நோக்கியா- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை பப்பில் கம் வைத்து ஓபன் செய்த வாடிக்கையாளர்.! ஷாக்கிங் வீடியோ.!
நோக்கிய 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் இந்தியச் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட அப்டேட்டின் படி பாதுகாப்பு சேவையில் பெரிய கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
நோக்கியா நிறுவனம் அண்மையில் அறிமுகப் படுத்திய நோக்கிய 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் இந்த மாத இறுதியில் இந்தியச் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. ஆனால் அண்மையில் வெளியிடப்பட்ட அப்டேட்டின் படி பாதுகாப்பு சேவையில் பெரிய கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் பெண்டா கேமரா
உலகின் முதல் பெண்டா கேமரா சேவையுடன் களமிறங்கியுள்ள இந்த நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் இன் அண்மைய அப்டேட் ஆனா v.22c வெர்ஷன் படி, மொபைல் போன் இன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
v.22c வெர்ஷன் அப்டேட்
பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் இன் ஆற்றல் திறனை மேம்படுத்த இந்த அப்டேட் வழங்கப்பட்டது. ஆனால் v.22c வெர்ஷன் அப்டேட்டிற்கு பிறகு யார் கை விறல் வைத்தாலும் மொபைல் ஓபன் ஆகிறதென்று புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பப்பில் கம் ஓபன் செய்த வாடிக்கையாளர்
அதுமட்டுமின்றி துணிக்குள் கை வைத்து, பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரில் விறல் வைத்தாலும் மொபைல் ஆட்டோமேட்டிக்காக ஓபன் ஆகிறது. பப்பில் கம்மை, பாக்கெட்டுடன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் மீது வைத்தால் கூட நோக்கியா 9 பியூர் வியூ வேலை செய்கிறது.

புதிய அப்டேட்டை வெளியிடும் நோக்கியா
இது தொடர்பாக நோக்கியவை டேக் செய்து பயனர்கள் தங்களின் புகார்களைப் பதிவு செய்து வருகின்றனர். முடிந்த வரையில் மிக வேகமாக நோக்கியா நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications