ஃபோட்டோ ரியலிஸ்டிக் அனிமேஷனில் களமிறங்கும் "லயன் கிங்"- சிம்பா.!

1994 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான டிஸ்னியின் 'லயன் கிங்' அனிமேஷன் திரைப்படம் தற்பொழுது ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

|

1994 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியான டிஸ்னியின் 'லயன் கிங்' அனிமேஷன் திரைப்படம் தற்பொழுது ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

ரீமேக் செய்யப்பட்டுள்ள புதிய லயன் கிங் திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

2டி கார்டூன் அனிமேஷன்

2டி கார்டூன் அனிமேஷன்

ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் கதையைத் தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த லயன் கிங் திரைப்படம் 2டி கார்டூன் அனிமேஷன் படமாக வெளியானது. அந்த வருடத்தில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்து சாதனைப் படைத்தது 2 ஆஸ்கர் விருதுகளை வென்றதென்பது குறிப்பிடத்தக்கது.

லயன் கிங் ரீமேக்

லயன் கிங் ரீமேக்

2016 ஆம் ஆண்டில் வெளியான ஜங்கிள் புக் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, டிஸ்னி நிறுவனம் லயன் கிங் திரைப்படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்தது. பாரம்பரிய 2டி அனிமேஷன் முறைப்படி உருவாக்கப்பட்டு 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட லயன் கிங் திரைப்படத்தை, தற்பொழுது அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிரட்டலான புது தோற்றத்தில் உருவாக்கியுள்ளனர்.

புதிய தொழில்நுட்ப உருவாக்கம்

புதிய தொழில்நுட்ப உருவாக்கம்

ஜங்கிள் புக் திரைப்படத்தை இயக்கிய அதே இயக்குனர், ஜான் ஃபேவரூவை வைத்தே 'லயன் கிங்' படத்தையும் ரீமேக் செய்திருக்கிறது டிஸ்னி நிறுவனம். ஜங்கிள் புக் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையில் சில புதிய தொழில்நுட்ப மாற்றங்களை மேற்கொண்டு, இந்த புதிய லயன் கிங் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஃபோட்டோ ரியலிஸ்டிக் அனிமேஷன் தொழில்நுட்ப முறை

ஃபோட்டோ ரியலிஸ்டிக் அனிமேஷன் தொழில்நுட்ப முறை

ஃபோட்டோ ரியலிஸ்டிக் அனிமேஷன் என்ற தொழில்நுட்ப முறைப்படி தற்பொழுது இந்த லயன் கிங் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. லயன் கிங் திரைப்படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களும் விலங்குகள் என்பதனால் இந்த ஃபோட்டோ ரியலிஸ்டிக் அனிமேஷன் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

லயன் கிங் டிரைலர் சாதனை

லயன் கிங் டிரைலர் சாதனை

அண்மையில் வெளியான லயன் கிங் திரைப்படத்தின் டிரைலர் ஒரே நாளில் 22.46 கோடி பார்வைகளை எட்டி புது வைரல் சாதனைப் படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சமூகவலைத்தளங்களில் லயன் கிங் பற்றிய செய்திகள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்தத் திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
The Lion King remake trailer prompts a surge of interest as Disney mines its vault : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X