Home
News

உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் பிரதமர் மோடிக்கு கொடுத்தப் பரிசு.. அது என்ன தெரியுமா?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி (PM Narendra Modi), நேற்று இரவு 10 மணியளவில் வாஷிங்டன் டிசியில் உள்ள பிளேர் ஹவுஸில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்கை (SpaceX chief Elon Musk) சந்தித்தார். குறிப்பாக எலான் மஸ்க் தனது மூன்று குழந்தைகளுடன் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அதேபோல் இந்த சந்திப்பில் எலான் மஸ்க் நமது பிரதமர் மோடிக்கு ஒரு பரிசை வழங்கினார்.

அது என்ன பரிசு?

இந்நிலையில் எலான் மஸ்க் (Elon Musk) பிரதமர் மோடிக்கு கொடுத்தது என்ன பரிசு என சமூக வலைத்தளங்களில் (social media) பலரும் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதன்படி சிலர் அது ஸ்டார்ஷிப்பில் பயன்படுத்தப்படும் heat tile என்றும், இன்னும் சிலர் heat shield என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எலான் மஸ்க்  பிரதமர் மோடிக்கு கொடுத்தப் பரிசு.. அது என்ன தெரியுமா?

மேலும் இருவரின் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன் எக்ஸ் பக்கத்தில் விண்வெளி இயக்கம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். அதேபோல் இந்தியாவின் சீர்திருத்தம் முன்னேற்றத்துக்கான முயற்சிகள் பற்றி நான் பேசினேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பாக தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தில், அரசு செயல்திறன் துறைக்கு (DOGE) தலைமை தாங்கும் எலான் மஸ்க் அவர்கள் அரசின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்கக் கூட்டாட்சி, தொழில்நுட்பம், மென்பொருளை நவீனமயமாக்குதல் போன்றப் பணியைக் கொண்டுவருகிறார்.

அதேபோல் எலான் மஸ்க் (Elon Musk) தனது சொந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை இந்தியாவில் துவங்க முயற்சி செய்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்டார்லிங்க் (Starlink) இந்திய அறிமுகம் குறித்த சில முக்கியத் தகவல்கள்
வெளியானது.

அதன்படி இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்கும் உரிமத்தைப் பெற மத்திய அரசு விதித்த கட்டுப்பாடுகளை எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக தற்போது தகவல் வெளியானது. எனவே இதன் மூலம் இந்தியத் தொலைத்தொடர்பு சேவை சந்தையில் ஸ்டார்லிங்க் விரைவில் இணைய உள்ளது.

அதுவும் இந்தியாவில் செயல்படுவதற்கான GMPCS உரிமம் என்று அழைக்கப்படும் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்க டேட்டா மற்றும் பாதுகாப்பு விதிகளை மத்திய அரசு விதித்திருந்தது. அதன்படி இந்திய பயனர்களின் தரவுகளை இந்தியாவிலேயே சேமிக்கவும்
தேசிய பாதுகாப்புகளுக்குத் தேவைப்படும்போது புலனாய்வு அமைப்புகளுக்கு ஸ்டார்லிங்க்-ன் அணுகலை வழங்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு அந்நிறுவனம் ஒப்புக்கொண்டது எனத் தகவல் வெளியானது.

எலான் மஸ்க்  பிரதமர் மோடிக்கு கொடுத்தப் பரிசு.. அது என்ன தெரியுமா?

ஆனாலும் ஸ்டார்லிங்க் எழுத்துப்பூர்வமாக இன்னும் இதை உறுதி செய்யவில்லை. இருந்தபோதிலும் இந்தாண்டு இறுதிக்குள் செயற்கைக்கோள் ஸ்டார்லிங்க் இணைய சேவைகள் இந்தியாவில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் நேரடியாக சாட்டிலைட் மூலம் இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ஸ்டார்லிங்க் வழங்குவதால் டவர் பயன்பாடு குறையும்.

ஸ்டார்லிங் சேவை இந்தியாவுக்கு விரைவில் வரும் என்பதால் ஜியோ, ஏரடெல் போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடியாக அமையும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக இந்தியாவில் ஸ்டார்லிங் சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதேபோல் எலான் மஸ்க் அவர்களின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
The mystery gift given to PM Modi by Elon Musk has caught the attention of the internet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X