Home
News

ப்ளூ வேல் சேலன்ஞ் கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி.?

இந்த 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, யாரேனும் செய்து பார்த்தாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ உடனே உஷாராகி கொள்ளுங்கள்.

ப்ளூ வேல் சேலன்ஞ் கேமை தடுக்க ஒரே வழி - அதன் கொடூரமான 50 டாஸ்க்குகளையும், நாம் அனைவரும் அறிந்துவைத்துக் கொள்வது மட்டும் தான். வேறு உடனடி தீர்வுகளை இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. ஆக, பின்வரும் 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, யாரேனும் செய்து பார்த்தாலோ அல்லது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வண்ணம் நடந்து கொண்டாலோ - உடனே உஷாராகி கொள்ளுங்கள். மனநிலையோடு விளையாடும் ப்ளூ வேல் கேமில் சிக்கி தவிக்கும் ஒவ்வொரு நபருக்கும் உங்களின் உதவி நிச்சயம் தேவை.

ப்ளூ வேல் சேலன்ஞ் கேமை விளையாடுபவர்களை கண்டுபிடிப்பது எப்படி.?

ப்ளூ வேல் கேமின் கொடூரமான 50 டாஸ்க்குகளை அறிந்து கொள்வதால், அதை ப்ளூ வேல் கேம் விளையாடுவதற்கான ஒரு ஊக்குவிப்பாகவோ அல்லது மறைமுகமான தூண்டுதலாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம். முக்கியமாக ப்ளூ வேல் சேலன்ஞ் செய்யச்சொல்லும் கொடூரமான 50 டாஸ்க்குகள் மீது சுவாரசியம் கொள்ள வேண்டாம் - ஒரு 10 முதல் 15 டாஸ்க்குகள் வரை செய்து பார்ப்போம், பின்னர் கைவிட்டுவிடுவோமென்ற முட்டாள்த்தனமான முடிவுக்கும் வர வேண்டாம்.

உயிரோடு விளையாடும் ஒரு கேமிற்கு எதிராக நாம் செயல்படவுள்ளோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை ப்ளூ வேல் மீதான ஆர்வம் கிளம்பினால் கட்டுரை படிப்பதை கைவிடவும்.

அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து

அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து

டாஸ்க் 01 : ஒரு ரேஸர் கொண்டு கையில் "f57" என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.


டாஸ்க் 02 : அதிகாலை 4.20 மணிக்கு எழுந்து, கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை பார்க்க வேண்டும்.

திமிங்கிலத்தை வரைந்து

திமிங்கிலத்தை வரைந்து

டாஸ்க் 03 : ஒரு ரேஸர் கொண்டு நரம்புகளோடு சேர்த்து மணிக்கட்டை வெட்டிக்கொள்ள வேண்டும், ஆனால் மிகவும் ஆழமாக வெட்டிக்கொள்ள கூடாது.வெறும் 3 வெட்டுக்கள் நிகழ்த்தி அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


டாஸ்க் 04 : காகிதத்தில் ஒரு திமிங்கிலத்தை வரைந்து, அதை புகைப்படம் எடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள  வேண்டும்

தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்

டாஸ்க் 05 : நீங்கள் ஒரு திமிங்கிலமாக மாற தயாராக இருந்தால், காலின் மீது "YES" என்று வெட்ட வேண்டும். இல்லையென்றால் - கைப்பகுதியில் பல முறை வெட்டிக்கொள்ள வேண்டும் (அதாவது தன்னைத்தானே தண்டித்துக் கொள்ள வேண்டும்)


டாஸ்க் 06 : சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.

ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.

ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.

டாஸ்க் 07 : கையில் "f57" என்று செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.


டாஸ்க் 08 :
ஒரு ரஷியன் ஆன்லைன் சமூக ஊடக மற்றும் சமூக வலைப்பின்னல் சேவையான கொண்டெக்ட் (VKontakte) அக்கவுண்டில் "#i_am_whale" என்று ஸ்டேட்டஸ் டைப் செய்ய வேண்டும்.

வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும்

வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும்

டாஸ்க் 09 : பயத்தை நீங்கள் கடக்க வேண்டும்.


டாஸ்க் 10 : அதிகாலை 4:20 மணிக்கு எழுந்து ஒரு வீட்டுக்கூரைக்கு மேலே ஏற வேண்டும் (மிக உயரமான கூரையாக இருக்க வேண்டும்)

சைக்கடெலிக்,பயமுறுத்தும் வீடியோ

சைக்கடெலிக்,பயமுறுத்தும் வீடியோ

டாஸ்க் 11: ஒரு ரேஸர் கொண்டு கையில் திமிங்கலம் ஒன்றை செதுக்கி, அதை புகைப்படமெடுத்து கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.


டாஸ்க் 12: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் சைக்கடெலிக் (மாயத்தோற்றமான) மற்றும் பயமுறுத்தும் வீடியோக்களை நாள் முழுவதும் பார்க்க வேண்டும்.

உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்

உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்

டாஸ்க் 13: கண்காணிப்பாளர் அனுப்பி வைக்கும் இசையை கேட்க வேண்டும்.


டாஸ்க் 14: உதட்டை வெட்டிக்கொள்ள வேண்டும்.

கையை குத்திக்கொள்ள வேண்டும்

கையை குத்திக்கொள்ள வேண்டும்

டாஸ்க் 15 : பல முறை ஒரு ஊசி கொண்டு கையை குத்திக்கொள்ள வேண்டும்.


டாஸ்க் 16 : அவர்களுக்கு அவரே வலியை ஏற்படுத்தி, நோய்வாய்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பாலத்தின் மீதேறி

பாலத்தின் மீதேறி

டாஸ்க் 17 : கண்டுபிடிக்க முடிந்த மிகவும் உயரமான கூரையின் மீது ஏற வேண்டும், சில நேரம் விளிம்பில் நிற்க வேண்டும்.


டாஸ்க் 18 : ஒரு பாலத்தின் மீதேறி அதன் விளிம்பில் நிற்க வேண்டும்.

விளையாடுபவர் நம்பகமானவரா

விளையாடுபவர் நம்பகமானவரா

டாஸ்க் 19 : ஒரு கிரேன் மீது ஏற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் ஏறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.


டாஸ்க் 20 : விளையாடுபவர் நம்பகமானவரா எனக் கண்காணிப்பாளர் கேட்டறிவார்.

கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்

கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்

டாஸ்க் 21 : ஸ்கைப் உதவியுடன் மற்றொரு திமிங்கலத்துடன், அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன் பேச வேண்டும்.


டாஸ்க் 22 : ஒரு கூரை மீதேறி, அதன் விளிம்பில் உட்கார்ந்து கால்களை தொங்க விட வேண்டும்.

இரகசிமான டாஸ்க்

இரகசிமான டாஸ்க்

டாஸ்க் 23 : மற்றொரு சைஃபர் (Cipher) அதாவது ஒரு இரகசிய அல்லது மாறுவேடமிடப்பட்ட எழுத்து அல்லது குறியீடு சார்ந்த ஒரு டாஸ்க்.


டாஸ்க் 24 : இரகசிமான டாஸ்க்.

மரணிக்க வேண்டுமென்ற தேதி

மரணிக்க வேண்டுமென்ற தேதி

டாஸ்க் 25 : திமிங்கலத்துடன் (அதாவது கேம் விளையாடும் மற்றொரு நபருடன் அல்லது கண்காணிப்பாளருடன்) சந்திப்பு நிகழ்த்த வேண்டும்.


டாஸ்க் 26 : எப்போது மரணிக்க வேண்டுமென்ற தேதியைக் கண்காணிப்பாளர் சொல்வார், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தண்டவாளங்கள் உள்ள பகுதி

தண்டவாளங்கள் உள்ள பகுதி

டாஸ்க் 27 : அதிகாலை 4:20 மணிக்கு விழித்து அருகாமையில் கண்டுபிடிக்க முடிந்த தண்டவாளங்கள் உள்ள பகுதிக்கு செல்ல வேண்டும்.


டாஸ்க் 28 : ஒரு நாள் முழுவதும் யாருடனும் பேசக்கூடாது.

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு

ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு

டாஸ்க் 29 : "நான் ஒரு திமிங்கிலம்" என்ற சபதமெடுக்க வேண்டும்.


டாஸ்க் 30-49 : ஒவ்வொரு நாளும் அதிகாலை 4:20 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். கண்காணிப்பாளர் அனுப்பும் திகில் வீடியோக்கள் மற்றும் இசையை கேட்க வேண்டும், நாள் ஒன்றிற்கு ஒரு வெட்டை உடலில் நிகழ்த்த வேண்டும் மற்றும் ஒரு "திமிங்கலத்துடன்" பேச வேண்டும்.

குதித்து மரணிக்க வேண்டும்

குதித்து மரணிக்க வேண்டும்

டாஸ்க் 50 : ஒரு உயரமான கட்டிடத்தின் மேலே ஏறி அங்கிருந்து குதித்து மரணிக்க வேண்டும்.


இந்த 50 டாஸ்குகளில் எதாவது ஒன்றை, குறிப்பாக ஒருவர் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் எழுவதை கண்டால் அல்லது உடலில் காயங்கள் ஏற்படுத்திக் கொள்வதை அறிந்தால் அல்லது ஒருவர் தன்னை மிகவும் தனிமை படுத்திக்கொள்வதாய் உணர்ந்தால் உஷாராகி கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை சேர்ந்த அந்த நபரோ அல்ல உங்களின் நண்பரோ ப்ளூ வேல் கேமின் பிடியில் சிக்கியுள்ளார் என்பதை கண்டறிந்து கொள்ளுங்கள், அவரையும், அவரின் உயிரையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
The deadly list of tasks: Take clue from this list to prevent someone from following it. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X