிவைஸின் விலை ரூ .8,499 மட்டுமே.

5. Redmi 10

Redmi 10 ஆனது 6.7' இன்ச் HD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 CPU உடன் 6ஜிபி வரை ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இதிலும் 2ஜிபி VRAM உள்ளது. 50MP + 2MP கேமராவுடன் இது முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜ் உடன் 6,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
Redmi 10 இன் விலை ரூ.9,675 மட்டுமே.

இந்த 5 போன்களும் கம்மி வலையில் அசத்தலான ஸ்பெக்ஸ்களை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
There Is No Match To These Top 5 Mobile Phones Under Rs 10000

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X