கொசு இனத்தையே அழிச்சிடலாம் வாங்க !

Written By: Muthuraj

எனக்கு கொசுக்களை பிடிக்கும்னு ஒருத்தரையாச்சும் சொல்ல சொல்லுங்க பார்ப்போம், ஒருத்தரும் சொல்ல மாட்டாங்க. அவ்வளவு பண்ணிருக்கு இந்த கொசுக்கூட்டம்.

கொசு இனத்தையே அழிச்சிடலாம் வாங்க !

மனுசங்க நாம நிம்மதியா தூங்குறத பாக்க பிடிக்காத சாத்தான் கூட்டம் படைச்சி விட்டதுதான் இந்த கொசுக்கள் என்று சொன்னால்கூட ஆமாம்ப்பா என்று ஒற்றுக்கொள்ளத் தோன்றுமளவு நாம் கொசுக்களை வெறுக்கிறோம். ஆனால் கொசுக்களோ நம்மையும், நம் ரத்ததையும்தான் அதிகம் காதலிக்கிறது, விடாது கருப்பு போல துரத்துகிறது.

பித்துப்பிடிக்க வைக்கும் வினோதமான கருவிகள்

மூச்சி முட்டமுட்ட போர்வையை மூடிக்கொள்ளவும் முடியாது, நாற்றம் பிடித்த கொசுவத்திகளையும் விடியவிடிய நுகர முடியாது, நிம்மதியாக தூங்கவும் முடியாது. இப்படி கொசுக்கள் நம் வாழ்க்கையில் பல முடியாது-முடியாது என்ற வார்த்தைகளை சேர்த்து விட, முடியும் என்று கிளம்பி இருக்கிறது கொசுக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட - மெகா கேட்ச்..!

கொசு இனத்தையே அழிச்சிடலாம் வாங்க !

மெகா கேட்ச் - கொசுக்களை விழுங்கும் ஒரு கருவி. கொசுக்ளை வெறுப்பவர்களின் நண்பன் என்று கூட சொல்லலாம். இந்த கருவியில் இருந்து வெளிவரும் மனித சுவாசக்காற்றை ஒற்ற வாசமானது, கொசுக்களை சுண்டி இழுக்கும். அதை மனித சுவாச வாசமென நம்பி உள்ளே சென்று சிக்கும் ரத்த விரும்பிகளான கொசுக்கள் அத்தனையும், அவ்வளவுதான் கதம்-கதம்..!

வாவ் சொல்ல வைக்கும் சூப்பர் சுட்டிஸ்

மேகா கேட்ச்சை பிளக் செய்து ஆன் செய்தால் போதும், அது தன் கொசு விழுங்கும் வேலையை சூப்பராக செய்யும், இதை 24 மணி நேரமும் அல்லது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் முக்கிய இயங்கு பொருட்களான சிறு வகை ஏசி மற்றும் ஆக்டேனால் ஆகியவற்றை 3 வாரத்திற்க்கு ஒருமுறை மாற்றும்படி, இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொசு இனத்தையே அழிச்சிடலாம் வாங்க !

அமெரிக்காவின் விவசாயத்துறை இந்த கருவியை புறநகர் பகுதி ஒன்றில் சோதித்து பார்த்த போது, ஒரு இரவில் 1200 கொசுக்கள் சிக்கியதாம். அப்ப நம்ம ஊருல வச்சா லட்சம் லட்சாமா சிக்குமேப்பா..!

Read more about:
English summary
Mega Catch is a Mosquito Killer machine, its captured approximately 1200 mosquitoes in a single night.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot