Home
News

தொலைந்துபோன லக்கேஜ்: கண்டுபிடிக்க விமான நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய் நபர்.!

பயணத்தின்போது தொலைந்துபோன பையை கண்டுபிடிக்க பொறியாளர் ஒருவர் இண்டிகோ விமான நிறுவனத்தின் இணையதளத்தை ஹேக் செய்து இருக்கிறார். மேலும் இதுசார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை

அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை பாட்னாவிலிருந்து பெங்களூருவுக்கு இண்டிகோ விமானம் மூலம் நந்தன் குமார் என்ற மென்பொறியாளர் பயணம்செய்துள்ளார். அந்தசமயம் பெங்களூரு விமான நிலையத்தில், மற்றொரு பயணியிடம் இவரது பை மாறி சென்றுள்ளது.

நந்தகுமார் வீட்டிற்கு சென்ற பிறகுதான்,

குறிப்பாக நந்தகுமார் வீட்டிற்கு சென்ற பிறகுதான், பைமாறிபோனது குறித்து தெரியவந்துள்ளது. அதன்பின்பு இண்டிகோ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்களிடம் தனது பை மாறியது குறித்த தகவல்களை எடுத்துக் கூறியுள்ளார்.

பு உடனே இண்டிகோ நிறுவனம் தரப்பில்

பின்பு உடனே இண்டிகோ நிறுவனம் தரப்பில் அந்த வாடிக்கையாளரை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லைஎன்று தெரிகிறது. மேலும் அந்த நபரின் விவரங்களை தனக்கு தந்து உதவுமாறு அவர் இண்டிகோ நிறுவனத்திடம் வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் தரவு
பாதுகாப்பு, தனியுரிமையை காரணம் காட்டி அந்த பயணியின் விவரங்களை தர மறுத்துள்ளனர்.

மீண்டும் அவரை தொடர்பு

அதேபோல் மீண்டும் அவரை தொடர்பு கொள்வோம் என்று இண்டிகோ வாடிக்கையாளர் பராமரிப்பு மையம் உறுதி அளித்து அழைப்பை துண்டித்துள்ளது. ஆனாலும் சொன்னபடி அவர்கள் மீண்டும் தொடர்பு கொள்ளவே இல்லை. மேலும் தனது பிரச்சனைக்கு நிறுவனம் எந்த தீர்வும் காணவில்லை என்று நினைத்து, தனது பிரச்சனையை தானே தீர்த்துக்கொள்ள அவர் களமிங்கியுள்ளார்.

 விவரங்க

அதாவது சக பயணியின் பையில் இருந்த பின்ஆர் விவரங்கள் மூலம் இண்டிகோ இணையதளத்தை ஆராய்ந்து, வருகை பதிவு செய்தல், விவரங்களை புதுப்பித்தல், முன் பதிவை திருத்துதல் போன்ற பல முறைகளை கையாண்டுள்ளார். இருந்தபோதிலும் அவரின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரகிறது. பின்பு இறுதியாக இணையதளத்தை உருவாக்குபவரின் கட்டுப்பாட்டு தளத்திற்கு சென்று பயணிகளின் வருகை பதிவை ஆராய்ந்து, கடைசியாக பையை எடுத்த சென்ற பயணியின் இ-மெயில், மொபைல் எண்ணை கண்டுபிடித்துள்ளார். பின்பு அவரை தொடர்பு
கொண்டு நேரில் சந்தித்து பையை மாற்றி உள்ளார்.

விளக்கம்

மேலும் நடந்ததை குறித்து நந்தன் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பின்பு இது வைரலான நிலையில் இதற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், ரகசியமான தரவுகளை பாதுகாப்பதில் மிகவும் கவனமாகவும், உறுதியாகவும் உள்ளோம். நந்தன் குமார் இணையதளத்தைஹேக் செய்யவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
The techie who hacked the website to find the lost luggage: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X