வரும் ஏப்ரல் 29-முதல் பப்ஜி லைட் செயல்படாது என நிறுவனம் அறிவிப்பு.!

|

அண்மையில் வெளிவந்த தகவலின்படி வரும் ஏப்ரல் 29-ம் தேதி முதல் உலகமெங்கும் பப்ஜி லைட் செயல்படாது என பப்ஜி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது பொழுதுபோக்குக்கு பப்ஜி விளையாடிய காலம் சென்று பொழுதுக்கும் பப்ஜி விளையாடிய காலமாக மாறிவிட்டது. குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த கேமில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்றுதான் கூறவேண்டும்.

பெரும்பாலானோர் தங்களது

இப்போதும் கூட பெரும்பாலானோர் தங்களது நேரத்தை வீட்டிலேயே செலவிட்டு வருகின்றனர். தங்களது பொழுதை எவ்வாறு செலவிடுவது என்று அறியாமல் பெரும்பாலானோர் தவித்து வருகின்றனர். ​​இதில் பெரும்பாலான மக்கள் தங்களது நேரத்தை கேமில் செலவிட்டு வருகின்றனர்.

நண்பர்கள் ஒன்றுகூடி பேசி குழுவாக தங்களது

அதேபோல் நண்பர்கள் ஒன்றுகூடி பேசி குழுவாக தங்களது நேரத்தை ஆன்லைனில் செலவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். பப்ஜி, கால் ஆஃப் டூட்டி போன்ற விளையாட்டுகள் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. இதில் நேரத்தை செலவிடும் நபர்கள் அதிகம் என்று கூறினால் அது மிகையல்ல.

 சார்பில் தெரிவிக்கப்பட்டுள்

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பப்ஜி லைட் ஆனது வரும் ஏப்ரல் 29-ம் தேதி முதல் செயல்படாது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பப்ஜி நிறுவனம் கூறியது என்னவென்றால்,

வேட்டையாடுபவர்களை மிரளவைக்கும் யுக்தி: சூறாவளி போல் சுற்றி சூழ்ச்சி செய்யும் கலைமான்கள்- ட்ரோன் வீடியோ வைரல்!வேட்டையாடுபவர்களை மிரளவைக்கும் யுக்தி: சூறாவளி போல் சுற்றி சூழ்ச்சி செய்யும் கலைமான்கள்- ட்ரோன் வீடியோ வைரல்!

பொழுது போக்காக

பப்ஜி லைட் கேம் ஆர்வமாக விளையாடும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்து எங்களுக்கு ஆதரவை தருவார்கள் என்று நம்புகிறோம். அதிலும் இந்த நோய் தொற்று காலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் நிச்சயம் பப்ஜி லைட் சிறந்த பொழுது போக்காக இருந்திருக்கு என்று நாங்கள் நம்புகிறோம்.

கன்னியாகுமரியில் கண்டுபிடிக்கப்பட்ட 2 புதிய சிவப்பு நிற கடற்பாசி இனங்கள்.. வெளிப்படும் உண்மை..கன்னியாகுமரியில் கண்டுபிடிக்கப்பட்ட 2 புதிய சிவப்பு நிற கடற்பாசி இனங்கள்.. வெளிப்படும் உண்மை..

 காரணங்களால் பப்ஜி

பின்பு சில தவிர்க்க முடியாத காரணங்களால் பப்ஜி லைட் கேம் ஆனது வரும் ஏப்ரல் 29-ம் தேதி முதல் செயல்படாது. இதற்கு வேண்டி பல பயனர்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறோம். ஆனாலும் பப்ஜி லைட் பேஸ்புக் பயன்பாட்டில் இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vivo X60t அறிமுகம் ஆகிடுச்சு.. அடுத்து இந்தியாவில் தான் அறிமுகமா? என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?Vivo X60t அறிமுகம் ஆகிடுச்சு.. அடுத்து இந்தியாவில் தான் அறிமுகமா? என்ன விலையில் எதிர்பார்க்கலாம்?

சட்டம் 60ஏ விதியின் படி பப்ஜி லைட்

வெளிவந்த தகவலின்படி, இந்திய தவல் தொழிட்நுட்ப சட்டம் 60ஏ விதியின் படி பப்ஜி லைட் கேம் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து பேசிய பப்ஜி நிறுவனம் டென்சென்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திரும்ப பெற்றுள்ளோம் எனவும், பின்பு விரைவில் இந்திய அரசுடன் பேசி இதற்கான தீர்வு விரைவாக எட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.

 3.3கோடியை எட்டியுள்ளது

உலகம் முழுவதும் 60 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த பப்ஜி செயலி. அதிலும் 5 கோடி வாடிக்கையாளர்கள் இந்த கேமை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்தியாவில் பப்ஜி பயனர்களின் எண்ணிக்கை 3.3கோடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The company has announced that PUBG Light will not be operational from April 29th: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X