Home
News

ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ உங்களின் அடுத்த ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆக இருக்கலாம்! ஏன் தெரியுமா?

ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ உங்களுக்கானதாக இருக்கலாம்! ஏன் தெரியுமா?

நிலையான சுற்றுச்சூழலுக்காக, அரிதான பூமியின் பொருட்களை பயன்படுத்துவதை உணர்வுபூர்வமாக தவிர்க்கும் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியை நாம் எத்தனை முறை சந்தித்திருக்கிறோம்? கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் இல்லை. எப்போதாவது அப்படி ஒரு தயாரிப்பு வெளிவருகிறது, அது காலநிலை மாற்றத்திற்கு மேலதிக துயரங்களை சேர்க்காமல் தொழில்நுட்பத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதை முழுமையாக மறுபரிசீலனை செய்கிறது.

உதாரணமாக, இதோ ஒப்போ என்கோ ஏர்3 ப்ரோ, இந்த ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது இயற்கை மூங்கில் ஃபைபர் டயாஃபிரமை பயன்படுத்துகிறது, இது ட்ரைவர் பிளேட்ககளில் உள்ள, பெறுவதற்கு கடினமான டைட்டானியத்தின் இடத்தை மாற்றுகிறது. அதுவும், ஆடியோ வெளியீட்டில் சமரசம் செய்யாமல்! உண்மையில், இதே வரம்பில் உள்ள மற்ற இயர்பட்களுடன் ஒப்பிடுகையில் இது நன்றாகவே ஒலிக்கிறது.

நாங்கள் வழக்கமாக செய்வதை விட அதிக சோதனை ஓட்டங்களை செய்துள்ளோம், ஏனெனில் ஒப்போ ஆடியோ தயாரிப்புகளின் என்கோ சீரீஸ் நீண்ட காலமாக வயர்லெஸ் ஆடியோவில் சிறந்த தயாரிப்புகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த புதிய மாடல் அதன் முன்னோடிகளையும் கூட வீழ்த்துவது போல் உள்ளது.

என்கோ ஏர்3 ப்ரோ ஆனது இந்த விலைப்பிரிவில் நாங்கள் பயன்படுத்திலேயே ஏன் ஒரு சிறந்த ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்களில் ஒன்றாகும் என்பதை பற்றி பேசுவதற்கு முன், இந்த "முதல் வகை" தொழில்நுட்பத்தை பற்றி நாங்கள் உங்களுடன் சில விஷயங்களை பகிர விரும்புகிறோம்.

உலகின் முதல் மூங்கில் இழை டயாஃபிரம்

ஒப்போ என்கோ ஏர்3 ப்ரோ ஆனது உலகின் முதல் இயற்கை மூங்கில்-ஃபைபர் டயாஃபிரமுடன் வருகிறது, இது பண்டைய மூங்கில் காகித தயாரிப்பு செயல்முறையால் ஈர்க்கப்பட்டது. மூங்கில் நார் ஒரு நுணுக்கமான செயல்முறையின் மூலம் பிரித்தெடுக்கப்பட்டு, சீரான தடிமனான மற்றும் துளையிடுதலை எதிர்க்கும் செதில்களாக அழுத்தப்படுகிறது. வழக்கமான டைட்டானியம் பூசப்பட்ட டயாஃபிரம்களுடன் ஒப்பிடும் போது, ​​ஒப்போவின் ஆய்வக தரவின்படி, இது இயற்கை ஒலியை சிறப்பாக மீட்டமைக்கும், குறிப்பாக ஹை ஃபிரெக்வென்சி வரம்புகளில், அவை ஒருடயாஃபிரமாக வடிவமைக்கப்படுகின்றன, இது மென்மையான மற்றும் கவர்ச்சியான ஒலியை வெளிப்படுத்துகிறது.

ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ உங்களுக்கானதாக இருக்கலாம்! ஏன் தெரியுமா?

என்கோ ஏர்3 ப்ரோ ஆனது நேர்த்தியாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும். மூங்கில் ஃபைபர் டயாஃபிரமின் முழுத் திறனையும் வெளிகொணர, என்கோ மாஸ்டர் ட்யூனிங் குழுவால் செய்யப்பட்ட நேச்சுரல் இன்ஸ்பிரேஷன் ப்ரீசெட்டை ஆக்டிவேட் செய்யவும்.

