இன்டெல் பிராசஸரில் முதல் லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்!

உயர்ந்த தொழில் நுட்பங்களை வழங்கும் இன்டெல் பிராசஸரை கொண்டு இயங்கும் சோலோ எக்ஸ்-900 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் தேதியை லாவா நிறுவனம் வெளியி்ட்டுள்ளது.
1.6 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஏட்டம் பிராசஸரை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளதால், ஹைப்பர் த்ரெட்டிங் தொழில் நுட்பத்தினையும் வழங்கும். இதனால் அதி வேகத்தினையும் பெற முடியும்.
4.03 இஞ்ச் எல்சிடி திரை கொண்டதால் சிறந்த வகையில் தகவல்களை தெளிவாக பார்க்கலாம். ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், ஆன்ட்ராய்டு 4.0 அப்கிரேட் வசதியையும் பெறலாம். லாவா சோலோ ஸ்மார்ட்போனில் கேமரா பற்றி கவலையே இல்லை.
அதிகபட்சமாக 8 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும். 3ஜி நெட்வொர்க் வசதிக்கு இந்த ஸ்மார்ட்போன் 5 மணி நேரம் வரை சப்போர்ட் செய்யும். லாவா சோலோ ஸ்மார்ட்போனை வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி குரோமா ஸ்டோர்களில் விற்பனைக்கு வர உள்ளது.
அதோடு மே மாதத்தில் ஆன்லைன் ஸ்டோர்களிலும் இந்த ஸ்மார்ட்போனை பெற முடியும். தொழில் நுட்ப தகவல்களை தெரிந்து கொள்வதை விட இந்த ஸ்மார்ட்போனின் விலையை தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் இருக்கும் தான். லாவா சோலோ எக்ஸ்-900 ஸ்மார்ட்போன் ரூ.22,000 விலை கொண்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications