Home
News

Gmail-க்கு கும்பிடு.. இனி மெயில் அனுப்ப இது முக்கியம்.. உங்க ஐடிக்கு வேறு இல்ல.. Google முடிச்சி விட்டாச்சு!

பேங்க் அக்கவுண்ட் இல்லாதவர்களை கூட பார்க்க முடியும், ஆனால் ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட் இல்லாதவர்களை பார்க்க முடியாது. ஏனென்றால், ஸ்மார்ட்போன் முதல் ஆதார் கார்டு வரையில் ஜிமெயில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட ஜிமெயிலில் ஏதாவது மாற்றப்பட்டால், ஒட்டுமொத்த ஜிமெயில் யூசர்களும் அதை தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இப்போதும் அப்படித்தான் மெயில் அனுப்புவது, மெயில் சென்று சேருவது உள்ளிட்டவையில் கூகுள் நிறுவனம் ஒரு வார்த்தையில் யூசர்களை முடித்து விட்டிருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போனுக்கு முக்கியமாக இருக்கும் ஜிமெயில் அக்கவுண்ட் சேவையை கூகுள் (Google) நிறுவனம் இலவமாக வழங்கி வருகிறது. ஆவணப்பூர்வமான உரையாடல்கள் மற்றும் செய்திகள் பகிர்வுகள் ஜிமெயில் மூலமே நடக்கின்றன. வாட்ஸ்அப், மெசேஜ் போன்ற கம்யூனிகேஷன் ஆப்கள் இருந்தாலும், ஜிமெயில் அக்கவுண்ட் தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

Gmail-க்கு கும்பிடு.. இனி மெயில் அனுப்ப இது முக்கியம்.. உங்க ஐடிக்கு?

இப்படிப்பட்ட ஜிமெயில் முகவரி (Gmail Address) ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான பெயரில் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், இதில் வரும் புள்ளிகள் (Dots) யூசர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது, ஜிமெயில் முகவரில் புள்ளிகளை வேறு இடத்திலேயோ அல்லது இல்லாமலேயோ ஈமெயில் அனுப்பினால், அது சரியான நபருக்கு செல்லுமா என்ற சந்தேகம் இருக்கிறது.

ஏனென்றால், ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் ஈமெயில் சரியான நபருக்கு செல்லாமல் போனால், அதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சந்தேகம், ஜிமெயில் வைத்திருக்கும் பெரும்பாலான யூசர்களுக்கு வந்திருக்கும். ஆனால், உண்மையில் ஜிமெயிலில் இலவசமாக வழங்கப்படும் முகவரியில் டாட்களை தேவையில்லாத இடத்தில் சேர்த்தாலும் பிரச்சனையில்லை என்கிறது கூகுள் நிறுவனம்.

அதேபோல சேர்க்காமல் விட்டாலும் பிரச்சனையில்லையாம். அது சரியான நபருக்கு சென்று சேர்ந்துவிடுமாம். உதாரணத்துக்கு, [email protected] என்ற ஜிமெயில் முகவரியை எடுத்து கொள்வோம். இதில் முகவரியில் எங்கு டாட் சேர்த்தாலும் ஈமெயில் சரியாக சென்று சேரும். அதாவது, [email protected] அல்லது [email protected] அல்லது [email protected] என்று எங்கு சேர்த்தாலும் ஈமெயில் சரியாக சென்றுசேரும்.

ஆகவே, [email protected] என்பதையே கூகுள் நிறுவனம் பயன்படுத்தி கொள்ளும். முகவரிக்கு எழுத்துகள் மட்டுமே முக்கியம். ஆனால், இது இலவசமாக கிடைக்கும் ஜிமெயில் அக்கவுண்ட்களை தவிர மற்ற அக்கவுண்ட்களுக்கு பொருந்தாது. அதாவது, [email protected] அல்லது [email protected] போன்ற வேலை, ஸ்கூல் அல்லது நிறுவனம் சார்ந்த ஜிமெயில்களில் டாட்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

ஆகவே, எழுத்துக்களை ஜிமெயில் அங்கீகரிக்கிறது. அதே நேரத்தில் எண்களுக்கும் ஜிமெயில் அங்கீகாரம் கொடுக்கும். அதாவது. [email protected] என்னும் முகவரியில் எழுத்துக்களை மட்டுமல்லாமல், நம்பரையும் ஜிமெயில் எடுத்து கொள்ளும். ஆகவே, [email protected] என்று டைப் செய்து மெயில் அனுப்பினால், அது சரியான நபருக்கு சென்று சேராது. [email protected] என்று டைப் செய்து அனுப்பினால் மட்டுமே சரியாக செல்லும்.

இதனடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் முகவரியில் இருக்கும் டாட்களை எப்படி கையாள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முன்னதாக கூகுள் நிறுவனம் அதனுடைய கூகுள் பே (Google Pay) யூசர்களுக்கு யுபிஐ சர்க்கிள் (UPI Circle) பீச்சரை அறிமுகம் செய்தது. இந்த பீச்சர் மூலம் பேங்க் அக்கவுண்ட் இல்லாமலேயே குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களுடன் உங்களது யுபிஐ அக்கவுண்டை ஷேர் செய்யலாம்.

இதற்தான அனுமதியை பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டிருக்கும் மொபைல் நம்பரை வைத்திருக்கும் நபர் மட்டுமே வழங்க முடியும். ஆகவே, கூடுதலாக சேர்க்கப்படும் யுபிஐ அக்கவுண்ட்களில் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும், மாதத்துக்கு எவ்வளவு அதிகபட்சம் உள்ளிட்டவற்றை வரம்பு செய்து வைத்து கொள்ளலாம். இந்த பீச்சர் விரைவில் கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
There is no error Gmail Address with dots check if you send an Email with dot Google clarifies
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X