எங்களுடைய கேட்கும் அனுபவத்தை உயர்த்திய மற்றொரு அம்சம், ஹை ஃபிரெக்வென்சியில் இயற்கையான மற்றும் தெளிவான ஒலிகளை வழங்க மூங்கில் இழை டயாஃபிரமுடன் இணைந்து செயல்படும் புதுமையான இன்டர்னல் சவுண்ட் கேவிட்டி ஆகும். உண்மையில், இதன் ரியர் கேவிட்டி ஆனது பாஸ் நோட்களை அட்டகாசமானதாக மாற்ற ஒரு பாஸ் கன்டன்சர் டிசைனையும் கொண்டுள்ளது.

ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ உங்களுக்கானதாக இருக்கலாம்! ஏன் தெரியுமா?

உங்கள் இசையை அதிகம் கேளுங்கள்

இந்த ஒலி மேம்படுத்தல்கள் ஆனது என்கோ ஏர்3 ப்ரோவை ஹை-ரெஸ் லாஸ்லெஸ் ஆடியோவை ஆதரிக்கும் திறன் கொண்டவைகளாக, ஒலி செயல்திறனுக்காக எச்டபிள்யூஏ கோல்டுடிற்கு இணக்கமாகதாக இருக்க செய்கிறது. மேலும் 990கேபிபிஎஸ் வரை ஆடியோ டிரான்ஸ்மிஷனை ஆதரிக்கும் எல்டிஏசி என்கோடர் உதவியுடன், இது பாரம்பரிய எஸ்பிசி என்கோராடரை விட மூன்று மடங்கு வேகமாகவும் உள்ளது. இவைகள் உங்கள் இசையில் உள்ள ஒவ்வொரு சிறிய விவரத்தையும் பாதுகாக்க உதவுகிறது.

இந்த டிவைஸை செட் செய்யும் போது, மிகவும் சிறிய சோதனையிலேயே சிறந்த செவிவழி அனுபவத்தை உணர முடிகிறது. இது யூஸர் ஸ்பெசிஃபிக் இயர் கேனல் மாடலை உருவாக்குகிறது, அதாவது இது காலப்போக்கில் மாறும் மற்றும் மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட கேட்கும் அனுபவத்தை வழங்கும்.

உயிர்ப்புள்ள ஸ்பேஷியல் ஆடியோவை கொண்டு வாருங்கள்

உங்கள் காதுகளுக்குள் பொருந்தியதும், என்கோ ஏர் 3 ப்ரோ ஆனது ஒப்போ அலைவ் ஆடியோவை செயல்படுத்தப்படுகிறது. இது ஒரு ஸ்பேஷியல் சரவுண்ட் சவுண்ட் எஃபெக்டில், ஸ்டீரியோஸ்கோபிக் செப்ரெஷன் உடன், உண்மையான சரவுண்ட் சவுண்ட் உணர்வை உருவாக்குகிறது. ஒப்போ போனுடன் இணைக்கப்பட்டிருக்கும் போது, இதன் அலைவ் ஆடியோ அம்சத்தை ஸ்பேஷியல் ஆடியோ அல்காரிதத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க முடியும். இது எங்களுக்கு இன்னும் ஆழமான இசை அனுபவத்தை உருவாக்கியது.

ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ உங்களுக்கானதாக இருக்கலாம்! ஏன் தெரியுமா?

இது போன்ற அனுபவம், தேவையற்ற சத்தம் மற்றும் கவனச்சிதறல்களிலிருந்து விலகி இருக்க உதவும். இதனால்தான் ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ ஆனது டியுவி ரெயின்லேண்ட்டால் சான்றளிக்கப்பட்ட 49டிபி அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை ஆதரிக்கிறது. இது உங்கள் சுற்றுப்புறத்தைப் பொறுத்து சத்தத்தை குறைக்கும், அளவை தானாகவே சரிசெய்கிறது.

உதாரணமாக, பாதகமான வானிலையின் போது காற்றின் இரைச்சலை குறைக்க ஏர் நாய்ஸ் கேன்சலேஷன் அல்காரிதம் உள்ளது. கூடவே இதில் சுற்றுப்புற ஒலிகளை மேம்படுத்தும் டிரான்ஸ்பிரன்சி மோட் உள்ளது, இது சுற்றுப்புறத்தில் கவனம் செலுத்த விரும்பும் போதும் அல்லது யாரேனும் பேசுவதை கேட்க வேண்டும் என்கிற போதும் உதவும். இதற்கிடையில், இந்த நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் உங்கள் இசை அல்லது தொலைபேசி அழைப்புகளில் கவனம் செலுத்த விரும்பும் போதும் கூட சுற்றுப்புற இரைச்சலை குறைக்கும்.

ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ உங்களுக்கானதாக இருக்கலாம்! ஏன் தெரியுமா?

