வாழ்க்கையின் வெற்றிக்கு இதை பின்பற்றவும்-சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகளை போட்டு உடைத்த தொழிலதிபர்

|

தாய் நிறுவனத்தின் தலைமை பொறுப்பும் சுந்தர் பிச்சைக்கே கூகுளின் தலைமை செயலதிகாரியாக பணியாற்றி வரும் சுந்தர் பிச்சை, கடந்த 3ம் தேதி முதல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதேபோல், சுந்தர் பிச்சை ஒரே நேரத்தில் இந்த இரண்டு நிறுவனங்களின் தலைமை செயலதிகாரியாகச் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்திய ரூபாய் மதிப்பின் படி இவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய ரூபாய் மதிப்பின் படி இவர் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதனைத் தொடர்ந்து ஆல்பாபெட் நிறுவனம், சுந்தர் பிச்சையின் ஊதியத்தைப் தற்பொழுது பலமடங்காக உயர்த்தியிருக்கிறது. அல்பாபெட் நிறுவனத்தின் முடிவுப்படி, ஆண்டு சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சுந்தர் பிச்சைக்கு ஊதியமாக வழங்கப்படப்போகிறது. சுந்தர் பிச்சைக்கு வழங்கப்படும் 2 மில்லியன் டாலர் ