குறைந்த விலையில் சிறந்த பிராட்பேண்ட் திட்டம் வேண்டுமா? அப்போ 'இந்த' திட்டங்களை பாருங்க..

|

இணையத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் உள்ள இணையச் சேவை வழங்குநர்கள் (ISP கள்) பல்வேறு தேவைகளைக் கொண்ட மக்களுக்கு ஏற்ற திட்டங்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். ISPகள் 1 Gbps இணைய வேகத்தை வழங்கக்கூடிய தரவுத் திட்டங்களை வழங்கினாலும், அவை மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கிறது. இந்த அதிவேக திட்டங்களை எல்லோராலும் அதிக கட்டணம் செலுத்தி வாங்க இயலாது, பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு வரும்போது மக்கள் குறிப்பாக பாக்கெட் பிரண்ட்லி திட்டங்களைத் தேர்வு செய்ய மட்டுமே விரும்புகின்றனர்.

பிராட்பேண்ட் சேவைக்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன?

பிராட்பேண்ட் சேவைக்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன?

குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் இணைய வழியில் கல்வி, வீட்டில் இருந்து வேலை பார்ப்பது போன்ற சூழ்நிலைகள் அதிகரித்துவிட்டதனால், பிராட்பேண்ட் சேவைகளுக்கான தேவையும் இப்போது மக்களுக்கு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் இப்போது பிராட்பேண்ட் தேவையை மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இப்போது OTT தேவைகளும் அதிகரித்து வருவதால் மக்கள் பிராட்பேண்ட் சேவைகளை நாடியுள்ளனர். அதிலும் குறிப்பாக விலை குறைவான சிறந்த திட்டங்களையே அனைவரும் தேடுகிறார்கள்.

குறைந்த விலையில் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள் வேண்டுமா?

குறைந்த விலையில் சிறந்த பிராட்பேண்ட் திட்டங்கள் வேண்டுமா?

அப்படி, விலை குறைவான சிறந்த பிராட்பேண்ட் திட்டங்களைத் தேடும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், நிச்சயமாக இந்த கட்டுரை உங்களுக்கானது தான். இந்தக் கட்டுரையில், திறமையான மற்றும் பயனுள்ள ISPகள் வழங்கும் சில குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். உங்களுக்காக இப்போது ஏர்டெல், BSNL மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்களில் இருந்து கிடைக்கக்கூடிய சிறந்த குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்களை இங்கே தொகுத்துள்ளோம். இதில் எந்த திட்டம் உங்களுக்குப் பொருந்தும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள்.

Airtel இடமிருந்து தினமும் அரை ஜிபி டேட்டாவை இலவசமாக வாங்குவது எப்படி? இது நல்ல சலுகையா இருக்கே..Airtel இடமிருந்து தினமும் அரை ஜிபி டேட்டாவை இலவசமாக வாங்குவது எப்படி? இது நல்ல சலுகையா இருக்கே..

ஏர்டெல் வழங்கும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்

ஏர்டெல் வழங்கும் மலிவான பிராட்பேண்ட் திட்டம்

ஏர்டெல் ஏற்கனவே மிகவும் போட்டி நிறைந்த சந்தையில் பயனர்களை ஈர்க்கும் வகையில் அதன் திட்டங்களையும் அதன் மூலம் வழங்கப்படும் சேவையையும் இப்போது புதுப்பித்துள்ளது. ஏர்டெல் தனது XStream பைபர் சேவையின் மூலம் தனது பயனர்களுக்கு தேவையான அதிவேக இணைய இணைப்பு சேவையை இப்போது வழங்குகிறது. இது முன்பை விட சிறப்பாகவும், மேம்படுத்தப்பட்ட மற்றும் வேகமான தினசரி பிராட்பேண்ட் இணைப்பு அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. ஏர்டெல் தனது வேகமான பிராட்பேண்ட் இணைப்புகளில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒரு திட்டத்தை வைத்துள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் திட்ட நன்மைகள்

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் திட்ட நன்மைகள்

இந்த பேசிக் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பைபர் திட்டங்களைப் பயனர்கள் தேர்வு செய்யும் போது, அவர்களுக்கு 40 எம்பிபிஎஸ் இணைய வேகத்தில் இணையச் சேவை கிடைக்கிறது. இந்த 'பேசிக்' பிராட்பேண்ட் பேக்கிற்கான அணுகலைப் பெற நீங்கள் மாதந்தோறும் வெறும் ரூ. 499 விலை (வரிகள் எதுவும் இல்லாமல்) செலுத்தினால் மட்டும் போதும். இந்தத் திட்டத்தில் பயனர்களுக்கு 3.3TB அல்லது 3300 ஜிபி மாதாந்திர நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) தரவைப் பெறுவார்கள். ஏர்டெல் அதன் பிராட்பேண்ட் திட்டங்களுடன் 'ஏர்டெல் தேங்க்ஸ் பெனிஃபிட்ஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த விஷயத்தில் விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமிக்கான சந்தாவும் அடங்கும்.

பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..பாக்கவே பயங்கரமா இருக்கு: கரைக்கு வந்த 'ஆழக்கடல் மான்ஸ்டர்'! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய கடல் உயிரினம்..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் JioFiber 30 Mbps பிராட்பேண்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் JioFiber 30 Mbps பிராட்பேண்ட் திட்டம்

ஜியோஃபைபர் மாதம் வெறும் ரூ.399 விலையில் 30 எம்பிபிஎஸ் இணைய வேகத்தில் உங்களுக்கு பேசிக் பிராட்பேண்ட் டேட்டா திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் FUP வரம்பு உடன் பயனர்களுக்கு மொத்தமாக 3300 ஜிபி அல்லது 3.3 TB டேட்டா கிடைக்கிறது. JioFiber வழங்கும் 30 Mbps திட்டத்தைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் பல சாதனங்களில் மென்மையான மற்றும் தடையற்ற இணைய அணுகலைப் பெறலாம். அதிவேக இணையத்துடன், பயனர்கள் வழங்குநரிடமிருந்து சமச்சீர் பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தையும் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை மறக்காமல் கவனித்துக்கொள்ளுங்கள்

இதை மறக்காமல் கவனித்துக்கொள்ளுங்கள்

இதன் மூலம் நீங்கள் அனுபவிக்கும் டவுன்லோட் வேகம் மற்றும் அப்லோட் வேகம் இரண்டும் ஒரே அளவில் இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இது ISP வழங்கும் மலிவான திட்டங்களில் ஒன்றாகும். எனவே இது JioFiber வழங்கும் அதிக விலை திட்டங்கள் போன்ற எந்த OTT தளத்திற்கும் செல்லுபடியாகும் சந்தாக்களைச் சேர்க்காது என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். இருப்பினும், பயனர்கள் செலவு குறைந்த திட்டங்களைத் தேடும் போது இது சிறந்த விருப்பங்களில் ஒன்றாகும்.

பெடல் அடித்தே உலகை வியப்பில் ஆழ்த்திய பிக்காஸோ 'இவர்' தான்.. மேப்ஸ் வரைபடத்தில் முரட்டு மீசைக்காரன்..பெடல் அடித்தே உலகை வியப்பில் ஆழ்த்திய பிக்காஸோ 'இவர்' தான்.. மேப்ஸ் வரைபடத்தில் முரட்டு மீசைக்காரன்..

BSNL வழங்கும் இரண்டு குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்கள்

BSNL வழங்கும் இரண்டு குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்கள்

பாரத் ஃபைபர் பிராட்பேண்டின் கீழ் அரசாங்கத்திற்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், பாக்கெட்டுக்கு ஏற்ற விருப்பங்களை விரும்பும் அதன் பயனர்களுக்கு அற்புதமான நன்மைகளுடன் வழங்குகிறது. பிஎஸ்என்எல் வழங்கும் 'ஃபைபர் பேசிக்' மற்றும் 'ஃபைபர் பேசிக் பிளஸ்' திட்டங்கள் முறையே 30 எம்பிபிஎஸ் மற்றும் 60 எம்பிபிஎஸ் இணைய வேகத்தை வழங்குகிறது. ஃபைபர் பேசிக் திட்டம் மாதத்திற்கு வெறும் ரூ.449 விலையில் வருகிறது. அதேசமயம் ஃபைபர் பேசிக் பிளஸ் பயனர்களுக்கு மாதம் வெறும் ரூ.599 செலவில் கிடைக்கிறது.

உங்களுக்குப் பிடித்த சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்

உங்களுக்குப் பிடித்த சரியான திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள்

இந்த இரண்டு விலைகளும் ஜிஎஸ்டிக்கு பிரத்தியேகமானவை மற்றும் இந்த இரண்டு திட்டங்களும் 3300 ஜிபி அல்லது 3.3 டிபி என்ற FUP வரம்புடன் டேட்டாவை வழங்குகிறது. தரவு வரம்புக்கு அப்பால், பயனர்கள் 2 Mbps இன் இணைய வேகத்தை அனுபவிக்க முடியும். மேலும் இந்த இரண்டு திட்டங்களும் முதல் பில்லில் ரூ. 500 வரை 90% தள்ளுபடியை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறைந்த விலை பிராட்பேண்ட் திட்டங்களில் இருந்து உங்களுக்குப் பிடித்த சரியான திட்டத்தைத் தேர்வு செய்யுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The Cheapest Broadband Plans From Airtel Jio And BSNL That You Can Try Now In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X