சுங்கச் சாவடிகளில் நிற்காமல் பயணிக்க உதவும் பாஸ்டாக் எலெக்ட்ரானிக் அட்டை.!
இந்தியாவில் மொத்தம் 420 சுங்கச் சாவடிகளில் இந்த பாஸ்டாக் அட்டை ஏற்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களில் விரைவாக பயணிக்க 6வழிச் சாலை, 4வழிச் சாலைகள் என்று போடப்பட்டன, குறிப்பாக சாலை கட்டமைப்பு திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு 50 கி.மீ தூரமும் தனியார் நிறுவனத்திடம் விடப்பட்டன.
இந்த நிறுவனங்கள் சாலை சிறப்பாக அமைத்து, பராமரித்து வருகின்றன. இதற்காக தான் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும் சுங்கச் சாவடிகளில் வரிசையாக வந்து கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டும், தொடர்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்வோரின் வசதிக்காக வாகனங்களுக்கு 'பாஸ்டாக்' எனும் எலெக்ட்ரானிக் அட்டை அளிக்கப்பட்டது. மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த முடியும். பாஸ்டாக் அட்டை செயல்படுவது எப்படி அதன் பயன்கள் என்ன என்பதைப் எளிமையாகப் பார்க்கலாம்.

பாஸ்டாக்
இந்த பாஸ்டாக் எனும் எலெக்ட்ரானிக் அட்டை கடந்த 2014-ம் ஆண்டு முதல் முறையாக அகமதாபாத்-மும்பை இடையிலான
தேசிய நெடுஞ்சாலையில் பயன்படுத்திப் பார்க்கப்பட்டது, இதையடுத்து டெல்லி-மும்பை மார்க்கத்தில் இது முறையாக
அமல்படுத்தப்பட்டது. பின்பு 2015-ம் ஆண்டில் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் இது புழக்கத்துக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேடியோ அலைவரிசை
குறிப்பாக மின்னணு முறையில் சுங்கக் கட்டணம் (இ.டி.சி) செலுத்தும் முறைக்கு வேண்டி தனித்துவமான ரேடியோ அலைவரிசை அட்டை (ஆர்.எப்.ஐ.டி) பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய ஆர்.எப்.ஐ.டி கொண்ட அட்டைகள்தான்
பாஸ்டாக் எனப்படுகின்றன. இவை வாகனத்தின் ஜன்னல் பகுதியில் ஒட்டிவைத்தால் போதுமானது.

பிரீபெய்ட்
ஜன்னல் பகுதியில் ஒட்டிவைக்கும் பாஸ்டாக் அட்டை பிரீபெய்ட் கார்டைப் போன்றது, இதில் போதிய தொகையை லோட் செய்தால் ஒவ்வொரு சுங்கச் சாவடியைக் கடக்கும்போதும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இதிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்..

மொத்தம் 420 சுங்கச் சாவடி
இந்தியாவில் மொத்தம் 420 சுங்கச் சாவடிகளில் இந்த பாஸ்டாக் அட்டை ஏற்கப்படுகிறது, இதற்கென தனிபாதையே உள்ளது,
பின்பு பாஸ்டாக் அட்டை உள்ள வாகனங்கள் எவ்வித இதில் போதிய தொகையை லோட் செய்தால் ஒவ்வொரு சுங்கச் சாவடியைக் கடக்கும்போதும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் இதிலிருந்து கழித்துக் கொள்ளப்படும்.

5சதவீத கேஷ்பேக்
ஆன்லைன் மூலம் பாஸ்டாக் ரீ-சார்ஜ் செய்ய முடியும். கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மற்றும் நெட் வங்கி மூலமாகவும்
இதை ரீ- சார்ஜ் செய்யலாம். பே.டி.எம். மூலமும் இதை ரீ-சார்ஜ் செய்ய முடியும். இந்த அட்டையை பயன்படுத்துவோருக்கு 5சதவீத கேஷ்பேக் சலுகையும் அளிக்கப்படுகின்றன, இந்தத் தொகைக்கு வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொள்ள முடியும்.

வங்கி
குறிப்பாக ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை ரீ-சார்ஜ் செய்யலாம். இந்த அட்டையை பயன்படுத்த காலகெடு கிடையாது. புதிய கார்களில் இந்த பாஸ்டாக் அட்டை கட்டாயம் இடம்பெறுகிறது. 2017 டிசம்பரிலிருந்து இது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, சிண்டிகேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஐ.டி.எப்.சி. வங்கி, ஸ்டேட் வங்கி ஆகிய வங்கிகளில் இந்த பாஸ்டாக்-ஐ பெறலாம். சுங்கச் சாவடிகளிலும் இதைப் பெறலாம்.


Click it and Unblock the Notifications