அம்பலம் : அமெரிக்காவின் குருட்டுத்தனம்; பலியான அப்பாவி மக்கள்..!

|

இரத்ததிலும், யுத்தத்திலும் 'அரசியல்' செய்யும் உலக நாடுகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாய் விளங்கும் நாடான அமெரிக்காவின் கைகள் முழுக்க முழுக்க இரத்த கறை படிந்த ஒன்றுதான் என்பதை மறுபடியும் நிரூபிக்கும் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

பாகம் 1 : அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!

பாகம் 2 : அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!

ஆளில்லா ட்ரோன் விமானம் என்ற அதிநவீன தொழில்நுட்பக் கருவிகளை கொலை மிருகமாய் பயன்படுத்தி, அப்பாவி மக்களை கொன்று அமெரிக்கா கொன்று குவித்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது, 'தி இன்டார்செப்ட்' (The Intercept) அறிக்கை ஒன்று..!

பலமுறை தாக்குதல் :

பலமுறை தாக்குதல் :

அமெரிக்கா, ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் பலமுறை தாக்குதல் நடத்தி உள்ளது.

இலக்கு :

இலக்கு :

அது போன்ற தாக்குதல்களில் பெரும்பாலும் தீவிரவாதிகள் தான் அமெரிக்காவின் இலக்கு என்றும், மிகவும் அரிதாக தான் பொதுமக்கள் காயப்படுகிறார்கள் என்றும் அமெரிக்கா கூறி வந்தது.

அறிக்கை :

அறிக்கை :

அப்படியாக சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட ட்ரோன் விமான தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 90% பேர் அப்பாவி மக்கள் என்ற அறிக்கை அம்பலாமாகி உள்ளது.

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

இந்த அதிர்ச்சியான அறிக்கையை தி இன்டார்செப்ட் (The Intercept), தி ட்ரோன் பேப்பர் (The Drone Paper) என்ற தலைப்பில் வெளியிட்டு உள்ளது.

இலக்கு இல்லை :

இலக்கு இல்லை :

அதாவது, அமெரிக்காவின் 'இலக்கு எங்கு இல்லையே அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என்கிறது அந்த அறிக்கை.

 ஆப்ரேஷன் ஹேமேக்கர் :

ஆப்ரேஷன் ஹேமேக்கர் :

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் அமெரிக்கவால் நடத்தப்பட்ட ட்ரோன் விமான தாக்குதல் தான் - ஆப்ரேஷன் ஹேமேக்கர் (Operation Haymaker).

200 பேர் :

200 பேர் :

2012 ஜனவரி முதல் 2013 பிப்ரவரி வரை நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.

உளவுத்துறை :

உளவுத்துறை :

அந்த 200 பேரில் வெறும் 35 பேர் மட்டும் தான் அமெரிக்க உளவுத்துறையால் கொல்ல வேண்டும் என்று குறி வைக்கப்பட்டவர்கள் ஆவார்கள்.

விளக்கம் :

விளக்கம் :

அவர்களை தவிர்த்து கொல்லப்பட்ட 165 பேர்கள் அனைவருமே அப்பாவி மக்கள் என்று தி இன்டர்செப்ட் அறிக்கை விளக்கம் அளிக்கிறது.

மோசம் :

மோசம் :

மிகவும் பலவீனமான தொழில்நுட்ப வசதிகளை கொண்ட ஏமன் மற்றும் சோமாலியாவில் நடத்தப்பட்ட ட்ரோன் விமான தாக்குதல்களில் கூட இந்த அளவு மோசமாக அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என்கிறது அந்த அறிக்கை.

உளவுத்துறை அமைப்புகள் :

உளவுத்துறை அமைப்புகள் :

அமெரிக்கவை சேர்ந்த உளவுத்துறை அமைப்புகள் வழங்கிய தகவல்களில் இருந்து தான் தி இன்டர்செப்ட் அறிக்கையானது உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளில்லா ட்ரோன் விமான தாக்குதல் :

ஆளில்லா ட்ரோன் விமான தாக்குதல் :

மேலும் கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து, இது போன்ற ஆளில்லா ட்ரோன் விமான தாக்குதல் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் உள்ள அப்பாவி மக்களை, அமெரிக்கா கொலை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருமண நிகழ்ச்சி :

திருமண நிகழ்ச்சி :

ஏமன் நாட்டில், டிசம்பர் 2013-ஆம் ஆண்டு அமெரிக்க ட்ரோன் ஒன்றால் தவறாக நடத்தப்பட்ட தாக்குதலில் ஒன்றில் திருமண நிகழ்ச்சியை முடித்து விட்டு திரும்பிய கார் ஒன்று குண்டு வீசி அழிக்கப்பட்டது.

தீவிரவாதிகள் :

தீவிரவாதிகள் :

அல் காயிதா (al Qaeda) மற்றும் தாலிபான் (Taliban) இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் என்று தவறான அந்த தாக்குதலுக்கு ஆளாகி 14 அப்பாவி மக்கள் உயிர் இழந்தனர்.

குருட்டுத்தனம் :

குருட்டுத்தனம் :

பாகிஸ்தானை சேர்ந்த பெற்றோர்கள் பலர், அமெரிக்காவின் குருட்டுத்தனமான ட்ரோன் தாக்குதலுக்கு அஞ்சி, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீடுகளுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறுமி :

சிறுமி :

அப்படியாக பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுமி ஒருவள், தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்தாள்.

எதிர்ப்பு :

எதிர்ப்பு :

அதை அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோன் விமானங்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் அந்த சிறுமியின் புகைப்படத்தை பெரிய அளவில் பாகிஸ்தான் மக்கள் காட்சிப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாகிஸ்தான் :

பாகிஸ்தான் :

அமெரிக்காவின் இந்த ட்ரோன் விமான தாக்குதலை எதிர்த்து பாகிஸ்தானில் போராட்டங்களும், எதிர்ப்புகழும் கிளம்பின.

பழிக்கு பழி :

பழிக்கு பழி :

செப்டம்பர் 11, இரட்டை கோபுர தகர்ப்புக்கு பின்தான் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம், தீவிரவாதிகளுக்கு எதிராக இது போன்ற தாக்குதலில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
அம்பலம் : தீவிரவாதிகளுக்கு பதில் அப்பாவி மக்களை கொன்று குவித்த அமெரிக்க ஆளில்லா ட்ரோன் விமானங்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X