30,000 இந்திய பெண்களை 'பரிசோதனை எலிகளாய்' பயன்படுத்திய பில் கேட்ஸ்..!

|

முதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, பிறர் நலனுக்காக ஏகப்பட்ட தொகையை நன்கொடையாய் வழங்கும் நபரை - ஃபிலான்த்ரோபி என்பர். ஆனால், அப்படியான ஒரு நபருக்கும் தடுப்பூசிகளுக்கும் என்ன தொடர்பு..? அதிலும் முக்கியமாக பில் கேட்ஸ் போன்ற ஒரு நபருக்கு - என்ன தொடர்பு..?!

இந்தியாவின் சில கிராமப்புற பகுதிகளில் சுகாதராம் சார்ந்த நடவடிக்கைகளில் பில் கேட்ஸின் தொண்டு நிறுவனம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்பே பில்கேட்ஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கசப்பான உண்மைகள் வெளியாகின.

சுகாதர தேவை :

சுகாதர தேவை :

பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா ஆகிய இருவரும் இணைந்து சுகாதரம் சார்ந்த தேவையை பூர்த்தி பெறாத நாடுகளுக்கு (ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் சில நாடுகள்) உதவும் நோக்ககத்தில் தங்களிடம் உள்ள பெருமளவு பணத்தை வழங்கி உதவ முடிவு செய்தனர்.

பழங்குடி கிராமம் :

பழங்குடி கிராமம் :

2009-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம் மாவட்டத்தில் உள்ள கம்மம் மாவட்ட பழங்குடி கிராமங்களில் ஹியூமன் பாபில்லோமா வைரஸ் (Human Papilloma Virus (HPV) அதாவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியானது பரிசோதனை செய்யப்பட்டது.

தடுப்பூசி :

தடுப்பூசி :

9-15 வயதுக்கு உட்பட்ட சுமார் 16000 பெண்களுக்கு 3 முறை கர்டாசில் (Gardasil) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கர்டாசில் தடுப்பூசியானது ஒரு மெர்க் நிறுவன தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

மருந்து நிறுவனம் :

மருந்து நிறுவனம் :

மெர்க் அண்ட் கோ (Merck & Co) என்பது ஒரு அமெரிக்க மற்றும் உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரச்சனை :

பிரச்சனை :

தடுப்பூசி போடப்பட்ட சில மாதங்கள் வரையிலாக ஒரு பிரச்சனையும் இல்லை, பின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களின் உடல்நிலை மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டுள்ளது, அதில் 5 பெண்கள் உயிர் இழந்தனர். பின் தான் இந்த பரிசோதனை பெருவாரியான கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

வதோதரா :

வதோதரா :

குஜராத்தில் உள்ள பழங்குடி கிராமமான வதோதராவிலும் சுமார் 14,000 பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியானது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அந்த பரிசோதனையிலும் 2 பெண்கள் மரணம் அடைந்துள்ளனர்.

மரண சம்பவங்கள் :

மரண சம்பவங்கள் :

இதுபோன்ற மரண சம்பவங்கள் இந்திய பழங்குடி கிராமங்களில் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் இதே மருந்தை கொண்டு பரிசோதிக்கப்பட்ட 2 பெண்கள் கொலம்பியாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. பின்பு தான் இந்திய அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஆந்திர பிரதேசத்தில் ஆய்வு செய்தது.

வலிப்புத்தாக்கங்கள் :

வலிப்புத்தாக்கங்கள் :

மார்ச் 2010-ஆம் ஆண்டு கம்மம் பழங்குடி கிராமத்தல் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து சுமார் 100 பெண்களுக்கும் மேல் வலிப்புநோய், வலிப்புத்தாக்கங்கள், வயிற்று வலி, தலைவலி மற்றும் மனநிலை ஊசல் போன்ற பாதிப்புகளை கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.

மாதவிடாய் பிடிப்புகள் :

மாதவிடாய் பிடிப்புகள் :

மேலும் அந்த பெண்கள் தங்கள் தேதிகளுக்கு முன்பாகவே மாதவிடாய் ஏற்படுவதாகவும், உடன் அதிக இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் பிடிப்புகள் ஏற்படுவதாகவும் புகார் அளித்துள்ளனர்.

கைநாட்டு வடிவில் சம்மதம் :

கைநாட்டு வடிவில் சம்மதம் :

பின்பு தான், படிப்பறிவில்லாத மக்களிடம் கைநாட்டு வடிவில் சம்மதம் வாங்கி கொண்டு சுகாதார சாக்கு என்ற பெயரில் சுமார் 30,000 பழங்குடி இந்திய பெண்கள் 'பரிசோதனை எலிகளாய்' பயன்படுத்தபட்டுள்ளது அம்பலமானது.

நிதி உதவி :

நிதி உதவி :

சுகாதாரத்திற்கு தகுந்த தொழில்நுட்ப திட்டம் (Program for Appropriate Technology in Health - PATH) என்ற பெயரில் இந்த திட்டமானது ஒரு அமெரிக்க்க என்ஜிஒ நிறுவனம் மூலம் தான் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்வது வேறு யாருமில்லை பில் மற்றும் மெலிண்டா தொண்டு நிறுவனம் தான்..!

விபரீதமான மனித பரிசோதனை :

விபரீதமான மனித பரிசோதனை :

எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும் கூட, இந்தியா மட்டுமின்றி பெரு, உகாண்டா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இது போன்ற விபரீதமான மனித பரிசோதனைகள் இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

மொபைல்போன்கள் விந்தணுக்களை 'எப்படியெல்லாம்' பாதிக்கிறது..!?


ஸ்மார்ட்போனில் ஆட்டோமேடிக் அப்டேட் : தடுப்பது எப்படி.??

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
The dark side of Bill Gates’ philanthropy. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X