Home
News

Glyph Matrix: மொழியாக மாறும் Micro-LED.. ஒரு புது மேட்ரிக்ஸ் டிஸ்பிளே அனுபவம்.. கிளிஃப் மேட்ரிக்ஸ் எப்படி?

நத்திங் போன்களில் வழக்கமாக கிடைக்கும் கிளிஃப் இன்டர்பேஸ் (Glyph Interface) ஆனது நத்திங் போன் 3 (Nothing Phone 3) மாடலில் கிளிஃப் மேட்ரிக்ஸ் (Glyph Matrix) டிஸ்பிளே மூலம் ஒட்டுமொத்தமாக மாறி இருக்கிறது. இந்த முறை 489 மைக்ரோ-எல்இடிகளுடன் (micro-LEDs) நோட்டிபிகேஷன்களை தாண்டி புது அனுபவத்தை கொடுக்கிறது. இந்த மைக்ரோ-எல்இடிகள் ஆனது ஒரு மொழியைப் போல ஸ்மார்ட்போன் யூசர்களை கனெக்ட் செய்கிறது. இந்த கிளிஃப் மேட்ரிக்ஸ் என்னவெல்லாம் செய்கிறது?

* மைக்ரோ-எல்இடி டிஸ்பிளே (micro-LED Display):
* கிளிஃப் மிரர் (Glyph Mirror):
* கிளிஃப் டாய்ஸ் (Glyph Toys):
* கிளிஃப் பட்டன் (Glyph Button):
* கிளிஃப் நேட்டிபிகேஷன் (Glyph Notifications):

Glyph Matrix: மொழியாக மாறும் Micro-LED.. ஒரு புது மேட்ரிக்ஸ் டிஸ்பிளே!

மைக்ரோ-எல்இடி டிஸ்பிளே:
கிளிஃப் மேட்ரிக்ஸ் என்பது நத்திங் ஃபோனின் 3 பேக் பேனலில் கொடுக்கப்பட்ட வட்ட வடிவிலான மைக்ரோ-எல்இடி டிஸ்பிளேவாகும். இதுபோன்று பல்வேறு போன்களின் இருக்கிறது. ஆனால், இந்த டிஸ்பிளேவில் 489 மைக்ரோ-எல்இடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவொரு மோனோக்ரோம் டாட்-மேட்ரிக்ஸ் (Monochrome dot-matrix) டிஸ்பிளே அனுபவத்தை கொடுக்கிறது.

இதை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட கான்டாக்ட்ஸ், ஆப்ஸ் மற்றும் கீ-வேர்ட்கள் அடிப்படையில் கஸ்டமைஸ் செய்து கொள்ள முடியும். இது வழக்கமாக கிடைக்கும் கிளிஃப் இன்டர்பேஸ் போல் வெறும் லைட்களில் மட்டுமே வேரியேஷன் காட்டாமல். 489 மைக்ரோ-எல்இடிகளை பயன்படுத்தி டிஸ்பிளேவை போல உங்களுக்கு நோடிபிகேஷன்களை கொடுக்கும்.

Glyph Matrix: மொழியாக மாறும் Micro-LED.. ஒரு புது மேட்ரிக்ஸ் டிஸ்பிளே!

கிளிஃப் மிரர்:
பேக் கேமரா சிஸ்டம் மூலம் செல்பீகளை எடுக்க இந்த கிளிஃப் மிரர் பயன்படுத்தப்படுகிறது. இதை வியூஃபைண்டராக (Viewfinder) பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், லோவ்-ரெசொலூஷனில் மோனோகுரோம் போன்ற டாட்-மேட்ரிக்ஸ் அடிப்படையிலான போட்டோக்களை மட்டுமே கொடுக்கும். ஆனால், இதுவொரு புதிய அனுபவம்தான் என்பதை மறுக்க முடியாது.

கிளிஃப் டாய்ஸ்:
மைக்ரோ-எல்இடிகள் மூலம் கஸ்டமைக்ஸ் செய்யப்பட்ட யூடிலிட்டிகள், இன்டராக்சன்கள் மற்றும் கேம்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் ஸ்பின் தி பாட்டில் (Spin the bottle), ராக் பேப்பர் சிஸ்சர் (Rock paper scissors), டிஜிட்டல் கிளாஸ் (Digital clock) போன்ற பல்வேறு பீச்சர்கள் மற்றும் கேம்கள் இடம்பெற்றிருக்கும். இதை கன்ட்ரோல் செய்து கொள்ள பட்டன் கிடைக்கிறது.

Glyph Matrix: மொழியாக மாறும் Micro-LED.. ஒரு புது மேட்ரிக்ஸ் டிஸ்பிளே!

கிளிஃப் பட்டன்:
கிளிஃப் மேட்ரிக்ஸ் டிஸ்பிளேவுக்கு கீழேயே அதை கன்ட்ரோல் செய்வதற்காக பிரத்யேக கிளிஃப் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆக்டிவேட்டிங் ஃபங்ஷன்கள், கேம் விளையாடுதல் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இது தேவைப்படும்பட்சத்தில் பயன்படுத்தலாம். மேலும், வழக்கமாக கிடைக்கும் கன்ட்ரோல்கள் செட்டிங்ஸ் மூலம் அனுக கிடைக்கிறது.

கிளிஃப் நேட்டிபிகேஷன்:
நத்திங் போன்களில் வழக்கமாக கிடைக்கும் கிளிஃப் இன்டர்பேஸ் போலவும் இது செயல்படுகிறது. அதாவது, கால்கள், எஸ்எம்எஸ்கள், ஆப் நோட்டிபிகேஷன்களுக்கு அலெர்ட் கொடுக்கிறது. ஆனால், எல்இடி லைட் எஃபெக்ட்களை போலல்லாமல், மினி டிஸ்பிளே போல அதை செய்கிறது. இதுபோக அதில் பல்வேறு ஃபங்ஷன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதை கீழே பார்க்கலாம்.

Glyph Matrix: மொழியாக மாறும் Micro-LED.. ஒரு புது மேட்ரிக்ஸ் டிஸ்பிளே!

* டைம் (டிஜிட்டல் கிளாக் & சோலார் கிளாக்)
* பேட்டரி லெவல்
* ஸ்டாப்வாட்ச் மற்றும் டைமர்
* கேமரா கவுண்ட்டவுன்
* வால்யூம் இன்டிகேட்டர்

கிளிஃப் மேட்ரிக்ஸ் எப்படி?
இது கிட்டத்தட்ட செகண்டரி டிஸ்பிளே அனுபவத்தை கொடுக்கிறது. அதுவும் அதிக பேட்டரி கன்சம்பன் இல்லாமல். அதே நேரத்தில் கிளாசிக் மற்றும் ஸ்மார்ட்போன் யூசர்களை எங்கேஜ் செய்யும்படி இருக்கிறது. இதில் காலர் ஐடி (Caller ID) சேர்க்கப்படும் என்று நத்திங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பல்வேறு பீச்சர்கள் கிடைத்தால், வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
The Glyph Matrix Evolved Interactive Display Functionality Customization Micro Experiences
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X