சூப்பர் புகைப்படங்களை இலவசமாக டவுண்லோட் செய்ய இங்க வாங்க.!

இலவச புகைப்படங்கள் கிடைக்கும் இணையதளங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

By Siva
|

உலகம் முழுவதும் இணையதளங்கள் மற்றும் இண்டர்நெட்டின் பயன்பாடுகள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் இண்டர்நெட் குறித்த புதுப்புது சட்டங்களும் உருவாகி வருகிறது.

சூப்பர் புகைப்படங்களை இலவசமாக டவுண்லோட் செய்ய இங்க வாங்க.!

குறிப்பாக டிஜிட்டல் காப்பிரைட் உரிமை என்பது தற்போது முக்கியமாக கவனிக்க கூடிய ஒரு அம்சமாக உள்ளது. இண்டர்நெட் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் இதுகுறித்த விழிப்புணர்வை தெரிந்து கொள்வது உங்களை பிரச்சனையில் சிக்கவிடாமல் பாதுகாக்கும்

இமேஜ்கள் என்று கூறப்படும் படங்கள் இண்டர்நெட்டில் மில்லியன் கணக்கில் கொட்டி கிடக்கினது. ஆனால் இந்த இமேஜ்கள் குறித்த காப்பிரைட்ஸ்களை தெரிந்து வைத்து கொள்வது முக்கியம். கட்டிடம் சம்பந்தப்பட்ட ஒரு இணையதளமோ அல்லது வேறு ஏதேனும் துறை சம்பந்தப்பட்ட இணையதளமோ உருவாக்கும்போது அதில் பயன்படுத்த இண்டர்நெட்டில் இருந்து எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

தெரியுமா சேதி-வந்தாச்சு யூட்யூப் டிவி.!

அவ்வாறு எடுத்து புதிய இணையதளங்களில் பயன்படுத்தும்போது, அந்த இமேஜ்கள் காப்பிரைட்ஸ் உள்ளவைகளா என்பதை கவனிக்க வேண்டும்.

ஆனால் எந்த இமேஜ்களுக்கு காப்பிரைட்ஸ் உரிமை உள்ளது எந்த இமேஜ்களுக்கு இல்லை என்பது கண்டுபிடிக்க சிரமமாக இருந்தால் முழுக்க முழுக்க இலவசமாக காப்பிரைட்ஸ் பிரச்சனை இல்லாம வழங்கும் இலவச புகைப்பட இணையதளங்களை நீங்கள் கவலையின்றி பயன்படுத்தி கொள்ளலாம். அவ்வாறான இலவச புகைப்பட இணையதளங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

இலவச இமேஜ்கள் / Stock.Xchng

இலவச இமேஜ்கள் / Stock.Xchng

ஆன்லைனில் கொட்டி கிடக்கும் ஏராளமான இலவச இமேஜ்களை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் செல்ல வேண்டிய இணையதளம் இதுதான். உலகில் பெரும்பாலானோர் இந்த இணையதளத்தின் இமேஜ்களைத் தான் பயன்படுத்துவார்கள்.

இந்த இணையதளத்தில் மிகச்சிறந்த இமேஜ்கள் கோடிக்கணக்கில் உள்ளன. இந்த இணையதளத்தில் 401,700 இமேஜ்களுக்கும் அதிகமாக டேட்டாபேஸில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பெக்ஸெல்ஸ் (வெப்): Pexels (Web)

பெக்ஸெல்ஸ் (வெப்): Pexels (Web)

மிகவும் ஆடம்பரமான மிகச்சிறந்த இமேஜ்களை தேர்வு செய்ய மிகச் சிறந்த இணையதளங்களில் இதுவும் ஒன்று. பல்வேறு இலவச இமேஜ்கள் உள்ள இணையதளங்களை இந்த இணையதளம் ஒருங்கே நமக்கு அளிப்பதால் நமக்கு தேவையான எந்த இமேஜாக இருந்தாலும் இதில் இருந்து எடுத்துவிடலாம்.

