ஆபிஸ் போக பிடிக்கலயா, இனி பிடிக்கும்..!
பலருக்கு ஆபிஸ் செல்லவே வெறுப்பாக இருக்கும். சிலருக்கு ஆபிஸ் இன்னும் சுவாரசியமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றுத்தோன்றும்.
கையடக்க கருவி விரும்பிகளின் புதிய காதல் !
இப்போது நாம் இங்கு காணவிருக்கும் கருவிகள், உங்கள் ஆபிஸ்களில் இருந்தால், பிடிக்காதவர்களுக்கெல்லாம் ஆபிஸ் பிடிக்கும், சுவாரசியம் தேடுபவர்களுக்கு கூடுதல் வசீகரம் கிடைக்கும்.

யூஎஸ்பி கப் வாம்மர்
வேலையில் மூழ்கி, சூடாக எதையும் பருக முடியாமல் போகும் நிலை இனி கிடையாது. இது உங்கள் கப்பில் இருப்பதை 30 நிமிடங்கள் வரை சூடாக வைத்திருக்க இது உதவும்.

இந்த கீ-போர்ட் இன்னும் சூப்பர்
இது வாட்டர் ப்ரூஃப் மற்றும் எளிதில் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவும், மடித்து ஒரு தட்டு தட்டினால்கூட போதும். இரவில் மிளிரும், டைப் செய்கையில் எந்த சத்தத்தையும் எழுப்பாது.

நிஜமான பற்க்கள்தான்..!
இந்த கப்பில் இருக்கும் பற்க்கள், நேராகவும் சுத்தமாகவும் இருப்பது உறுதி. இந்த கப், நம் பற்க்கள் மீதான ஆரோக்கிய அக்கறையை தினம் தினம் அதிகப்படுத்துமாம்.

கேபில் ட்ராப்
இது தேவையில் இல்லாத அல்லது அடிக்கடி கழற்றி மாட்டக்கூடிய, உங்கள் யூஎஸ்பி கேபில்களை மேசை மேலிருந்து விழாமல் பிடித்துக்கொள்ளும்.

பாதங்களின் பங்காளி
வார்ம்மீ யூஎஸ்பி ஹுட்டிங் வார்ம் ஸ்லிப்பர், உங்கள் பாதங்களை மிக குளிரான இடங்களில் இதமாக வைத்திருக்க உதவும்.

மொபைல் டெஸ்க்
உங்கள் ஆபிஸில் நீங்கள் விரும்பிய இடத்திற்க்கு உங்கள் லாப் டாப் உடன் நகர்ந்து சென்று வேலை செய்யாலம்.

யூஎஸ்பி போர்வை
அதிக குளிர் உங்கள் வேலைகளை மெதுவாக்குகிறதா, கவலையை விடுங்கள். இந்த யூஎஸ்பி ஹீட்டிங் பிலான்கெட் உங்களை சூடாக வைத்திருக்க உதவும்.

குளுமையான சீட் குஷன்
இதை உங்கள் சீட்டூக்கு மேல் வைத்து உட்க்கார்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானால் வேலை செய்யலாம். இது ஜப்பான் நாட்டின் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பு.

எக்ஸ்கேலிபர் யூஎஸ்பி ஃபோம் ஃபேன்
மேசையில் வைத்துக்கொள்ளும்படி, பாதுகாப்பான பிளேடுகளை கொண்டு உருவாக்கப்பட்ட இதன் யூஎஸ்பி-யை எடுத்து பொருத்திக்கொண்டால் போதும், தென்றல் காற்று வீசும்.

மான்ஸ்டர் ஹப்
24 யூஎஸ்பி போர்ட்டுகளை கொண்டது.


Click it and Unblock the Notifications