இந்திய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா பச்சை கொடி-நடுங்கும் சீனா.!

|

இந்தியா போக்ரானில் அணு குண்டு சோதனை நடத்தப்பட்ட போது, பொருளாதார தடையை விதித்து அமெரிக்கா விதித்தது. இந்தியா அந்த தடையை உத்தரவையும் மீறியும் செயற்கைகோள்களுக்கு தெரியாமலும் இந்தியா சார்பில் மீண்டும் போக்ரானில் அணு குண்டு சோதனை செய்யப்பட்டது.

இந்திய ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா பச்சை கொடி-நடுங்கும் சீனா.!

இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தால், பல்வேறு நாடுகளும் நடுங்கின. இதன் பிறகு பல்வேறு சட்டங்கள் இந்தியாவின் மீது கடுமையாக்கப்பட்டன.

இந்நிலையில், இந்தியா தங்கள் நாட்டை பாதுகாக்கவே இதுபோன்ற சோதனைகளையும் செய்வதாக பல்வேறு முறை அமெரிக்காவிடம் தெரிவித்தது. இந்தியாவால் மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று தெரியவந்ததால், தற்போது அமெரிக்காவால், இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா பச்சை கொடி காட்டியுள்ளது. இதற்கான பரீசீலனை நடந்து கொண்டிருக்கின்றது.

 இந்தியா அணு ஆயுத சோதனை:

இந்தியா அணு ஆயுத சோதனை:

இந்தியாவின் முதல் அணுக்கரு வெடிப்பு சிரிக்கும் புத்தர் எனப்பட்டது. இது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18ல் நிகழ்த்தப்பட்டது. இது இந்திரகாந்தி ஆட்சியின் போது நடத்தப்பட்டது.

அணுக்கரு வெடிப்பு சோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகள் மட்டுமே இதற்கான வல்லமை படைத்த நாடுகளாக கருதப்பட்டு வந்தது.

சபையின் உறுப்பினராக இல்லாத இந்தியா இந்த பரிசோதனைகளை நிகழ்த்தியதை இதர நாடுகள் உறுதி செய்தது. இந்தியா இந்த பரிசோதனைகளை கனடா நாட்டின் அணுமின் உலை தொழில் நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்தியது. இந்த அணுக்கரு வெடிப்பின் பொழுது வெளிப்பட்ட ஆற்றலின் அளவு சுமார் 8 கிலோ டன்கள் என கணக்கிடப்பட்டது.

 2ம் அணு குண்டு சோதனை:

2ம் அணு குண்டு சோதனை:

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது 1998ல் இதே மே 11ம் நாளில், ராஜஸ்தானின் போக்ரான் பாலைவனப் பகுதியி்ல் அணு குண்டு சோதனையை நடத்திக் காட்டினார். அப்போதைய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த அப்துல் கலாம் தலைமையிலான குழு இதனை மிகக் கச்சிதமாக நடத்தியது.

 5 சோதனைகளை நடத்தியது:

5 சோதனைகளை நடத்தியது:

மே 11, மே 13 என இரு நாட்களில் சக்தி 1, சக்தி 2, சக்தி 3, சக்தி 4, சக்தி 5 என மொத்தம் 5 அணு குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஒன்று ‘தெர்மோ நியூக்ளியர் பாம்' எனப்படும் ‘ஹைட்ரஜன் குண்டு'. Nuclear fusion எனப்படும் அணுக்கள் இணைவுச் சோதனை ஒன்றும், Nuclear fission எனப்படும் அணுப் பிளவுச் சோதனை 4ம் என மொத்தம் 5 சோதனைகள்.

அஞ்சாத வாஜ்பாய்:

அஞ்சாத வாஜ்பாய்:

இந்த சோதனைக்கு பிறகு இந்தியாவின் மீது அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்தின. இதற்கு ஒரு போதும் அஞ்சாமல் வாஜ்பாய் தைரியமாக அரசை வழி நடத்தினார். மேலும் தொடர்ந்து அணு குண்டு சோதனைகளை நடத்த முடிவு எடுத்தார்.

நாட்டின் பாதுகாப்பு:

நாட்டின் பாதுகாப்பு:

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்காக இந்தியா சோதனை செய்கின்றது. மற்ற நாடுகளின் மீது அணு ஆயுதங்களை ஒரு போதும் தவறாக கையாளாது என்று என்று ஐநா சபையிடம் இந்தியா கூறியது. இதைத்தொடர்ந்த இந்தியாவும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளையும் வெற்றிகரமாக நடத்தியது.

இந்தியாவின் ஏவுகணைகள்:

இந்தியாவின் ஏவுகணைகள்:

இதைத்தொடர்ந்து இந்தியா அக்னி, அஸ்திரா, ஆகாஷ், இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள், சவுரியா ஏவுகணை, சூரியா தாக்குகணை, தனுஷ் ஏவுகணை, திரிசூல் ஏவுகணை, நாக ஏவுகணை, நிர்பை, பிரகார் ஏவுகணை, பிரமோஸ், பிரித்வி ஏவுகணை, பினாகா ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

டிரம்பு உரை:

டிரம்பு உரை:

அமெரிக்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அதிபர் டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரஷ்யாவுடனான அணு ஏவுகணை ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது சரியானதுதான் என குறிப்பிட்டார்.

 ரஷ்யா மீது குற்றம் சாட்டினார்:

ரஷ்யா மீது குற்றம் சாட்டினார்:

ரஷ்யா தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறிவந்ததாக குற்றஞ்சாட்டிய டிரம்ப், அணு ஏவுகணைகள் தொடர்பான புதிய உடன்படிக்கையை அமெரிக்கா மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

புதிய உடன்படிக்கையில் இந்தியா:

புதிய உடன்படிக்கையில் இந்தியா:

பிருத்வி, அக்னி போன்ற ஏவுகணைகளை இந்தியாவும், பாபர் ஷாகீன் போன்ற ஏவுகணைகளை பாகிஸ்தானும் தயாரித்து இருப்பதை சுட்டிக்காட்டிய டிரம்ப், புதிய உடன்படிக்கையில், இந்தியாவையும், பாகிஸ்தானையும் சேர்க்க சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும் கூறினார்.

சீனாவுக்கு நடுக்கம்:

சீனாவுக்கு நடுக்கம்:

இந்தியாவின் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்க இருப்பதால், இந்தியாவை கண்டு சீனா தற்போது நடுக்கத்தில் இருக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
There Are Possibilities To Add India To The New Nuclear Missile Agreement : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X