மழை பெய்யவைக்க புதுமையான திட்டத்தை பரிசோதிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.!

|

இந்த விஞ்ஞான உலகத்தில் பல்வேறு புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக எதையும் விரைவாகவும் முடிக்கவும் சுலபமாக கையாளும் வகையிலும் இந்த தொழில்நுட்ப சாதனங்கள் உதவுகின்றன.

அதிநவீன ட்ரோன்கள்

அதிநவீன ட்ரோன்கள்

குறிப்பாக இந்த தொழில்நுட்ப வளர்ச்சி தான் கற்பனைகளுக்கு பல்வேறு வடிவம் கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது என்றே கூறலாம். அதன்படி இப்போது வரும் அதிநவீன ட்ரோன்கள் பல்வேறு தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த அதிநவீன ட்ரோன்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது .

சினிமா, காவல், ஊடகம்

சினிமா, காவல், ஊடகம்

ராணுவம், சினிமா, காவல், ஊடகம் போன்ற பல்வேறு துறைகளில் இந்த ட்ரோன்களின் பயன்பாடு மிகவும் அதிகம் என்றே கூறலாம். அதிலும் சிலர் ட்ரோனை பொழுது போக்கு வசதிக்கு என்றே பயன்படுத்தி வருகின்றனர். வானில் பறக்க விட்டு வீடியோ எடுத்து மகிழ்கின்றனர். மேலும், மலையேற்ற பயிற்சிக்கும் இதனை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவரில் திரை மாதிரி இருக்கும்: ஐடெல் அறிமுகம் செய்த 4 மாடல் ஸ்மார்ட் டிவிகள்- விலை ரொம்ப மலிவு!சுவரில் திரை மாதிரி இருக்கும்: ஐடெல் அறிமுகம் செய்த 4 மாடல் ஸ்மார்ட் டிவிகள்- விலை ரொம்ப மலிவு!

 அதிநவீன ட்ரோன்களை

இந்நிலையில் மேகத்துக்குள் அதிநவீன ட்ரோன்களை அனுப்பி ஷாக் கொடுத்து மழை பெய்யவைக்கும் ஒரு தொழில்நுட்பத்தை ஐக்கிய அரபு எமிரேட் பரிசோதிக்க உள்ளது.

மிகவும் எதிர்பார்த்த மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!மிகவும் எதிர்பார்த்த மைக்ரோமேக்ஸ் In 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

100 மில்லி மீட்டர் மழை

100 மில்லி மீட்டர் மழை

அதாவது இந்தியாவில் 100 மில்லி மீட்டர் மழை என்பதே சாதாரணமான ஒன்றுதான். நமது ஊர்களில் இரண்டுமணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே 100 மி.மீ மழை கொட்டித் தீர்த்துவிடும். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு ஆண்டு முழுவதும் பெய்யும் மழையின் அளவே 100 மி.மீ தான் என்று கூறப்படுகிறது.

விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..விண்வெளியில் மூன்று அடையாளம் தெரியாத உயிர் கண்டுபிடிப்பு: என்ன இனம் என்றே தெரியாமல் விஞ்ஞானிகள் குழப்பம்..

லத்தடி நீர்மட்டம் ஆனது குறைந்துகொண்டே செல்வதால்

ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் செயற்கை மழையை வரவைக்க, உப்பை தூவி மழையை வரவைக்கும் கிளவுட் சீடிங் என்ற முறையை பயன்படுத்தி வருகிறது. ஆனாலும் நிலத்தடி நீர்மட்டம் ஆனது குறைந்துகொண்டே செல்வதால் மழையின் அளவை அதிகப்படுத்த புதியமுறையை ஒன்றை பரிசோதிக்க உள்ளது அந்நாடு.

நீர்த்திவளைகள் ஒன்றோடு

khaleejtimes.com தளத்தில் வெளிவந்த தகவலின்படி, அந்த பரிசோதனை என்னவென்றால், மேகங்களுக்குள் ட்ரோன் அனுப்பப்பட்டு ஷாக் கொடுக்கப்படும். அந்த சமயம் மேகத்தில் உள்ள நீர்த்திவளைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பெரிய நீர்த்திவளைகளாக மாறும்.

அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு: ஆர்டர் பண்ணது ஒரு டஜன்.,வந்தது 12-அப்புறமும் பணத்த திரும்ப கேட்கிறாரு?-ஒரு டுவிஸ்ட்அவரே கன்ஃப்யூஸ் ஆகிட்டாரு: ஆர்டர் பண்ணது ஒரு டஜன்.,வந்தது 12-அப்புறமும் பணத்த திரும்ப கேட்கிறாரு?-ஒரு டுவிஸ்ட்

பரிசோதிக்கப்படவுள்ளது

எனவே இதன்மூலம் நீர்த்திவளைகளின் எடை கூடி, மழையாக பூமியில் விழும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தத் திட்டம் குறித்து, இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் பல்வேறு தகவல்களை கூறியுள்ளனர். குறிப்பாக இந்த திட்டம் விரைவில் பரிசோதிக்கப்படவுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
The United Arab Emirates is testing an innovative plan to make it rain: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X