இமேஜ்களை தேடுவதும் எளிமை, அதுமட்டுமின்றி மிகச்சிறந்த புதிய புதிய இமேஜ்களை ஜஸ்ட் ஒரு ஸ்குரோலில் பார்க்கலாம்

இந்த இணையதளத்தில் உள்ள இமேஜ்களை டவுன்லோடு செய்யவோ பயன்படுத்தவோ அக்கவுண்ட் ஓபன் செய்து லாகின் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. மேலும் ஒவ்வொரு புகைப்படத்தையும் எதற்காக பயன்படுத்தலாம் என்ற குறிப்பும் இதில் இருப்பதால் தேடுபவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் இணையதளம் ஆகும்

ஐகான் ஃபைண்டர் (Icon Finder)

ஐகான் ஃபைண்டர் (Icon Finder)

உங்களுக்கு தேவையான ஐகான்களை இணையதளத்தில் தேட வேண்டும் என்றால் நீங்கள் வேறு எங்கும் போக வேண்டிய அவசியமே இல்லை. இந்த இணையதளத்தில் உங்களுக்கு எந்தவிதமான ஐகான்களும் நிச்சயம் கிடைத்துவிடும் என்பது உறுதி.

313,000 ஐகான்கள் இந்த இணையதளத்தில் குவிந்து கிடப்பதால் நீங்கள் எந்த ஐகான்களை பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம்தான் வருமே தவிர ஐகான்கள் கிடைக்காத நிலை நிச்சயம் வராது. 1500 பிரிவுகளில் ஐகான்கள் கிடைப்பதால் உங்களுக்கு தேவையான பிரிவில் தேடிக் கொள்ளலாம்.

அவோபிக்ஸ் (AVOPIX)

அவோபிக்ஸ் (AVOPIX)

இமேஜ்கள் அதிகம் அடங்கியுள்ள இணையதளங்களில் ஒன்றுதான் இந்த அவோபிக்ஸ். மேலும் இந்த இணையதளத்தில் இமேஜ்கள் மட்டுமின்றி வீடியோவும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. காப்பிரைட்ஸ் பிரச்சனை இல்லாமல் இந்த இணையதளத்தில் உள்ள இமேஜ்களையும், வீடியோக்களையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

நீங்கள் இந்த இமேஜ்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம், மாற்றி அமைத்து கொள்ளலாம், மற்றவர்களுக்கு ஷேர் செய்து கொள்ளலாம் உங்களுக்கு அனைத்து உரிமைகளும் தரப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் 190000க்கும் அதிகமான இமேஜ்கள் தற்போது உள்ளது. மேலும் அவ்வப்போது ரெகுலராக புதிய புதிய இமேஜ்கள் இதில் கிடைத்து கொண்டே இருக்கும்

500px:

500px:

Flickr இணையதளத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றால் அதற்கு சரியான மாற்ற்தான் இந்த 500px இணையதளம். இந்த இணையதளத்தில் பல்வேறு பிரிவுகளில் எளிதில் தேடும் வகையில் ஆயிரக்கணக்கான இமேஜ்கள் உள்ளது.

உங்களுக்கு எந்த பிரிவில் இமேஜ்கள் வேண்டுமோ அந்த பிரிவை டிராப்டவுனில் செலக்ட் செய்து உங்களுக்கு தேவையான இமேஜ்களை அதில் இருந்து எடுத்து கொள்ளலாம்.

மேலும் இந்த இணையதளத்தில் உள்ள ஒவ்வொரு இமேஜின் லைசென்ஸ் குறித்த தகவல்களும் இதில் அடங்கியிருக்கும். அதை பற்றி தெரிந்து கொண்டு பின்னர் அந்த இமேஜ்களை நீங்கள் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
5 Websites for Royalty Free Stock Photos.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X