ஹா ஹா ஹா.. அசிங்கப்பட்டது ஆப்பிள்..!
தொழில்நுட்ப உலகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் கடந்த 9-ஆம் தேதி இரவு வெளியானது. கடந்த 2014-ஆம் ஆண்டு அருமையான ஐபோன்களை வழங்கி வாடிக்கையாளர்களிடம் "ஆஹா.. ஓஹோ..!" என்று பெயர் வாங்கிய ஆப்பிள், இந்த வருடம் வாங்கியது என்னவோ பெரிய பெரிய 'பல்பு'களும், கேலிப்பேச்சும், கிண்டலும் தான்..!
அறிமுகமான ஆப்பிள் கருவிகள்..!!
புதிய கருவிகள் வெளியான உடன் "ஆப்பிள் கிட்ட இருந்து கொஞ்சம் ஓவரா தான் எதிர்பாத்துட்டோமோ..!?" என்று கடுப்பாகிப்போன மக்கள் சிலர் செய்த வேலைகளை கீழ்வரும் ஸ்லைடர்களில் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

ஆப்பிள் :
பென்சில் உடன் வெளியான 12.9 இன்ச் ஆப்பிள் ஐபாட் ப்ரோ (iPad Pro) இது தான்..!

செம்ம கலாய் :
வெளியான ஆப்பிள் கருவியின் அளவு மிகவும் பெரியது என்றும், அதுவும் அந்த பென்சில் சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது என்றும் மக்கள் சிலர் அதை 'கலாய்த்து' வெளிவிட்ட கருத்துக்கள் இதோ..!

என்னாது 12.9 'இன்ச்'சா..??
ஏன் இதுக்கு மேல பெருசா செய்ய முடியாதா..?!

12.9 இன்ச்..!
அவ்வளவு பெருசாவா தெரியுது..!?

ஹல்க்..!
இதை என்னால மட்டும் தான் டெலிவரி பண்ண முடியும் போலயே..!!?

அறிமுகம்..!
'ஐபாட் ப்ரோ'க்கான ஸ்பெஷல் செல்பீ ஸ்டிக்..!

எனக்கு ஓகே தான்..!
எப்படியோ தட்டு தடுமாறி யூஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்..!

சரிப்பட்டு வராது :
2010-ஆம் ஆண்டு, ஆப்பிளுக்கு ஸ்டைலஸ் (பென்சில்) சரிப்பட்டு வராது என்று ஸ்டீவ் ஜாப்ஸ் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியமானது :
ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பாத ஒன்றை (ஸ்டைலஸ்) ஆப்பிள் செய்து இருப்பது ஆரோக்கியமானது என்று தான் தெரிகிறது என்ற கருத்து..!

ஒப்பீடு :
ஆப்பிளின் ஸ்டைலஸ் பென்சிலை பல் குத்தும் குச்சியோடு ஒப்பிட்டு ஒரு கலக்கல் கற்பனை..!

பெருமை :
ஆப்பிள் பென்சிலை முதன் முதலில் பயன்படுத்தியது நான் தான் என்று போஸ்ட் செய்த காமெடி கில்லாடி..!

முதல் கஸ்டமர் :
ஆப்பிள் ஐபாட் ப்ரோவை வாங்கி கொண்டு வந்த முதல் கஸ்டமர்..!

கலாய்க்க ஒரு அளவே இல்லையா..!
அடுத்த வெளியாக போகும் ஐபாட் ஹோம் அவுட்சைட் டிரைவ்-இன் எடிஷன் இது தானாம்..!

எவன் பாத்த வேலைடா இது..?
கலைஞர்கள் கையில் புதிய ஐபாட் ப்ரோ..!

பின்னேற்றம்..!
'முன்னேறு வாங்கனு பார்த்த பின்னாடி போய்ட்டே இருக்காங்களே' என்ற கடுப்பில் போட்ட ட்வீட்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications