யாருமே இதனை உண்மை என்று நம்ப மாட்டர்கள்: ஏரியில் படர்ந்திருக்கும் அதிசய மரம்: வைரல்.!

|

இப்போது கூட பலருக்கும் இயற்கை என்றால் அலாதி பிரியம் தான். அதிலும் நகர வாழ்க்கையில் வசிப்பவர்களுக்கு அதோடு ஒன்றினைந்து வாழ்வது என்பது கனவாகவே உள்ளது. இயற்கையை நேசிக்கும் மக்கள் இப்போது இயற்கையுடன் வாழ முயற்சித்து வருகின்றனர்.

காட்சிகள் நிறைந்து

இயற்கையின் அதிசயம் நம்பமுடியாத வகையில் தான் இருக்கும். அதேபோல் பூமியில் கண்டுபிடிக்கப்படாத அதிசயங்கள் இன்றும்

ஏராளமாக உள்ளன என்று தான் கூறவேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பூமியில் அதிசயம், அழகுகள், ஆச்சரியம் போன்ற அதிகமான இயற்கை காட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன.

பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது என

சில அதிசயங்கள் நம்மை பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது என்றே கூறலாம். அப்படி பிரமிக்க வகையில் ஆஸ்திரேலியாவில்

குயின்ஸ்லாந்து மாகாணத்தில் ககோரா எனும் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியை அனைவரும் ஒரு சாதாரணமான ஏரி என்று தான் நினைத்துள்ளனர். ஆனால் இன்று கற்பனைக்கு எட்டாத வகையில் மிகவும் அதிசயமான ஏரியாக மாறியுள்ளது. அதேசமயம் இந்த ஏரி இருக்கும் இடம் இன்று கண்கவரும் சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி: அம்சம் எல்லாம் ரொம்ப ஒஸ்தி- விலை தெரியுமா?ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி: அம்சம் எல்லாம் ரொம்ப ஒஸ்தி- விலை தெரியுமா?

திக வைரலாகியுள்ளது

அதாவது ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த பிரபலமான புகைப்பட கலைஞர் டெர்ரி மோரோனே என்பவர் கடல், மலை, காடு என அனைத்து இடங்களில் சுற்றி அசத்தலான புகைப்படங்களை எடுத்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 6 மாதமாக ஆஸ்திரேலியாவில் உள்ள ககோரா ஏரியை புகைப்படம் எடுத்து வருகிறார் டெர்ரி மோரோனே. இப்போது இந்த ககோரா ஏரியின் புகைப்படங்கள் தான் சமூக வலைத்தளங்களில் அதிக வைரலாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புரூம்ஸ் கடற்கரை

வெளிவந்த தகவலின்படி, ஆஸ்திரேலியாவின் புரூம்ஸ் கடற்கரை முகப்பில் அமைந்துள்ள ககோரா ஏரி ஆனது பருவங்களின் இயல்புகேற்ப தனது வடிவத்தையும், நிறத்தையும் மாற்றி மாற்றி காண்பிக்கும். இப்போது வறண்டு காணப்படும் இந்த அதிசய ஏரி பார்வையாளர்களின் ரசனையை வெகுவாக ஈர்த்துள்ளது.

உள்ளிட்ட பல்வேறு நிறங்களை

புகைப்பட கலைஞர் டெர்ரி மோரோனே வெளியிட்ட புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது அழகிய மரம் ஒன்று ஏரியில் படர்ந்திருப்பது போல காட்சியளிக்கும். இது பல்வேறு மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பின்பு இந்த ஆறு மாத காலத்தில் கருப்பு, நீலம், பச்சை, கோல்டன் உள்ளிட்ட பல்வேறு நிறங்களை மாற்றியுள்ளது.

கைப்படங்கள் குறித்து டெர்ரி

மேலும் இந்த புகைப்படங்கள் குறித்து டெர்ரி மோரோனே தெரிவித்தது என்னவென்றால், இந்த புகைப்படங்களை காணும் யாருமே இதனை உண்மை என்று நம்ப மாட்டார்கள். ஆனாலும் உலகில் இதுவரை யாரும் காணாத காட்சியை நீங்கள் பார்க்கும்போது இயற்கையின் அதிசயத்தை உணர முடியும் குறிப்பாக பற்றி எரியும் நெருப்பு மரம் போன்று காட்சியளிக்கும் இந்த அசத்தலான ஏரியின் வடிவம் தன்னை பெரிதும் கவர்ந்துவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

News Source: theguardian.com

photo courtesy: Derry Moroney

Most Read Articles
Best Mobiles in India

English summary
The wonder tree that spreads across the Cakora lake: viral on the internet.: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X