விண்கல் பூமியில் மோதி உருவான 555.55 காரட் அரியவகை கருப்பு வைரம்- ஆன்லைன் மூலம் ஏலம்: மதிப்பு என்ன தெரியுமா?

|

தி எனிக்மா என்று பெயரிட்டுள்ள இந்த அரிய ரத்தினம் விண்வெளியில் இருந்து வந்ததாக நம்பப்படுகிறது. விண்கல் பூமியில் மோதி படிந்து அதன் மூலம் இந்த வைரம் உருவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த அளவில் கிடைக்கும் இயற்கையான வைரம் மிகவும் அரிதானது என கூறப்படுகிறது. உலகின் மிகவும் அரியவகை கருப்பு நிற வைரம் தற்போது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருப்பதோடு விரைவில் ஏலத்திற்கும் வர இருக்கிறது. விண்கல் பூமியில் மோதி உருவானதாக கூறப்படும் தி எனிக்மா என்ற 555.55 காரட் அரியவகை கருப்பு வைரம் ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற வைரக்கல்

கருப்பு நிற வைரக்கல்

இயற்கையாக உருவான இந்த கருப்பு நிற வைரக்கல் ஆனது மிகப் பெரிய அளவில் இருக்கிறது. இது லண்டனில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது. இது 6.8 மில்லியன் டாலர் வரை ஏலத்தில் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 555 கேரட் எடையுள்ள இந்த வைரமான கருப்பு நிறத்தில் இயற்கையாகவே பெரிதாக இருக்கிறது. இந்த வைரமானது சுமார் 260 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் அல்லது சிறுகோள் பூமியில் மோதி இருக்கலாம் எனவும் அதன்மூலம் இந்த வைரலம் உருவாகி இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எக்னிமா என பெயரிடப்பட்டுள்ள வைரக்கல்

எக்னிமா என பெயரிடப்பட்டுள்ள வைரக்கல்

எக்னிமா என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரமானது குறிப்பிட்ட நாட்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது. இந்த வைரமானது லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லண்டனில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட இருக்கிறது. இதன்பின் இந்த வைரம் அதாவது பிப்ரவரி 3 ஆம் தேதி ஆன்லைன் மூலம் ஏலத்திற்கு விடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கார்பனாடோ வைரங்கள் என்றும் அழைக்கப்படும் இந்த கருப்பு வைரங்கள் ஆனது பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு படிந்ததாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

விண்கல் மோதி உருவான வைரம்

இது விண்கல் மோதி இந்த வைரம் உருவாகி இருக்கலாம் என குறிப்பிட காரணம், இதில் நைட்ரோஜன் மற்றும் ஹைட்ரோஜனின் சுவடு அளவைக் கொண்டிருக்கின்றன, அதேபோல் விண்மீன் இடைவெளியில் காணப்படும் தனிமங்கள், விண்கற்களில் இருக்கும் ஆஸ்போர்னைட் என்ற கனிமமும் இவற்றில் காணப்படுகிறது.

பில்லியன் ஆண்டுகள் பழமையான அரிய அதிசயம்

பில்லியன் ஆண்டுகள் பழமையான அரிய அதிசயம்

லண்டனில் உள்ள சோதேபியின் நகை நிபுணர் நிகிதா பினானி தனியார் தளத்திற்கு அளித்த தகவலில் இந்த வைரத்தை "ஒரு உண்மையான இயற்கை நிகழ்வு" என குறிப்பிட்டார். மனித குலத்திற்கு தெரிந்த பில்லியன் ஆண்டுகள் பழமையான அரிய அதிசயங்களில் இதுவும் ஒன்று என இதை குறிப்பிடப்படுகிறது. இந்த வைரமானது 55 முகங்கள் கொண்டதாக இருக்கிறது. இந்த வைரத்தின் இந்திய மதிப்பு சுமார் ரூ.37 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த வைரக்கல்லில் ஐந்து என்ற தீம் சுற்றி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது 555.55 காரட்களுடன் இருக்கிறது எனவும் இது சரியாக 55 முகங்கள் கொண்டிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

இயற்கையாக உருவான கருப்பு நிற வைரக்கல்

இயற்கையாக உருவான கருப்பு நிற வைரக்கல்

இந்த வைரக்கல் முன்னதாக யாரிடம் இருந்தது என்ற தகவல் இல்லை, ஆனால் இந்த வைரத்தில் சோதேபி ஸ்டீபன் என்பவர் ஏலம் விடுகிறார். இயற்கையாக உருவான கருப்பு நிற வைரக்கல் என்பது மிகவும் அரிய வகையாகும். அதுவும் இது சிறுகோள் மோதி உறுவானது என கூறப்படுகிறது. இந்த வைரமானது பிப்ரவரி 3 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட இருக்கிறது. முன்னதாக தி கீ 10138 என்று அழைக்கப்படும் 101 காரட் வைரத்தின் விற்பனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் கடந்த ஆண்டு விற்கப்பட்ட போது கிரிப்டோகரன்சி மூலம் வாங்கப்பட்ட மிக விலை உயர்ந்த நகையாக மாறியது. இந்த வைரக்கல் ஆனதும் கிரிப்டோகரன்சி உடன் விற்கப்பட இருக்கிறது. பல ஏல நிறுவனங்களும் பெரிய விலை பொருட்களுக்கு கிரிப்டோகரன்சிகளை வரவேற்கத் தயாராகி வருகின்றன.

Credits: Sotheby's

Source: jewellermagazine.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
"The Enigma" Rare 555 Carat, 55 Facets Black Diamond is Going on Sale: Believed to Come From Space

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X