தோற்றுப்போன ரஷ்யா, ஆரம்பமான அமெரிக்க உள்நாட்டு 'மோதல்'..!
உலக வரலாற்றில் சில 'குறிப்பிட்ட' பக்கங்களை மிகவும் பரபரப்பாக வைத்துக்கொள்ள அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகிய இரண்டு நாடுகளும் தவறவில்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவ்விரு நாடுகளுக்கும் வளர்ச்சிப்போட்டி ஒரு 'யுத்தம்' போல நடந்தது.
அம்மாதிரியான வளர்ச்சி போட்டியின் விளைவாக சில நிஜ யுத்தங்களையும், உலகம் சந்திக்க நேர்ந்தது. அதில் சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் நடுவே நடந்த விண்வெளி பந்தயம் (யுத்தம்) மிகவும் சுவாரசியமானவை.
யார் முதலில் நிலவை அடைகிறார்கள், யார் வீனஸ் கிரகத்தை முதலில் அடைகிறார்கள், செவ்வாய் கிரகத்தின் முதல் புகைப்படம் போன்ற பல 'விண்வெளி யுத்தங்களில்' அமெரிக்காவின் மிகப்பெரிய மற்றும் பலமான போட்டியாளனாய் திகழ்ந்தது - சோவியத் ஒன்றியம்.

பழைய கதை :
ஆனால் சோவியத் ஒன்றியத்திற்கும் அமெரிக்காவிற்கும் நடுவே நடந்த இந்த போட்டா போட்டிகளெல்லாம் பழைய கால கதை, அதாவது அரை நூற்றாண்டிற்கு முன் நடந்த கதைகள்.

நாசா :
ரஷ்யா பின் தொடர முடியாத வண்ணம் விண்வெளி பந்தயத்தில் உயர்ந்து நிற்கிறது அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா.

ரஷ்யா பின் தங்கியது :
நீண்ட கால விண்வெளி விமானங்கள், விண்வெளி நடைகளை நிகழ்த்தும் போது, மற்றும்- விண்வெளியை சந்திக்கும்போது என அனைத்து வகையான விண்வெளி ஆராய்ச்சியிலும் அமெரிக்கா முன்னிலை பெற ரஷ்யா தோற்று பின் தங்கியது என்று தான் கூற வேண்டும்.

நிலவில் காலடி :
இது போன்ற காரணங்களால் தான், ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா முதன்முதலில் நிலவில் காலடி பதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

துரோகங்கள் :
நிலவில் முதல் மனித காலடி தொடங்கி, சில வரலாற்று துரோகங்கள் உட்பட பல விண்வெளி சாதனைகளும் நிகழ்த்தபட்டு இன்று வரை அமெரிக்கா தான் விண்வெளியை ஆள்கிறது.

தனித்து செயல்படும் முயற்சிகள் :
ஆனால், இந்த அதிநவீன கால யுத்தமானது சோவியத்-அமெரிக்கா கால யுத்தம் போல மிகவும் தனித்து செயல்படும் முயற்சிகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு நிறுவனம் :
அதாவது இந்த போட்டியானது அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் போயிங் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்குள்ளும் நடக்கும் ஒரு வளர்ச்சி யுத்தமாகும்.

விண்வெளி போக்குவரத்து சேவை :
ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) என்பது அமெரிக்காவின் விண்வெளி உற்பத்தியாளர் மற்றும் விண்வெளி போக்குவரத்து சேவைகள் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான உற்பத்தி நிறுவனம் :
போயிங் (Boeing) என்பது அமெரிக்காவின் விமான உற்பத்தி நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு நிறுவனம் :
அது மட்டுமின்றி போயிங் - விமானங்கள், சுற்றகவூர்தி, ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களின் வடிவமைப்புகள், உற்பத்தி, மற்றும் விற்பனை ஆகியவைகளை நிகழ்த்தும் ஒரு அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேலை :
இந்த இரண்டு அமெரிக்க நிறுவனங்களுக்கும் நடக்கும் விண்வெளி பந்தயத்தின் மிகவும் சுவாரசியமான பகுதி என்னவென்றால் - இந்த இரண்டு நிறுவனங்களின் வேலையும் ஒன்று தான்.

பணி :
அதாவது, 2017 ஆம் ஆண்டிற்குள் அமெரிக்க விண்வெளி நிலையத்திற்கு நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக அனுப்பி வைக்கவே இந்த இரண்டு நிறுவனங்களும் பணி புரிகின்றன.

வெளிப்படை :
மேலும் இந்த இரண்டு நிறுவனங்களும், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தை போல வெளிப்படையாக மோதிக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மோதல் :
ஆனால் சமீபத்தில் நாசாவின் ஆலோசனைக் குழுவின் துணைக்குழு நடத்திய சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் போயிங் அளித்த தகவல்களின்படி இரண்டு நிறுவனமும் சத்தமின்றி மோதிக்கொள்ளுவது தெரிய வந்துள்ளது.

டிராகன் :
அப்படியாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அளித்த தகவலின்படி, அந்த நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தின் (Dragon spacecraft) பரிசோதனை 2016-ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்டு மார்ச் 2017-ஆம் ஆண்டு வாக்கில் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறியிருந்தது.

ஸ்டார்லைனர் :
தொடர்ந்து தனது அறிக்கையை அளித்த போயிங் நிறுவனம் தங்களது ஸ்டார்லைனர் விண்கலத்தை (Starliner spacecraft) 2017-ஆம் ஆண்டு வாக்கிலேயே பரிசோதனை செய்து அதே ஆண்டுலேயே விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக அறிவித்தது.

ஸ்பேஸ்எக்ஸ் - போயிங் :
அதாவது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்திற்கு முன்பாகவே தனது விண்கலத்தை பரிசோதிக்க உள்ளது தெரிய வந்துள்ளது.

ஃபால்கன் 9 ராக்கெட் :
மேலும் டிராகன் விண்கலத்தை விண்ணில் செலுத்தப்போகும் ஃபால்கன் 9 ராக்கெட் (Falcon 9 rocket) ஆனது விண்வெளி வீரர்களை ஏற்று செல்வதற்கு முன் பல முறை சோதனை செய்யப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சரக்கு மாதிரி :
ஃபால்கன் 9 ராக்கெட் ஆனது டிராகன் விண்கலத்தின் சரக்கு மாதிரியை உள்ளடக்கி ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மூலம் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது என்பதும்
குறிப்பிடத்தக்கது.

சோதனை :
நாசாவின் பல தரப்பட்ட சோதனைகளுக்கு பின்பே இரண்டு நிறுவனங்களின் விண்கலங்களும் விண்ணில் செலுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications