போலி சார்ஜ்சரால் பெண்ணின் கழுத்து வெந்தது: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பெண்.!
பெண் ஒருவர் தான் ஐ போனை பயன்படுத்தி வந்துள்ளார். அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்காக போலியான சார்ஜ்சரையும் உபயோகித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அவர் உறங்க சென்ற நிலையில், படுக்கையில், அந்த சார்ஜ்சரை ஆன் செய
பெண் ஒருவர் தான் ஐ போனை பயன்படுத்தி வந்துள்ளார். அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்காக போலியான சார்ஜ்சரையும் உபயோகித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று அவர் உறங்க சென்ற நிலையில், படுக்கையில், அந்த சார்ஜ்சரை ஆன் செய்துள்ளார்.

அப்போது, அதில் இருந்து மின்சாரம் கசிந்து அவரின் கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

போலியான சார்ஜ்கள்:
தற்போது உலகம் முழுக்கவும் குறிப்பிட்ட நிறுவனங்களின் தராமான தயாரிப்புகளை போலவே போலியான சார்ஜ்கள் சந்தையில் உலா வருகின்றன.
இந்த சார்ஜ்கள் பார்ப்பதற்கு அசல் போலே தோன்றமளிக்கும். அதில் உள்ள பெயர் மற்றும் எழுத்துகள், சிம்பள் உள்ளிட்டவைகளில் மட்டும் சிறிய மாற்றம் இருக்கும். இதன் மூலம் நாம் போலியான சார்ஜர் என்று அடையாளம் காணலாம்.

போலி சார்ஜ்சரால் விபத்துகள்:
நாம் போலி சார்ஜ்ரை நாம் அறிந்தும் அறியாமலும் பயன்படுத்துவதால், ஒரு சில நேரங்களில் அது வெடித்து அசம்பாவிதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு நாடுகளிலும் ஏற்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் நம் உயிருக்கும் ஆபத்துகள் ஏற்படுகின்றன.

சார்ஜிங் போடுதல்:
நாம் போலி சார்ஜ்களை பயன்படுத்தி உறங்க செல்லும் முன் நமக்கு அருகாமையில் வைத்து விட்டு, சார்ஜ் போடுகின்றோம். இதனால் நமது உயிருக்கும் ஆபத்து ஏற்படுகின்றது.
ஒரு சில நேரங்களில் வெடிக்கும் விபத்தால், தீக்காயம் போன்ற விபத்துகளும், உயிரிக்கு ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன. இதனால் நாம் உறங்க செல்லும் முன் அருகாமையில் சார்ஜிங் போடுதலை தவிர்க்க வேண்டும்.

சிகிச்சைக்கு வந்த பெண்:
பெண் ஒருவர் கழுத்து பகுதியில் ஏரிச்சல் ஏற்படுவதாக அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் சி.எஸ். மாட் குழந்தைகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தார்.
அப்போது, அவரின் கழுத்தில் 2ம் நிலை தீக்காயம் இருந்தது. இதையடத்து, மருத்துவர்கள், அவர் கழுத்தில் அணிந்திருந்த நெக்லஸைக் கழற்றிப் பார்த்தனர். அதில் மின்சாரம் தாக்குதல் இருந்தது தெரியவந்தது.

பெண்ணிடம் விசாரணை:
சார்ஜரை ஆன் செய்துவிட்டு போனை அதில் இணைக்காமல் படுக்கையில் அப்படியே போட்டிருந்ததாக விளக்கம் அளித்தார். சார்ஜரின் மின்சாரத்தைக் கடத்தும் முனை பெண்ணின் உலோக நெக்லஸில் பட்டதால் இவ்வாறு ஏற்பட்டிருக்கக் கூடும் என கணித்துள்ளனர்.

போலி ஐபோன் சார்ஜ்சர்:
ஐபோனின் அசல் சார்ஜர் உள்ள நிலையில் சிலர் தெரிந்தோ, தெரியாமலோ ஜெனரிக் எனப்படும் ஆப்பிள் நிறுவனமல்லாத போலி சார்ஜரை வாங்கிப் பயன்படுத்துவதாகவும், அவற்றில் 400 சார்ஜரில் பரிசோதனை மேற்கொண்டால் 3 மட்டுமே தேர்ச்சி பெற்று 99 சதவீதம் பாதுகாப்பில் தோல்வியடைவதாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்பு குறியீடு :
உண்மையான ஐபோன் சார்ஜரின் பின்களுக்கு இடையே பாதுகாப்புக் குறியீடு இருக்கும். பிளக்கின் அடிப்பாகத்தில் அடர் நிறத்தில் அல்லாமல் வெளிர் சாம்பல் நிறத்தில் குறியீடுகள் இருக்கும். பாதுகாப்பு அலாரம் என்ற வார்த்தை அச்சிட்டிருப்பதில் பிழை போன்றவற்றைக் கொண்டு போலி சார்ஜர்களை அடையாளம் காணலாம்.


Click it and Unblock the Notifications