Home
News

இனி ஆன்லைனில் வாங்கும் ஆடைகளை சரியான அளவில் வாங்கலாம்.!

எதிர்காலத்தில் புகழ்பெற்ற சேவைகளில் ஆன்லைன் பேசன் ரீடைல் வர்த்தகமும் என்பதை அறிந்ததால் 'சோசோ சூட்' என்ற பாடிசூட் மூலம் அளவெடுக்கும் சேவையான 'மேட் டூ மெசர்' என்னும் வசதியை வைத்துள்ளது.

By Vivek Sivanandam

ஜப்பானிய ஆன்லைன் பேசன் ரீடைலரான சோசோ நிறுவனம், ஆடைகளை போல்கா டாட் பாடிசூட்ஸ் மூலம் அளவெடுப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான அளவுகளை அப்லோட் செய்யவதன் மூலம் கச்சிதமான ஆடைகள் வாங்க முடியும் என கூறியுள்ளது.

இனி ஆன்லைனில் வாங்கும் ஆடைகளை சரியான அளவில் வாங்கலாம்.!

அதிகாரப்பூர்வமாக ஸ்டார்ட் டுடே கோ லிட் என்று அழைக்கப்படும் இந்த சோசோ நிறுவனம் ,ஜப்பானின் பிரபல ஷாப்பிங் இணையதளமான சோசோடவுன் மூலம் பல்வேறு ப்ராண்டுகளின் ஆடைகளை விற்கிறது.

எதிர்காலத்தில் புகழ்பெற்ற சேவைகளில் ஆன்லைன் பேசன் ரீடைல் வர்த்தகமும் என்பதை அறிந்ததால் 'சோசோ சூட்' என்ற பாடிசூட் மூலம் அளவெடுக்கும் சேவையான 'மேட் டூ மெசர்' என்னும் வசதியை வைத்துள்ளது.

ஜூலை மாத இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு மில்லியன் சோசோசூட்களை அனுப்பும் பணியில் இந்நிறுவனம் ஈடுபட்டுவரும் நிலையில், தயாரிப்பு தாமதம் மற்றும் அதிக விலையால் முதல் முயற்சி தடைப்பட்ட நிலையில் இது இரண்டாவது முயற்சி எனக் கூறுகிறார் அந்நிறுவனத்தின் சி.ஈ.ஓ யூசாகு மஷாவா.

இனி ஆன்லைனில் வாங்கும் ஆடைகளை சரியான அளவில் வாங்கலாம்.!

இந்த தோலுக்கு இறுக்கமான போல்கா டாட் சோசோசூட்-ஐ அணிந்து புகைப்படம் எடுப்பதன் மூலம், பயனர்கள் அதனுடன் இணைந்த செயலியின் வாயிலாக உடல் அளவுகளை பதிவேற்றம் செய்யமுடியும். கச்சிதமான உடல் அளவுகளைக் கொண்டு சரியான அளவுள்ள உடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியும்.

முழு உடல் குறிப்பு கண்டறியும் அமைப்பை வைத்துள்ள சோசோசூட், 300 முதல் 400 மார்கர்களை கொண்டுள்ளது. இதற்கு முந்தைய ஒன்று நீடிக்கும் சென்சார் அமைப்பை கொண்டது.ஸ்மார்ட்போன் கேமரா மூலம் சூட் முழுவதும் உள்ள டாட் மார்க்கர்களை 360 டிகிரி கோணத்தில் படம்பிடிப்பதன் மூலம், இந்த பாடிசூட் கச்சிதமான அளவுகளை எடுக்கிறது.

'மனிதர்கள் ஆடைகளை தேர்ந்தெடுத்த காலம் மாறி, ஆடைகள் மனிதர்களை தேர்வுசெய்யும் புதிய சகாப்தம் இது' என்கிறார் மஷாவா.பிஸ்னஸ் சூட் மற்றும் பார்மல் சர்ட்களுக்காக இது ப்ரைவேட் க்ளாத்திங் லைனில் சேர்க்கப்பட்டு வரும் செவ்வாய்கிழமை முதல் ஆர்டர்கள் எடுக்கப்படும் என சோசோ கூறியுள்ளது.

இந்த சூட்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் 197.60 டாலர் என்ற விலையிலும், சாதாரணமாக 359.99 டாலர் என்ற விலையிலும் கிடைக்கும்.இந்த சோசோசூட் மற்றும் சில ப்ரைவேட் க்ளாத்திங் வகைகள் ஜப்பானுக்கு வெளியே 72 நாடுகளில் கிடைக்கிறது.வெளிநாடுகளில் வர்த்தக்கை அதிகரிப்பதன் மூலம் தான் ப்ரைவேட் க்ளாத்திங் துறையில் வெற்றி பெற முடியும் என்கிறார் மஷாவா.

Best Mobiles in India

English summary
The polka dot smart bodysuit that could ensure clothes you buy online fit perfectly every time: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X