பெஸ்டோ பெஸ்ட்டு.. இந்த போன்களை அடுச்சுக்க ஆளே இல்லை.. மார்ச் மாதத்தில் வாங்க சிறந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்ஸ்..
புது ஸ்மார்ட்போன் வாங்க ஐடியா இருக்கிறதா? ஆனால், எந்த போனை தேர்வு செய்வதென்று குழப்பமாக இருக்கிறதா? லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் எது? அதில் எது பெஸ்டான ஸ்மார்ட்போன் (best smartphone) சாதனம் என்று தெரியாமல் தவிப்பவர்களுக்கு இந்த பதிவு கைகொடுக்கும்.
லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் மிகவும் சமீபத்தில் வெளியான ஸ்மார்ட்போன் மாடல்கள் என்பதாகும். மிகவும் சமீபத்தில் என்று நாம் எடுத்துக்கொள்கையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட்போன் சாதனங்களை தான் நாம் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் பல புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை முன்னணி பிராண்டுகளான ஒப்போ (Oppo), விவோ (Vivo), ஒன்பிளஸ் (OnePlus), சியோமி (Xiaomi), ஹானர் (Honor), மற்றும் iQOO போன்ற பிராண்டுகள் அறிமுகம் செய்துள்ளன. இதில் இருந்து வெளி வந்துள்ள ஆக சிறந்த பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் எது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
பட்ஜெட் மற்றும் பிரீமியம் விலையுடன் சிறந்த அம்சங்களை பேக் செய்து, பிப்ரவரியில் அறிமுகமான பெஸ்ட் ஸ்மார்ட்போன் பட்டியலில் இருக்கும் சிறந்த சாதனங்களாக
1. ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro)
2. ஹானர் எக்ஸ்9b (Honor X9b)
3. டெக்னோ போவ 6 ப்ரோ (Tecno POVA 6 Pro)

4. ஹானர் மேஜிக் 6 ப்ரோ (Honor Magic 6 Pro)
5. சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra)
போன்ற சாதனங்கள் பெஸ்டான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்களாக இடம்பெற்றுள்ளன. சரி, இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன்களில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறுகின்றன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
1. ஐகியூஓஓ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro)
- 6.78" இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- 144 Hz ரெஃப்ரஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்
- 8GB + 256GB மற்றும் 12GB + 256GB UFS 4.0 ஸ்டோரேஜ்
- 50MP + 8MP டூயல் கேமரா
- 16MP கேமரா
- 5,160mAh பேட்டரி
- 120W பாஸ்ட் சார்ஜிங்
- விலை ரூ.35,999
2. ஹானர் எக்ஸ்9b (Honor X9b)
- 6.78" இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே
- 120 Hz ரெஃப்ரஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்
- 8GB + 256GB ஸ்டோரேஜ்
- 108MP + 5MP + 2MP ட்ரிபிள் கேமரா
- 16MP கேமரா
- 5,800mAh பேட்டரி
- 35W பாஸ்ட் சார்ஜிங்
- விலை ரூ. 25,999

3. டெக்னோ போவ 6 ப்ரோ (Tecno POVA 6 Pro)
- 6.78" இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- 120 Hz ரெஃப்ரஷ் ரேட்
- மீடியாடெக் டைமென்சிட்டி 6080 சிப்செட்
- 12GB + 256GB ஸ்டோரேஜ்
- 50MP + 108MP + 50MP ட்ரிபிள் கேமரா
- 50MP கேமரா
- 5,600mAh பேட்டரி
- 80W சார்ஜிங்
- விலை ரூ. 14,999
4. ஹானர் மேஜிக் 6 ப்ரோ (Honor Magic 6 Pro)
- 6.8" இன்ச் Full HD+ AMOLED டிஸ்பிளே
- 120 Hz ரெஃப்ரஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்
- 12GB + 512GB மற்றும் 12GB + 256GB UFS 4.0 ஸ்டோரேஜ்
- 50MP + 8MP டூயல் கேமரா
- 16MP கேமரா
- 5,160mAh பேட்டரி
- 120W பாஸ்ட் சார்ஜிங்
- விலை ரூ.1,16,000
5. சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra)
- 6.8" இன்ச் QHD+ LTPO OLED டிஸ்பிளே
- 120 Hz ரெஃப்ரஷ் ரேட்
- ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்
- 16GB + 1TB UFS 4.0 ஸ்டோரேஜ்
- 50MP + 50MP + 50MP கேமரா
- 32MP கேமரா
- 5,300mAh பேட்டரி
- 90W சார்ஜிங்
- விலை ரூ.74,999


Click it and Unblock the Notifications








