ஒரே ஒரு லேப்டாப்.! வீடு வாசலை இழந்த குடும்பம்.! நடந்தது இதுதான்.!

|

லேப்டாப்புகள் வந்த பிறகு மேசை கணினிகளின் விற்பனை கணிசமாக குறைந்துவிட்டது. அந்த அளவிற்கு லேப்டாப்புகள் மக்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. அதே சமயம் இந்த லேப்டாப்புகள் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் அதன் பேட்டரி மிகுந்த சக்தியுடன் இருக்க வேண்டும்.

து. குறிப்பாக பேட்டரி 15%க்கும்

பின்பு நீண்ட நேரம் தொடர்ந்து லேப்டாப்பின் பேட்டரியை சார்ஜில் வைக்கக் கூடாது. குறிப்பாக பேட்டரி 15%க்கும் குறைவான சார்ஜ் இருக்கும் போது மட்டும் மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும். குறிப்பாக பேட்டரி முழு சார்ஜில் இருக்கும் போது அதை மீண்டும் சார்ஜில் வைத்தால் பேட்டரி மிக விரைவாக பலவீனமாகிவிடும்.

இருந்ததால் ஒரு குடும்பம்

இந்த நிலையில் பிரிட்டனில் படுக்கை அறையில் லேப்டாப்பை வைத்த இருந்ததால் ஒரு குடும்பம் தங்களுக்கு சொந்தமான அனைத்து சொத்துகளையும் இழந்து தெருவுக்கு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சியோமி ரசிகர்களே உஷார்.! ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..சியோமி ரசிகர்களே உஷார்.! ரூ.33.3 லட்சம் மதிப்பிலான போலி Mi பொருட்கள் பறிமுதல்..

அங்கு விரைந்து சென்று

அதன்படி பிரிட்டனில் லிவர்பூல் பகுதியில் Rebacca என்பவரின் படுக்கையறையில் இருந்து எதோ சத்தம் கேட்டுள்ளது, மகளின் படுக்கை அறையில் இருந்து இவ்வாறு சத்தம் வருவதை கவனித்த Joanne Bresnahan அங்கு விரைந்து சென்று பார்த்தபோது அறை முழுவதும் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தண்ணீர் எடுத்துக் கொண்டு தீயை அணைக்க

பின்பு அங்கு இருந்த வாளிகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டு தீயை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் நிலைமை கை மீறிப் போகவே வீடு முழுவதும் தீப்பற்றி அனைத்தும் எரிந்து நாசாமாகியது. குறிப்பாக படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்பில் பிடித்த தீ தான் வீடு முழுவதும் இப்படி கபளீகரம் செய்துவிட்டது.

லேப்டாப்பினால் வீடு

சமீபத்தில்தான் Rebacca-வின் மூளையில் ஏற்பட்ட புற்று நோயை அகற்ற பெரும் செலவு செய்தது Joanne-வின் குடும்பம். ஆனால் தற்போது லேப்டாப்பினால் வீடு முழுவதும் எரிந்து போனதால் பொதுமக்களின் உதவியை கேட்கும் நிலைமை இக்குடும்பத்துக்கு உண்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்து.

அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின்

லேப்டாப் மின் இணைப்பில் இருக்கும் போது அதன் பேட்டரியை அகற்ற வேண்டாம். அதுபோல் பேட்டரி இல்லாமல் நீண்ட நேரம் லேப்டாப்பை மின் இணைப்பில் வைத்து இயக்க வேண்டாம். பேட்டரியை ரிசார்ஜ் செய்வது நல்லது.

சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில்

பேட்டரியை தேவைக்கேற்ப சார்ஜில் வைத்திருப்பதால் காலப்போக்கில் பேட்டரியின் திறன் பலவீனமடையும். எல்லா எலக்ட்ரானிக் சாதனங்களிலும் இந்த யதார்த்தம் இருக்கிறது. பேட்டரி பலவீனமடையும் போது அது லேப்டாப்பின் ஆயுளையும் பலவீனப்படுத்தும். ஆக உண்மையிலேயே பேட்டரி பலவீனமடையும் போது புதிய பேட்டரியை மாற்றுவது நல்லது. அப்போது லேப்டாப்பின் ஆயுள் கெடாமல் இருக்கும்.

Best Mobiles in India

English summary
The fire which is said to have started from a laptop has completely gutted house: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X