வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி எதிரொலி: டெலிகிராம் செயலிக்கு அடித்தது ஜாக்பாட்.!
வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களை அதன் புதிய ஒப்புதல் விதிகளுக்குக் கட்டாயம் ஒப்புதல் வழங்கியாக வேண்டும் என்று வற்புறுத்தியதன் காரணமாக, உலகளவில் உள்ள பல வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது வாட்ஸ்அப் பயன்பாட்டை நிராகரித்து சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற பிற மெசேஜ்ஜிங் ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

மேலும் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக சிக்னல் செயலியை பயன்படுத்த எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.அதாவது வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனைகளும், ரகசிய காப்பு விதிகளும் வரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தனிநபர் பாதுகாப்பு, தனிநபர் தகவல்கள், தனி உரிமை ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் வாட்ஸ்அப் இநந்த புதிய பிரைவேசி பாலிசி தனிநபர் பாதுகாப்புக்கு எதிரானது அல்ல என்றும் தனி நபர் தகவல்கள் யாருடனும் பகிரப்படாது என்று விளக்கம் அளித்தது. குறிப்பாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆனாலும் மக்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவதை தவிர்த்து, டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட செயலியை பயன்படுத்துவதை துவங்கி விட்டனர். குறிப்பாக பெரும் தலைவர்கள், தொழிலதிபர்கள் என பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் டெலிகிராம், சிக்னல் செயலிகளை பயன்படுத்த சொல்லி ஆலோசனை கூறுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 25 மில்லியன் ஆக அதிகரித்திருந்தது. அதேபோல் தற்சமயம் 500 மில்லியன் பேர் டெலிகிராம் பயன்படுத்தக்கூடிய ஆக்டிங் பயனாளர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வெளிவந்த தகவலின்படி, ஆசிய கண்டத்தில் இருந்து மட்டும் 38 சதவீதத்தினர் டெலிகிராமை பயன்படுத்துகின்றனர். ஐரோப்பாவில் 27 சதவிகிதத்தினர், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 21 சதவீதத்தினர் தற்போது இணைந்து இருக்கின்றனர்.

பயனர்களின் மன நிலை மற்றும் தனிநபர் பாதுகாப்பு தகவலை அறிந்து கொண்டு அதற்கு தகுந்த விளம்பரங்களை வடிவமைப்பதற்கு இந்த புதிய பிரைவேசி பாலிசி உதவுவதாக வாட்ஸ்அப் தரப்பில் தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி லொகேஷன் எப்போதும் ஆன் செய்து இருக்க வேண்டும் என வாட்ஸ் ஆப் கூறுகிறது.

ஒருவேளை பயனர் லொகேஷன் ஆப் செய்தால் ஐபி அட்ரஸ் மற்றும் தொலைபேசி கோட் உள்ளிட்டவற்றை வாட்ஸ்அப் டிராக் செய்வதாகவும் தெரிகிறது. ஆனால் இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் டயக்னாஸ்டிக் மற்றும் ட்ரபுள் சூட்டிங் காரணங்களுக்காக மட்டும்தான் என வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் இப்போது வெளிவரும் புதிய விளக்கமும் மக்களிடையே பெரிய தாக்கத்தை உண்டு பண்ணவில்லை. எனவே டெலிகிராம் செயலிகளின் பயன்பாடு மின்னல் வேகத்தில் அதிகரிக்கிறது.

ஆனாலும் அரிதாக சிலர் வாட்ஸ்அப்-ன் விளக்கத்தை ஏற்றும், இவ்வளவு காலம் வாட்ஸ்அப் பயன்படுத்தியதாலும்,வாட்ஸ்அப்பிலேயே தொடர முடிவெடுத்துள்ளனர். பலர் சிக்னல் செயலி மற்றும் டெலிகிராம் செயலியை பயன்படுத்த துவங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications