வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி: களத்தில் இறங்கிய இந்திய அரசு.!

|

அண்மையில் வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப்-ன் புதிய தனியுரிமைக் கொள்கையை (பிரைவசி பாலிசி) மாற்றியமைக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது குறித்து இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப

அமைச்சகமானது வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி வில் காட்கார்டுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

குறிப்பாக அந்த கடித

குறிப்பாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால், வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய பயனர் தளமாக இந்தியா உள்ளது என்றும், பின்பு அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள்

அதேபோல் வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் ஆனது இந்திய மக்களின் தேர்வு மற்றும் சுயாட்சிக்கான தாக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றன என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது லேப்டாப்பிலும் கம்ப்யூட்டரிலும் Jio Tv பார்க்கலாம்.. எப்படித் தெரியுமா?

முன்மொழியப்பட்ட மாற்றங்களை திரும்ப

மேலும் முன்மொழியப்பட்ட மாற்றங்களை திரும்ப பெறவும், தகவல் தனியுரிமை, தேர்வு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பான அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவும் இந்திய அமைச்சகம் வாட்ஸ்அப்பைக் கேட்டுக் கொண்டுள்ளது.

கள் முறை

குறிப்பாக அந்த கடிதத்தில், இந்தியர்கள் முறையாக மதிக்கப்பட வேண்டும் என்றும், வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைகளில் உள்ள ஒருதலைப்பட்சமான மாற்றங்கள் மற்றும் நியாயங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

உதவ நாங்கள் விரும்புகிறோம்.

ஆனால் பிப்ரவரி 8-ம் தேதி கட்டவிழ்த்துவிடப்படவிருந்த புதிய தனியுரிமைக் கொள்கையை மே 15 ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக வாட்ஸ்அப் ஏற்கனவே அறிவித்துள்ளது. பின்பு எங்களது சமீபத்திய அப்டேட்டில் எவ்வளவு குழப்பம் உள்ளது என்பதை நாங்கள் பலரிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஏராளமான தவறான தகவல்கள் பயனர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளன, எங்கள்

கொள்கைகளையும் உண்மைகளையும் புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவ நாங்கள் விரும்புகிறோம்." என்றும் வாட்ஸ்அப் நிறுவனம் மற்றொரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 வாட்ஸ்அப் நிறுவனம் எண்ட் டூ எண்ட்

அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷனில் உறுதியுடன் இருப்பதாகவும், இந்த புதுப்பிப்பு பேஸ்புக்கோடு தரவைப் பகிரும் திறனை விரிவாக்குவதில்லை என்றும் வாட்ஸ்அப் கூறியுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The Government of India has asked WhatsApp to change its new privacy policy: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X