ஐபோனை வடிவமைத்தவரின் தற்போதைய நிலை - என்னத்த சொல்ல?

அவரது முதன்மையான பணிகளில் ஒன்று ஐமாக் (iMac) சாதனத்தை வடிவமைத்திருந்தது.

|

இன்று வரைக்கும் கூட, நம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஆப்பிள் ஐபோன் என்பது ஒரு கனவு ஸ்மார்ட்போன் ஆகும். இது இன்றைய நேற்றைய கதை அல்ல, கடந்த இரண்டு தசாப்தங்களாக (20 ஆண்டுகள்) நடக்கும் ஒரு கதை ஆகும். மக்களுக்கு ஐபோன்கள் மீது ஆர்வம் ஏற்பட ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தாலும் கூட, பிரதான கரங்களில் ஒன்றாக அதன் வடிவமைப்பை கூறலாம்.

ஐபோனை வடிவமைத்தவரின் தற்போதைய நிலை - என்னத்த சொல்ல?

அப்படியான அற்புதமான வடிவமைப்பை உருவாக்கிய சீஃப் ஜானி ஐவ், தற்போது என்ன செய்கிறார்? எதை வடிவமைக்கிறார்? என்று தெரியுமா?

 வேறு திசையில் திருப்பி உள்ளார்!

வேறு திசையில் திருப்பி உள்ளார்!

உலகம் போற்றும் ​​புகழ்பெற்ற ஆப்பிள் நிர்வாகியான ஜானி ஐவ், தற்போது தனது திறமையை வேறு திசையில் திருப்பி உள்ளார் - அது நகை வடிவமைப்பு துறை. ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்த சிறிது வருடங்களுக்குப் பிறகு, அவர் 1997 ஆம் ஆண்டில் தொழில்துறை வடிவமைப்பின் மூத்த விபி ஆனார்.

  ஐபாட், ஐபோன், மற்றும் ஐபேட்!

ஐபாட், ஐபோன், மற்றும் ஐபேட்!

அவரது முதன்மையான பணிகளில் ஒன்று ஐமாக் (iMac) சாதனத்தை வடிவமைத்திருந்தது. அது ஒரு உறுதியான வெற்றியாக இருந்தது. அந்த வெற்றியின் வழியாக அவர் ஐபாட், ஐபோன், மற்றும் ஐபேட் போன்ற வடிவமைப்பு பணிகளையும் சந்தித்தார். அவைகளும் சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஏன் நகை வடிவமைப்பிற்குள் நுழைந்தார்?

ஏன் நகை வடிவமைப்பிற்குள் நுழைந்தார்?

எல்லாவற்றிக்கும் மேலாக, அவர் ஒரு தயாரிப்பு வடிவமைப்பு ஒரு போட்டோபுக்கை வெளியிட்டார், அதில் அவரின் ஆப்பிள் தயாரிப்புகள் சார்ந்த வேலைகளும் அடங்கி இருந்தது. இம்மாதிரியாக, வடிவமைப்பு துறையின் உட்சத்தில் உள்ள ஜானி, ஏன் நகை வடிவமைப்பிற்குள் நுழைந்தார். அதிலும் இருக்குறது ஒரு சுவாரசியம்.

மோதிரத்தில் அப்படி என்ன சுவாரசியம்?

மோதிரத்தில் அப்படி என்ன சுவாரசியம்?

​​பொருட்கள் மற்றும் அவற்றின் கலவையை பற்றிய புரிதலை கையில் எடுத்துக் கொண்ட ஜானி, தொழில்துறை வடிவமைப்பாளர் ஆன மார்க் நியூஸனுடன் இணைந்து ஒரு வைர மோதிரத்தை உருவாக்குவதற்கு கூட்டுசேர்ந்துள்ளார். ஒரு சாதாரன வைர மோதித்ததிற்கு இவ்வளவு பெரிய கூட்டணியா என்று யோசிக்க ஆரம்பித்து விட வேண்டாம்.

வேற லெவல் வைர மோதிரம்!

வேற லெவல் வைர மோதிரம்!

பொதுவாக, மோதிரத்தை உருவாக்கும் பெரும்பாலான வடிவமைப்பாளர்கள், அதற்கான அடித்தளமாக ஏதேனும் ஒரு உலோகத்தை பயன்படுத்தி, சில விலையுயர்ந்த கற்கள் உடன் வைரங்களை இணைப்பார்கள். அப்படித்தானே? ஆனால், ஜானி மற்றும் நியூஸன் கூட்டணியானது வெறுமனே ஒரு மோதிரத்தை, வைரங்களை மட்டுமே வைத்து செய்யக்கூடாது என்று முடிவு எடுத்தனர்.

நூறாயிரம் மைக்ரோமீட்டர் அளவிலான முகப்புக்கூறு!

நூறாயிரம் மைக்ரோமீட்டர் அளவிலான முகப்புக்கூறு!

வடிவமைக்க பெற்ற மோதிரம் ஆனது பார்க்க வேண்டுமானால் எளிமையானதாக இருக்கலாம். ஆனால் அதனுள் சிறப்பம்சங்கள் உள்ளன. ரெட் (RED) என்று அழைக்கப்படும் இந்த மோதிரம் ஆனது வழக்கமான மற்றும் பாரம்பரிய உலோக அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக,வைரத்தின் ஒரு தொகுதியை பல நூறாயிரம் மைக்ரோமீட்டர் அளவிலான முகப்புக்கூறுகளாக, ஒரு மோதிர வடிவில் வெட்டி உருவாக்கி உள்ளனர்.

வைர வெட்டுக்கள் கைகளை கிழித்து விடுமா?

இதில் சுவாரசியம் என்னவெனில், நேரடியாக வெட்டப்பட்டுள்ள இந்த வைரத்தை அணிந்தவரின் விரலை இது கிழித்து விடக்கூடாது என்பதற்காக, ஒரு வளைய லேசர் கொண்ட ஒரு நுண்ணோக்கி-தடிமனான நீர் ஜெட் பயன்படுத்தி வெட்டப்பட்டு உள்ளதாம். அதாவது இது மிகவும் மிருதுவாக இருபப்து உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அர்த்தம்.

தனியுரிமை தொழில்நுட்பம்!

தனியுரிமை தொழில்நுட்பம்!

முடிக்கப்பட்ட மோதிரத்தில் மொத்தம் 2000-3000 முகப்பு கூறுகள் உள்ளனவாம். அதாவது இந்த அளவிலான நுணுக்கமான ஒரு மோதிர துண்டை இதற்கு முன்னாள் யாருமே பார்த்திருக்க முடியாது. மற்றொரு சுவாரசியம் என்னவெனில், மோதிரத்தை உருவாக்கிய டயமண்ட் ஃபவுண்ட்ரி (ஒரு கார்பன் நடுநிலை டயமண்ட் தயாரிப்பாளர்) இதில் தனியுரிமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது, அதாவது மோதிரத்தை வாங்குவோரின் (யாராக இருந்தாலும்) விரலுடன் மிகவும் கட்சிதமாக பொருந்தும்.

என்ன விலை?

என்ன விலை?

வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி ஏலத்தில் ஏலம் விடப்படும் போது, ​​ரூபாய் 1.09 கோடி முதல் ரூ. 1.81 கோடி வரை, அதாவது 150 முதல் 250 ஆயிரம் டாலர்கள் வரையிலான விலை புள்ளியை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு மோதிரத்திற்காக, ஆப்பிள் ஐபோன் வடிவமைப்பாளரை கொண்டு வந்து உள்ளார்கள் என்றால் சும்மாவா?

Best Mobiles in India

English summary
The Man Who Designed The Iconic iPhone Has Now Designed A Diamond Ring That Has No Metal: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X