Home
News

டாப் கியருக்கு எகிறியது அம்பானி சொத்து மதிப்பு: 128 பேருக்கு சரிவு.!

உலத்தில் பெரும் பணக்காரர்களாக உள்ள 128 பேருக்கு சொத்து மதிப்பு சரிவடைந்ததுள்ளது நிலையில், முகேஷ் அம்பானிக்கு மகள் திருமண ராசியால், சொத்து மதிப்பு டாக் கியருக்கு எகிறியுள்ளது.

முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானி வைரத் தொழில் அதிபர் ஆனந்த் பிரமால் காதல் திருமணம் இருவீட்டர் சம்மத்துடன் நடந்தது. இதற்காக கோடிகளை குவித்து திருமணம் நடத்தியிருந்தார் முகேஷ் அம்பானி.

டாப் கியருக்கு எகிறியது அம்பானி சொத்து மதிப்பு: 128 பேருக்கு சரிவு.!

இந்த திருமண சுப நிகழ்ச்சிய நிச்சயதார்த்தம், திருமண விழா, வரவேற்பு என்று உலகமே வியந்தது. இதில் உலகம் முழுக்கம் இருந்து பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

உலத்தில் பெரும் பணக்காரர்களாக உள்ள 128 பேருக்கு சொத்து மதிப்பு சரிவடைந்ததுள்ளது நிலையில், முகேஷ் அம்பானிக்கு மகள் திருமண ராசியால், சொத்து மதிப்பு டாக் கியருக்கு எகிறியுள்ளது.

ஆனந்த் பிரமால்-இஷா அம்பானி காதல்:

ஆனந்த் பிரமால்-இஷா அம்பானி காதல்:

பிரபல கட்டுமான தொழில் அதிபர் அஜய் பிரமால் மகன் ஆனந்த் பிரமால் வைத் தொழில் அதிபராக உள்ளார். இவருக்கும், ரிலையன்ஸ் குழுத் தலைவர் முகேஷ் அம்பானி மகள் இஷா அம்பானிக்கும் காதல் மலர்ந்தது.

இதுகுறித்து இருவீட்டாருக்கும் தெரியவர காதலுக்கு பச்சை கொடி காட்டி திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.

நிச்சயதார்த்த விழா:

நிச்சயதார்த்த விழா:

இதையொட்டி இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் நிச்சயதார்த்த திருவிழா இத்தாலியில் தடபுடலாக 3 நாள் நடந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திருமண விழா:

திருமண விழா:

திருமண விழா இருவருக்கும் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் கோலகமாக நடந்தது. இதில் திரைப்பிரபலங்கள், உலக அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ரூ.722 கோடி:

ரூ.722 கோடி:

37 வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்- டயானா தம்பதியரின் திருமணம் ஆடம்பரமாக அதிக செலவில் நடந்தது. அதன்பிறகு உலக அளவில் அதிக செலவில் முகேஷ் அம்பானியின் மகள் திருமணம் ரூ.722 கோடியில் நடந்தது.

திருமணச் செலவு மட்டும் ரூ.722 கோடியாகும். இதில் விருந்தினர்களை வரவேற்பு உள்ளிட்ட பெரும்பான்மையாக செலவு செய்யப்பட்டுள்ளது.

உலகமே மெச்சியது:

உலகமே மெச்சியது:

கோடிகளை குவித்து திருமணம் நடத்தினால் அது அம்பானி குடும்பத்தால் நடத்தான் முடியும் என்றும் உலகமே முகேஷ் அம்பானியை மெச்சியது. இது அம்பானியை பொறுத்தவரையில் இது சுப காரியமாக பார்த்தார். இதில் சுவாமி லட்சுமியே அம்பானிக்கு அருள் கொடுத்தது போல் இருந்தது.

 9 லட்சத்து 59 ஆயிரம் கோடி சரிவு:

9 லட்சத்து 59 ஆயிரம் கோடி சரிவு:

இந்நிலையில், சர்வதேச காரணிகளின் தாக்கத்தால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பால் உலக அளவில் முதல் 500 இடங்களில் இருக்கும் 128 பெரும் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 9 லட்சத்து 59 ஆயிரம் கோடி ரூபாய் சரிவடைந்துள்ளது.

லட்சுமி மிட்டல் சொத்து மதிப்பு குறைவு:

லட்சுமி மிட்டல் சொத்து மதிப்பு குறைவு:

இந்தியாவைப் பொருத்தவரையில் 23 செல்வந்தர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் சரிவடைந்துள்ளது. அதிகபட்டசமாக உருக்கு உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் லெட்சுமி மிட்டலின் சொத்து மதிப்பு 29 சதவீதம் அதாவது, 39 ஆயிரத்து 200 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

சன்பார்மா சொத்து மதிப்பு சரிவு:

சன்பார்மா சொத்து மதிப்பு சரிவு:

உலக அளவில் 4வது பெரிய மருந்து உற்பத்தி நிறுவனமான சன் பார்மா நிறுவனர் திலிப் சங்வி சொத்து மதிப்பு 32 ஆயிரத்து 200 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

அம்பானிக்கு மட்டும் உயர்வு:

அம்பானிக்கு மட்டும் உயர்வு:

இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு நடப்பு ஆண்டில் 28 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.

மகள் திருமண ராசி:

மகள் திருமண ராசி:

இஷா அம்பானியை மணம் குளிர திருமணம் செய்து வைத்து மகாலட்சுமி போல புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தால், மகா லட்சுமியே அம்பானிக்கு அருள் கொடுத்து சொத்து மதிப்பை உயர்த்தி வைத்தாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அம்பானி மகா லட்சுமியை சாமியை தரிசனம் செய்தாக கூறப்படுகின்றது.

இரட்டிப்பு மகிழ்ச்சி:

இரட்டிப்பு மகிழ்ச்சி:

முகேஷ் அம்பானிக்கு தொழிலிலும் கை கொடுத்துள்ளதும், மகளுக்கு திருமணம் சுபிட்சுமாக முடிந்துள்ளதால் முகேஷ் அம்பானி இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
The Net Worth Of The Rich Is 128 Mukesh Ambanis Asset Hike : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X