டிராய் கூறிய டிடிஹெச், கேபிள் கட்டணம் அமலுக்கு வந்தது.!
தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டண திட்டம் பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின்படி, ஜிஎஸ்டி சேர்த்து 153 ரூபாய் கட்டணத்தில் 100 இலவச சேனல்க
டிராய் கூறிய படி பிப்ரவரி 1ம் தேதி முதல் டிடிஹெச் மற்றும் கேபிள் மாதாந்திர கட்டணம் மாறுதல் ஏற்படுகின்றது. இதில் 100 சேனல்கள் இலவசமாக கிடைக்கின்றது.

இதில் கூடுதலாக சேனல்கள் வேண்டும் என்றால், தனிக்கட்டணம் செலுத்த வேண்டும். இதில் ஜிஎஸ்டியும் சேர்த்து கட்டணத் தொகை அதிகரித்து உள்ளது.
விருப்பமான சேனல்களுக்கு கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்பதால் பொது மக்கள் சற்று கதிகலங்கி போய் உள்ளனர்.

புதிய கட்டணம் அமல்:
தொலைக்காட்சி சேனல்களுக்கான புதிய கட்டண திட்டம் பிப்ரவரி ஒன்றாம் தேதியில் இருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின்படி, ஜிஎஸ்டி சேர்த்து 153 ரூபாய் கட்டணத்தில் 100 இலவச சேனல்கள் வழங்கப்படும்.

இலவச சேனல்களின் விபரம்:
தூர்தர்சனின் 25 சேனல்களும் அதில் அடங்கும். மற்ற 75 சேனல்களை வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பம் போல் தேர்வு செய்து கொள்ளலாம். 100க்கு மேற்பட்ட இலவச சேனல்கள் வேண்டும் என்றால், ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் கூடுதலாக 20 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

சேனல்கள் தேர்வு செய்ய வேண்டும்:
இது தவிர கட்டண சேனல்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்த வேண்டும். ஜனவரி 31 ஆம் தேதியான வியாழக்கிழமைக்குள் வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய சேனல்களை தேர்வு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே டிராய் அறிவித்திருந்தது. அதன்படி, டிடிஹெச் மற்றும் கேபிள் சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் சேனல்களை தேர்வு செய்யுமாறு கூறி வருகின்றன.

பொது மக்களின் கருத்து :
இந்த புதிய விதிமுறையால் தற்போது இருப்பதை விட கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என ஒரு தரப்பினரும், கட்டணம் குறையும் என மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்:
இந்த நிலையில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் புதிய கட்டண விதிமுறை அமல்படுத்தப்படுகிறது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என டிராய் தலைவர் ஆர்.எஸ்.ஷர்மா திட்டவட்டமாக தெரிவித்தார். வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் இன்றி புதிய மாற்றம் நடைமுறைக்கு வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மாற்றம் செய்ய வேண்டும்:
ஏற்கனவே நீண்ட கால பேக்கை தேர்வு செய்திருக்கும் வாடிக்கையாளர்கள், அந்த திட்டத்தையே தொடர விரும்பினால் டிடிஎச் நிறுவனங்கள் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புதிய பேக்கை வாடிக்கையாளர் தேர்வு செய்ய விரும்பினால் அதற்கு ஏற்ப அவர் ஏற்கனவே செலுத்தி இருக்கும் கட்டணத்தில் டிடிஎச் நிறுவனங்கள் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்றும் டிராய் தலைவர் ஆர்எஸ். ஷர்மா தெரிவித்தார்.

டிராய்க்கு உத்தரவு :
இதற்கிடையே, புதிய கட்டண விதிமுறை தொடர்பான டிராயின் உத்தரவுக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து, மத்திய அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் - விநியோகஸ்தர்கள் இடையிலான வருவாய் பங்கீடு குறித்தும் விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications