Just In
- 2 hrs ago வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- 13 hrs ago வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- 14 hrs ago Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
Don't Miss
- Movies ஷங்கர் மகளின் ஹல்தி கொண்டாட்டம்.. மஞ்ச காட்டு மைனா போல் ஜொலித்த நடிகை அதிதி ஷங்கர்!
- News நடிகர் மாரிமுத்து எவ்ளோ பிரில்லியண்ட்! பாஞ்சாலங்குறிச்சி ஓலை பாய் காமெடியில் செய்த சூப்பர் டெக்னிக்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஐபோனை வடிவமைத்தவரின் தற்போதைய நிலை - என்னத்த சொல்ல?
அவரது முதன்மையான பணிகளில் ஒன்று ஐமாக் (iMac) சாதனத்தை வடிவமைத்திருந்தது.
இன்று வரைக்கும் கூட, நம்மில் பெரும்பாலானோர்களுக்கு ஆப்பிள் ஐபோன் என்பது ஒரு கனவு ஸ்மார்ட்போன் ஆகும். இது இன்றைய நேற்றைய கதை அல்ல, கடந்த இரண்டு தசாப்தங்களாக (20 ஆண்டுகள்) நடக்கும் ஒரு கதை ஆகும். மக்களுக்கு ஐபோன்கள் மீது ஆர்வம் ஏற்பட ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தாலும் கூட, பிரதான கரங்களில் ஒன்றாக அதன் வடிவமைப்பை கூறலாம்.
அப்படியான அற்புதமான வடிவமைப்பை உருவாக்கிய சீஃப் ஜானி ஐவ், தற்போது என்ன செய்கிறார்? எதை வடிவமைக்கிறார்? என்று தெரியுமா?
வேறு திசையில் திருப்பி உள்ளார்!
உலகம் போற்றும் புகழ்பெற்ற ஆப்பிள் நிர்வாகியான ஜானி ஐவ், தற்போது தனது திறமையை வேறு திசையில் திருப்பி உள்ளார் - அது நகை வடிவமைப்பு துறை. ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்த சிறிது வருடங்களுக்குப் பிறகு, அவர் 1997 ஆம் ஆண்டில் தொழில்துறை வடிவமைப்பின் மூத்த விபி ஆனார்.
ஐபாட், ஐபோன், மற்றும் ஐபேட்!
அவரது முதன்மையான பணிகளில் ஒன்று ஐமாக் (iMac) சாதனத்தை வடிவமைத்திருந்தது. அது ஒரு உறுதியான வெற்றியாக இருந்தது. அந்த வெற்றியின் வழியாக அவர் ஐபாட், ஐபோன், மற்றும் ஐபேட் போன்ற வடிவமைப்பு பணிகளையும் சந்தித்தார். அவைகளும் சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஏன் நகை வடிவமைப்பிற்குள் நுழைந்தார்?
எல்லாவற்றிக்கும் மேலாக, அவர் ஒரு தயாரிப்பு வடிவமைப்பு ஒரு போட்டோபுக்கை வெளியிட்டார், அதில் அவரின் ஆப்பிள் தயாரிப்புகள் சார்ந்த வேலைகளும் அடங்கி இருந்தது. இம்மாதிரியாக, வடிவமைப்பு துறையின் உட்சத்தில் உள்ள ஜானி, ஏன் நகை வடிவமைப்பிற்குள் நுழைந்தார். அதிலும் இருக்குறது ஒரு சுவாரசியம்.
மோதிரத்தில் அப்படி என்ன சுவாரசியம்?
பொருட்கள் மற்றும் அவற்றின் கலவையை பற்றிய புரிதலை கையில் எடுத்துக் கொண்ட ஜானி, தொழில்துறை வடிவமைப்பாளர் ஆன மார்க் நியூஸனுடன் இணைந்து ஒரு வைர மோதிரத்தை உருவாக்குவதற்கு கூட்டுசேர்ந்துள்ளார். ஒரு சாதாரன வைர மோதித்ததிற்கு இவ்வளவு பெரிய கூட்டணியா என்று யோசிக்க ஆரம்பித்து விட வேண்டாம்.
வேற லெவல் வைர மோதிரம்!
பொதுவாக, மோதிரத்தை உருவாக்கும் பெரும்பாலான வடிவமைப்பாளர்கள், அதற்கான அடித்தளமாக ஏதேனும் ஒரு உலோகத்தை பயன்படுத்தி, சில விலையுயர்ந்த கற்கள் உடன் வைரங்களை இணைப்பார்கள். அப்படித்தானே? ஆனால், ஜானி மற்றும் நியூஸன் கூட்டணியானது வெறுமனே ஒரு மோதிரத்தை, வைரங்களை மட்டுமே வைத்து செய்யக்கூடாது என்று முடிவு எடுத்தனர்.
நூறாயிரம் மைக்ரோமீட்டர் அளவிலான முகப்புக்கூறு!
வடிவமைக்க பெற்ற மோதிரம் ஆனது பார்க்க வேண்டுமானால் எளிமையானதாக இருக்கலாம். ஆனால் அதனுள் சிறப்பம்சங்கள் உள்ளன. ரெட் (RED) என்று அழைக்கப்படும் இந்த மோதிரம் ஆனது வழக்கமான மற்றும் பாரம்பரிய உலோக அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக,வைரத்தின் ஒரு தொகுதியை பல நூறாயிரம் மைக்ரோமீட்டர் அளவிலான முகப்புக்கூறுகளாக, ஒரு மோதிர வடிவில் வெட்டி உருவாக்கி உள்ளனர்.
வைர வெட்டுக்கள் கைகளை கிழித்து விடுமா?
இதில் சுவாரசியம் என்னவெனில், நேரடியாக வெட்டப்பட்டுள்ள இந்த வைரத்தை அணிந்தவரின் விரலை இது கிழித்து விடக்கூடாது என்பதற்காக, ஒரு வளைய லேசர் கொண்ட ஒரு நுண்ணோக்கி-தடிமனான நீர் ஜெட் பயன்படுத்தி வெட்டப்பட்டு உள்ளதாம். அதாவது இது மிகவும் மிருதுவாக இருபப்து உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அர்த்தம்.
தனியுரிமை தொழில்நுட்பம்!
முடிக்கப்பட்ட மோதிரத்தில் மொத்தம் 2000-3000 முகப்பு கூறுகள் உள்ளனவாம். அதாவது இந்த அளவிலான நுணுக்கமான ஒரு மோதிர துண்டை இதற்கு முன்னாள் யாருமே பார்த்திருக்க முடியாது. மற்றொரு சுவாரசியம் என்னவெனில், மோதிரத்தை உருவாக்கிய டயமண்ட் ஃபவுண்ட்ரி (ஒரு கார்பன் நடுநிலை டயமண்ட் தயாரிப்பாளர்) இதில் தனியுரிமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளது, அதாவது மோதிரத்தை வாங்குவோரின் (யாராக இருந்தாலும்) விரலுடன் மிகவும் கட்சிதமாக பொருந்தும்.
என்ன விலை?
வருகிற டிசம்பர் 5 ஆம் தேதி ஏலத்தில் ஏலம் விடப்படும் போது, ரூபாய் 1.09 கோடி முதல் ரூ. 1.81 கோடி வரை, அதாவது 150 முதல் 250 ஆயிரம் டாலர்கள் வரையிலான விலை புள்ளியை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஒரு மோதிரத்திற்காக, ஆப்பிள் ஐபோன் வடிவமைப்பாளரை கொண்டு வந்து உள்ளார்கள் என்றால் சும்மாவா?
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470