Home
News

சத்தமில்லாமல் ஜியோ நிறுவனம் செய்த வேலை: இந்தியாவின் முதல் ரூஃப் டாப் ஓபன் தியேட்டர்.!

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மும்பையில் தனித்துவமான வசதியுடன் ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் எனும் ஷாப்பிங் மால் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் முதல் ரூஃப் டாப் ஓபன் தியேட்டர் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ள ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் ஷாப்பிங் மால் திறக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ்

அதாவது மும்பையின் பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் இந்த ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் ஷாப்பிங் மால் 17.5 ஏக்கர் பரப்பளவில்
அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஷாப்பிங் மாலில் பொழுதுபோக்கு அம்சங்கள், சில்லரை வர்த்தகம், உணவு போன்றவற்றில்இதுவரை இந்தியாவில் இல்லாத அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

 கவர்ந்திழுக்கும் அம்சங்களை கொண்டுள்ளது

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பொதுமக்களை அதிகம் கவர்ந்திழுக்கும் அம்சங்களை கொண்டுள்ளது ஜியோ ஷாப்பிங் மால். அதேபோல் இந்த மாலில் பிரபலாமான உணவு வகைகள் இருக்கும் என்ற கூறப்படுகிறது. மேலும் இதில் ரூப் டாப் திரையரங்கமும் உள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

த மாலில் இடம்பெற்றுள்ளது ஒரு

அதாவாது இந்த மாலில் இடம்பெற்றுள்ளது ஒரு திறந்தவெளி தியேட்டர் ஆகும். மும்பையின் மிகப்பெரிய திரையை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இங்கு 290 கார்களை நிறுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் பிவிஆர் நிறுவனத்தால் இந்த தியேட்டர் இயக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தியேட்டர் வரும் நவம்பர் 5-ம் தேதி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

 பொதுமக்கள்

Nine Dine, Motodo என உலகப் புகழ்பெற்ற உணவகங்கள் ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் மாலில் உள்ளன என்று தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளன. பின்பு உலகின் மிகச்சிறந்த உணவுகள் இந்த ஜியோ ஃவேர்ல்ட் டிரைவ் ஷாப்பிங் மாலில் கிடைக்கும் என்றுகூறப்படுகிறது. அதேபோல் பொதுமக்கள் தங்களது செல்ப்பிராணிகளையும் இங்கு அழைத்து வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி பே கிளப் என்ற தனியார்

குறிப்பாக இந்த மாலில் தி பே கிளப் என்ற தனியார் கிளப் ஒன்று பல வசதிகளுடன் தொடங்கப்படுகிறது. இது நகரத்திலேயே சிறந்த விளையாட்டு மற்றும் பொழுபோக்கு வசதிகளை தரக்கூடியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் உணர்வுபூர்வமாக செழுமைப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதே இந்த ஜியோ ஷாப்பிங் மால்.குறிப்பாக இந்த புதுமையான ஷாப்பிங் மால் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள சிறப்பான சில்லரை வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு அனுபவத்தை மும்பைக்கு கொண்டுவந்திருக்கிறோம் என ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில் இயக்குனரான ஈஷா அம்பானி தகவல் தெரிவித்துள்ளார்.

 ஜியோபோன் நெக்ஸ்ட்

மேலும் இந்நிறுவனத்தின் ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின்

இப்போது ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன்
மாடல் 5.45-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 720×1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா
கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். குறிப்பாக இதன் டிஸ்பிளே
வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

நெக்ஸ்ட் ஆனது 2ஜிபி ரேம் மற்

ஜியோபோன் நெக்ஸ்ட் ஆனது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512ஜிபி வரை மேலும் விரிவாக்கக்கூடியது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகள் மற்றும் ஆண்ட்ராய்டு வெளியீடுகளைப் பெறுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 215 மூலம் இயக்கப்படுகிறது. இதுதவிர 4ஜி, டூயல் சிம்கள், ப்ளூடூத் 4.1, மைக்ரோ-யூஎஸ்பி போர்ட்,
3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட்

க்ஸ்ட் மாடலில் 3500 எம்

ஜியோபோன் நெக்ஸ்ட் மாடலில் 3500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் கூகுள் உடன் இணைந்து கட்டமைக்கப்பட்ட PragatiOS வசதி உள்ளது. கூகுள் அம்சங்களான Read Aloud மற்றும் Translate Now போன்ற அம்சங்களும் பிரகதி OS இல்
ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனில் 13 எம்பி ரியர் கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம். ஆனால் இந்த சாதனம் கைரேகை சென்சாருடன் வரவில்லை, அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் பேட்டர்ன் மற்றும் பின் அடிப்படையிலான அங்கீகாரத்தை நம்பியிருக்க வேண்டும் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
The first open air rooftop drive-in theater to open in Mumbai on November 5th: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X