சிறிய விவரங்களும் முக்கியம்

டிடபுள்யூஎஸ் பிரிவானது சிறிய வடிவங்களில் வியக்கவைக்கும் ஆடியோவை வழங்கும் தயாரிப்புகளை வழங்கி வருகின்றன. ஆனால் இந்த தயாரிப்புகளில் பெரும்பாலானவை தடுமாறும் இடத்தில், என்கோ ஏர்3 ப்ரோ ஆனது ஜொலிக்கிறது. என்கோ ஏர் 3 ப்ரோவை ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இணைக்க முடியும், இது ஒரு டிவைஸில் இருந்து டிஸ்கனெக்ட் செய்து மற்றொரு டிவைஸ் உடன் இணைக்கும் தொந்தரவு இல்லாமல் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு எளிமையாக மாற அனுமதிக்கிறது. இதன் மூலம் ஒரு டிவைஸில் ம்யூசிக் அல்லது வீடியோவை எளிதாக பிளே / பாஸ் / மியூட் செய்யலாம், பின்னர் மற்றொன்றில் மீண்டும் பிளே செய்யலாம். ஏனென்றால் ஏர்3 ப்ரோ ஆனது மிகவும் தடையின்றி தானாகவே மாறுகிறது.

ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ உங்களுக்கானதாக இருக்கலாம்! ஏன் தெரியுமா?

மேலும் இந்த இயர்பட்ஸில் ப்ளூடூத் 5.3 ஆதரவும் உள்ளது. இது 47எம்எஸ் இயர்போன் லேட்டன்சி மற்றும் 94எம்எஸ் எண்ட்-டு-எண்ட் லேட்டன்சியுடன் கேம்களை முழுவதுமாக அதிவேகமாக்குகிறது.

என்கோ ஏர்3 ப்ரோ வெறும் 10 நிமிட சார்ஜிங் மூலம் சுமார் 2 மணிநேரம் பிளே டைமை எங்களுக்கு வழங்கியது. இதை தொடர்ச்சியாக 7 மணிநேரங்கள் பயன்படுத்த முடியும்; மேலும் இதன் சார்ஜிங் கேஸில் இருந்து 30 மணிநேரம் கிடைக்கும். வடிவமைப்பை பொறுத்தவரை இது உண்மையிலேயே வானத்தில் இருக்கும் மேகங்களை போன்ற ஒரு கிரேடியன்ட் டிசைனை பெற்றுள்ளது. இதன் சார்ஜிங் கேஸும் ஒரு நல்ல அக்சஸசெரியாக உள்ளது.

இதன் ஸ்டெம்ஸ் மிகவும் சிறியதாகவும், கச்சிதமாகவும் தோற்றமளிக்கின்றன, மேலும் இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி55 சான்றிதழையும் பெற்றுள்ளன. மழை அல்லது வெயில் என எதுவாக இருந்தாலும் இது அதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன!

ஒப்போ என்கோ ஏர் 3 ப்ரோ உங்களுக்கானதாக இருக்கலாம்! ஏன் தெரியுமா?

சுருக்கமாக, ஒப்போ என்கோ ஏர்3 ப்ரோவின் ஒலி எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம். இது சரியான நோட்களை வழங்குவது மட்டுமின்றி - மூங்கில் ஃபைபர் டயாஃபிரம், அடாப்டிவ் ஏஎன்சி, எல்டிஏசி சப்போர்ட் - மல்டி டிவைஸ் ஆதரவு, ஸ்பேஷியல் சர்ரவுண்ட் அல்காரிதம்கள் மற்றும் லோ லேட்டன்சி ஸ்ட்ரீமிங் போன்ற சிறந்த விஷயங்களையும் தன்வசம் கொண்டுள்ளது. இது ஒரு முழுமையான பேக்கேஜ் ஆகும், மேலும் இது குறைந்த செலவில் நேர்த்தியான கேட்கும் அனுபவத்தையும் வழங்குகிறது. அதனால்தான் இது உங்களின் அடுத்த டிடபுள்யூஎஸ் ஆக இருக்கலாம் என்று நாங்கள் கூறுகிறோம்!

என்கோ ஏர்3 ப்ரோவின் விலை ரூ.4999 ஆகும் மற்றும் இது இன்றுதான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது பிளிப்கார்ட், அமேசான், ஒப்போ ஸ்டோர் மற்றும் மெயின்லைன் ரீடெயில் ஸ்டோர்களின் வழியாக வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
The OPPO Enco Air3 Pro With its Bamboo Fibre Diaphragm Should be Your Next TWS
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X