கூகுள் மேப்ஸ் வசதியால் ஏற்பட்ட சிக்கல்: மன்னிப்பு கேட்ட மாப்பிள்ளை வீட்டார்.!

|

கூகுள் மேப்ஸ் வசதியை உலகளவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் வரும் ஒவ்வொரு அம்சமும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

 ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த

அதேபோல் ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்து கொண்டு செல்வோருக்கு பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.

கூகுள் மேப்

இந்நிலையில் இந்தோனேஷியாவில் கூகுள் மேப் வழிகாட்டுதலால் மணமகன் குடும்பத்தினர் வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்றதால் குழுப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றி விரிவான தகவல்களை பார்ப்போம்.

இலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா?இலவசமாக சாம்சங் கேலக்ஸி ஏ 32 5 ஜி கொடுக்கும் அமெரிக்காவின் T-Mobile.. இந்தியாவின் ஜியோ 'இதை' செய்யுமா?

சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம்

அதாவது சில நேரங்களில் கூகுள் மேப்ஸ் பல நபர்களை சுற்றலில் விட்ட கதைகள் உண்டு. அப்படியான சம்பவம் தான்

இந்தோனேஷியாவில் அரங்கேறியிருக்கிறது. அதன்படி இந்தோனேஷியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.

பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்: தினசரி 2ஜிபி டேட்டா.! வியக்கவைக்கும் வேலிடிட்டி?பிஎஸ்என்எல் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்: தினசரி 2ஜிபி டேட்டா.! வியக்கவைக்கும் வேலிடிட்டி?

மத்திய ஜாவாவில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார்

மேலும் இந்திதோனேசியாவில் இருக்கும் மத்திய ஜாவாவில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கார் மற்றும் வேனில் செல்ல திட்டமிட்டனர். குறிப்பாக மண்டபம் இருக்கும் பகுதியை தெரிந்துகொள்ள கூகுள் மேப்ஸ் வசதியை அனைவரும் பயன்படுத்தியுள்ளனர்.

BSNL அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் கிடைக்கும் ரூ.398 திட்டம்.. இன்னும் கூடுதலாக 90 நாட்களுக்கு..BSNL அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் கிடைக்கும் ரூ.398 திட்டம்.. இன்னும் கூடுதலாக 90 நாட்களுக்கு..

வேறொரு மணமகள் மண

அதாவது கூகுள் மேப்ஸ் மூலம் வழியை பார்த்து கொண்டு அனைவரும் சென்று கொண்டிருந்தார்கள். அந்த சமயம் ஒரு மண்டபத்ததை கூகுள் மேப்ஸ் காட்டியுள்ளது. உடனே அனைவரும் இறங்கி மண்டபத்தின் உள்ளே சென்றுள்ளனர். பின்பு அந்த மண்டபத்தில் வேறொரு மணமகள் மண மேடையில் அமர்ந்திருப்பதை கண்டு அனைவரும் அதரிச்சி அடைந்தனர்.

அதாவது ஜாவா

அதன்பின்பு கூகுள் மேப் வழிதவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு அனைவரையும் அழைத்து சென்றது என்பது தெரியவந்தது. அதாவது ஜாவா தீவில் இரு மண்டபங்கள் அடுத்த அடுத்த தெருவில் உள்ளதால் தான் கூகுள் மேப்ஸ் சற்று குழம்பிவிட்டது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சும்மா இல்ல., 27% வரை தள்ளுபடி: சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் அதிரடி சலுகை!சும்மா இல்ல., 27% வரை தள்ளுபடி: சாம்சங் ஸ்மார்ட்போன் வாங்க சரியான நேரம்- பிளிப்கார்ட் அதிரடி சலுகை!

ஒரு வழியாக சரியான மண்டபத்திற்கு

எனவே அங்கிருந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு பின்னர் சரியான பாதையை அங்கிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு ஒரு வழியாக சரியான மண்டபத்திற்கு வந்தடைந்தனர். மேலும் கூகுள் மேப்ஸ் வசதியால் வழி தவறி வேறொரு திருமண மண்டபத்திற்கு சென்ற மாப்பிள்ளை வீட்டாரால் அப்பகுதியினரிடையே சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்று தகவல் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The groom went home to the wrong wedding hall using Google Maps in Indonesia: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X