அமெரிக்கா தயார்..! அடுத்தது யார்..?
உலகம் காப்பாற்றப்பட வேண்டும், மேலும் மேலும் அழகானதாய் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்காக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட காலமெல்லாம் மலையேறி போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..!
உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..!
இப்போது யார் பெரிய பலசாலி, யார் சொல்லுவதை 'சபை' கேட்க வேண்டும் என்பதற்காக தான் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, எந்த நாடு அதிநவீன ஆயுதம் வைத்திருக்கிறது, எந்த நாட்டை கண்டு பிற உலக நாடுகள் அஞ்சுகிறது போன்றவைகளுக்காக தான் தொழில்நுட்பம் 'இப்போது' பெரிதளவில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது..!
ஓசாமா பின் லேடன் 'கேசட்'கள் : வெளியான உண்மைகள்..!
அப்படியாக, வருங்கால உலக யுத்தம் நாளையே தொடங்கினாலும் கூட களத்தில் குதிக்க, ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா காத்திருக்கிறது என்பது தான் நிதர்சனம். அமெரிக்காவின் 6 அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்கள் பற்றி வெளியாகி இருக்கும் 'பகீர்' தகவல்கள், அதை நிரூபனம் செய்வது மட்டுமின்றி, ''நாங்கள் தயார்'' என்ற அமெரிக்காவின் மறைமுகத்தையும் சற்றே வெளிப்படுத்துகிறது என்று தான் சொல்ல வேண்டும்..!

அதிநவீன ஆயுதம் 01 :
ஹெல் எம்டி ஃபோடான் கேனான் (HEL MD photon cannon)

இது வெறும் போர் கால வாகனம் அல்ல..!
தாக்குவதற்காக வரும் ஏவுகணைகளை 'ட்ராக்' செய்து குறி வைத்து தாக்கும் அதிநவீன ஆயிதம் இது..!

அதிநவீன ஆயுதம் 02 :
லேசர் வெப்பன் சிஸ்டம் (Laser Weapon System) அல்லது லாஸ் (LaWS)

லேசர் தாக்குதல் :
இந்த அதிநவீன ஆயுதம் கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த லேசர் கதிர்கள் கொண்டு தாக்கும்..!

அதிநவீன ஆயுதம் 03 :
எக்ஸ்ப்ரிமென்டல் இஎம் ரெயில் கன் (Experimental EM Rail Gun)

பீரிங்கி வகை :
எதிர் நிற்கும் எதையும் துவம்ஸம் செய்யும் எலெக்ட்ரோ காந்த சக்தி அதிநவீன பீரிங்கி வகை ஆயுதம் இது..!

அதிநவீன ஆயுதம் 04 :
அட்வான்ஸ்டு ப்ரிஸிசன் கில் வெப்பன் சிஸ்டம் (Advanced Precision Kill Weapon System)

துல்லியம் :
லேசர் மூலம் வழிநடத்தப்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட இது 93% வரை துல்லியம் தவறாமல் தாக்கும் அதிநவீன ஏவுகணையாகும்.!

அதிநவீன ஆயுதம் 05 :
ட்ராக்கிங் பாயிண்ட் ப்ரிஸிசன்-கைடட் ஃபையர்ஆர்ம் ஸிரிஸ் (TrackingPoint's Precision-Guided Firearm series)

ஸ்னைப்பர் :
1.1 கிலோமீட்டர் வரை எளிதாக, துல்லியமாக குறி வைத்து சுடும் வகையில் வடிவமைக்கப்பட்ட அதிநவீன 'ஸ்னைப்பர்' வகை துப்பாக்கி..!

அதிநவீன ஆயுதம் 06 :
எம்க்யூ-8சி ஃபையர் ஸ்கவுட் யூஏவி (MQ-8C Fire Scout UAV)

ரோந்து :
குறுகிய நேர வான்வழி தாக்குதல் மற்றும் விரைந்து முடிக்க கூடிய ரோந்து பணிகளுக்காகவே வடிவமைக்கப்பட்ட அதிநவீன ஹெலிக்காப்ட்டர் இது..!

பரிசோதனை :
மேற்க்கண்ட அதி நவீன ஆயுதங்கள் அனைத்தும் அமெரிக்காவினால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஆயிதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!

அடுத்தது யார் :
இது போன்ற அமெரிக்க ஆயுத பரி சோதனைகள், உலக யுத்தத்தை நாங்கள் சமாளிப்போம் என்றும், அந்த வரிசையில் அடுத்தது யார்..? ரஷ்யாவா..? சீனாவா..? என்று அமெரிக்கா மறைமுக கேள்வி எழுப்புவதும் உறுதியாகிறது..!
ஹெல் எம்டி ஃபோடான் கேனான் :
பரிசோதனை வீடியோ..!
லேசர் வெப்பன் சிஸ்டம் :
பரிசோதனை வீடியோ..!
எக்ஸ்ப்ரிமென்டல் இஎம் ரெயில் கன் :
பரிசோதனை வீடியோ..!
அட்வான்ஸ்டு ப்ரிஸிசன் கில் வெப்பன் சிஸ்டம் :
பரிசோதனை வீடியோ..!
ட்ராக்கிங் பாயிண்ட் ப்ரிஸிசன்-கைடட் ஃபையர்ஆர்ம் ஸிரிஸ் :
பரிசோதனை வீடியோ..!
எம்க்யூ-8சி ஃபையர் ஸ்கவுட் யூஏவி :
பரிசோதனை வீடியோ..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications