தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய விதிகள்: ஐ.நா அமைப்பின் பிரதிநிதிகளுக்கு இந்திய பிரதிநிதி அலுவலகம் பதில்.!
இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் "சமூக ஊடகங்களின் சாதாரண பயனர்களை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தான் கூறவேண்டும். மேலும் அண்மையில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 குறித்து ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் சிறப்பு பிரதிநிதிகள் கவலை தெரிவித்ததற்கு இந்தியா பதிலளித்துள்ளது.

குறிப்பாக இதுதொடர்பாக ஐ.நா அமைப்பின் சிறப்பு பிரதிநிதிகளுக்கு அந்த அமைப்புகான இந்திய பிரதிநிதி அலுவலகம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், கடந்த 2018-ம் ஆண்டு புதிய தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளை தயாரிப்பது தொடர்பாக இந்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவை தொழில்துறைசங்கள்,பொதுமக்கள், நிறுவனங்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற்றன.
அதன்பின்பு அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்பட்டு, அதற்கு தகுந்தவாறு விதிகள் இறுதி செய்யப்பட்டன. குறிப்பாக சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து கவலை எழுந்த நிலையில் தான், இந்த புதிய விதிகளை அமல்படுத்துவதற்கான தேவை உருவானது.

அதேபோல் சமூக ஊடகங்களை உபயோகிக்கும் சாதராண பயன்பாட்டாளர்களுக்கும் அதிகாரமளிக்கு விதத்தில் இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள், பண்புகளை இந்தியா எப்போதும் அங்கீகரித்துள்ளதையும்,
பேச்சு மற்றும் கருத்து சுதந்திர உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ளதையும் இந்திய தூதரகம் சுட்டிகாட்ட விரும்புகிறது.
குறிப்பாக பேச்சு மற்றும் கருத்துரிமையில் புதிய தொழில்நுட்ப விதிகள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறுவது தவறு என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுளளது என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாக கூறவேணடும் என்றால் சமூக ஊடகங்களின் சாதாரண பயனர்களை மேம்படுத்துவதற்காக இந்த விதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக ஊடக தளங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுபவர்களுக்கு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு மன்றம் இருக்கும். பல்வேறு தரப்பினருடன் சரியானகலந்துரையாடலுக்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப விதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கும் இந்த சட்ட விதிகள் துணையாக இருக்கும் என்று ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்த குழு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்தியாவில் சமூகவலைத்தளங்களை அதிகளவு மக்கள்
பயன்படுத்துகின்றனர். இந்த தளங்களில் எளிமையாக செய்திகள், தகவல்கள் என அனைத்தையும் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புதிய வசதிகள் வந்து கொண்ட தான் இருக்கிறது, இதுபோன்ற புதிய வசதிகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications