நடுக்கத்தில் அமெரிக்காவின் பென்டகன், மிரட்டும் ரஷ்ய - சீன 'கூட்டணி'..!

Written By:

பென்டகன் (The Pentagon) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ராணுவத் தலைமையகமாகும் (Headquarters of the United States Department of Defense). இதவெர்ஜீனியாவின் ஆர்லிங்டனில் உள்ளது. பரப்பளவு அடிப்படையில் காணும்போது உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் இதுவும் ஒன்றாகும்.

அப்படியான பென்டகனில், தற்போது பதற்றமான ஒரு சூழ்நிலை நிகழ்கிறது. அதற்கு காரணமாக இருப்பது ரஷ்யாவும், சீனாவும் தான். மேலும் இது சார்ந்த தகவல்களை கீழ்வரும் ஸ்லைடர்களில் காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஸ்டீபன் ஹோக்கிங் :

ஸ்டீபன் ஹோக்கிங் :

கோட்பாட்டு இயற்பியலாளரான ஸ்டீபன் ஹோக்கிங், மனித இனமும் உலகமும் அழிய செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பட்ட மிகவும் விபரீதமான ரோபோட்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று சமீபத்தில் எச்சரிததுள்ளது குறிப்பிடத்தக்கது.

கில்லர் ரோபோட் :

கில்லர் ரோபோட் :

இருப்பினும் கூட மிகவும் தன் ஆளுகைக்கு உட்பட்ட செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட ரோபோட்கள் உருவாக்கம் செய்யப்படுவது குறைந்தபாடில்லை. முக்கியமாக சீனாவும் ரஷ்யாவும் 'கில்லர் ரோபோட்'களை தயாரித்துக்கொண்டே இருக்கின்றன.

வெளிப்படை :

வெளிப்படை :

ரஷ்யாவை பொருத்தமட்டில் மிகவும் வெளிப்படையான முறையில் கில்லர் ரோபோட்ஸ்களை ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருகிறது என்று அமெரிக்க பாதுகாப்பு தேசிய மையத்தின் பாதுகாப்பு செயலாளர் ஆன ராபர்ட் வொர்க் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளர்ச்சி :

வளர்ச்சி :

மேலும் மனித இனமானது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) சார்ந்த வளர்ச்சியில் 'மாறுபட்டு போகுதல்' என்ற புள்ளியில் உள்ளது என்றும் ராபர்ட் வொர்க் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

சீனா முதலீடு :

சீனா முதலீடு :

மேலும், சீனா ஏற்கனவே ரோபோட்டிக்ஸ் மற்றும் சுயாட்சி (robotics and autonomy) சார்ந்த விடயங்களில் அதிகமாக முதலீடு செய்து கொண்டே வருகிறது என்பதையும் வொர்க் சுட்டிக் காட்டியுள்ளார்.

ரஷ்யா தயார் :

ரஷ்யா தயார் :

சமீபத்தில் ரஷ்யா முழுக்க முழுக்க இயந்திரத்தனமான போர் களத்திற்கு நாங்கள் தயார் என்றும், விரைவில் இயந்திரங்கள் மட்டுமே தலைமை தாங்கும் யுத்தம் நடக்கும் சாத்தியம் உண்டு என்றும் கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

முன்மாதிரி :

முன்மாதிரி :

மேலும் இன்னும் 1 முதல் 2 ஆண்டுகளில் அர்மாடா டி-14 போன்ற வருங்கால ஆயுதங்களின் முன்மாதிரிகளை காண்பிக்க இருப்பதாக ரஷ்யா வெளிப்படையாக கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வல்லமை :

வல்லமை :

இவ்வகையான ஆயுதங்கள் ஆனது எந்த விதமான மனித உதவியும் எதிர்பார்க்காது இலக்கை தேர்வு செய்து மற்றும் அதை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவைகள் ஆகும்.

பீஜிங் 2015 :

பீஜிங் 2015 :

ரஷ்யாவைப் போலவே சீனா, முடிவு பெற்ற பீஜிங் 2015 உலக ரோபோ மாநாட்டில் தனது ரோபோட் படை பற்றிய தகவலை முதல் முறையாக வெளியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கலக்கத்தில் பென்டகன் :

கலக்கத்தில் பென்டகன் :

தகவலின்படி சீனாவின் கில்லர் ரோபோட்கள் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ஏவுகணை மற்றும் துப்பாக்கிகள் ஆகியவைகளை பிரயோகிக்க வல்லது என்று தங்களது புதிய எதிரியை பற்றிய கலக்கத்தில் உள்ளது பென்டகன்.

ஆதிக்கம் :

ஆதிக்கம் :

இதன் மூலம் இயந்திர கற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் அமெரிக்க ராணுவம் அதிக ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று பென்டகன் அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
The Pentagon is Nervous about Russian and Chinese Killer Robots. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot