ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் எலக்ட்ரானிக்கு பொருட்கள் விலை 7 % உயர்வு.!

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது குறித்து அரசாங்கம் அச்சப்பட தேவையில்லை என்று கூறினாலும், தற்போது, விலை உயர்வு 7 சதவீதமாக உயர்ந்து பொது மக்களின் வயிற்றியில் புளியை கரைத்துள்ளது.

|

இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால், தற்போது அடுத்த மாதம் முதல் வீட்டு உபயோக பொருட்களான டிவி, பிரிட்ஜ், ஏசி, வாசிங்மெஷின் உள்ளிட்ட மின்னனு சாதனங்களின் விலை உயர்த்தப்படுகின்றது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் எலக்ட்ரானிக்கு பொருட்கள் விலை 7 % உயர்வு.!

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது குறித்து அரசாங்கம் அச்சப்பட தேவையில்லை என்று கூறினாலும், தற்போது, விலை உயர்வு 7 சதவீதமாக உயர்ந்து பொது மக்களின் வயிற்றியில் புளியை கரைத்துள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் விலை உயர்வு ஒருபுறம் நம்மை பாடாய் படுத்துகின்றது. இந்நிலையில் இதுவும் பெரும் சோதயைக அமைந்துள்ளது.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி:

ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை 70.06 ஆகக் கடுமையாகச் சரிந்தது. துருக்கியில் நிலவி வரும் ஸ்திரமற்றத் தன்மையே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் எனக் கூறப்படும் நிலையில், இந்தச் சரிவு குறித்து அச்சப்படத் தேவையில்லை என பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திரா கார்க் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்திய மதிப்பு சரிவு:

ஏற்கனவே இந்திய மதிப்பு சரிவு:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது மற்றும் அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில மாதங்களாகவே டாலருக்கான தேவை அதிகரித்து வந்தது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களாகவே சரிவைச் சந்தித்து வந்தது.

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு:

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு:

அந்நியச் செலவாணி சந்தையில் திங்கள்கிழமையன்றே, ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில், 69.91 ஆக சரிந்து, பின்னர் ஓரளவுக்கு மீண்டு, மாலை வர்த்தகம் நிறைவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 69.92 ஆகக் காணப்பட்டது.

 வீட்டு உபயோக பொருட்கள் விலை உயர்வு:

வீட்டு உபயோக பொருட்கள் விலை உயர்வு:

ரூபாய் மதிப்பு சரிவு, இறக்குமதிக்கான சுங்க வரி உயர்வு போன்ற காரணங்களால் பொருட்களின் தயாரிப்பு செலவு அதிகரித்து லாபம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை சரிகட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் சில ஏற்கனவே பொருட்களின் விலையை உயர்த்தி விட்டன.

7 % விலை உயர்வு:

7 % விலை உயர்வு:

தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப 5 முதல் 7 சதவீதம் வரை தங்களது தயாரிப்பு பொருட்களின் விலை அடுத்த மாதம் முதல் உயர்த்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பேனசோனிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போன்று ஹயர், கோத்ரேஜ் நிறுவனங்களும் விலை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.

மக்கள் வயிற்றில் புளி:

மக்கள் வயிற்றில் புளி:

ஹோம் அப்லையன்ஸ் பொருட்கள், மற்றொரு புறம் தங்கம், வெள்ளி, நாளுக்கு நாள் அதிரிக்கும் பெட்ரோல், ஜிஎஸ்டிஎஸ்டி உள்ளிட்டவைகளால் பொருட்களின் மீதுதான வரி உயர்ந்துள்ளது.

இதனால் பொது மக்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது போல் ஆகிவிட்டது. எவ்வாறு பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைக்க வேண்டிய சூழ்நிலையில், குடும்ப பட்ஜெட்டும் ஒருபுறம் இழுத்து அடிக்கின்றது தான் வேதனையாக இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
The price of goods for the electronics rises by 7person : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X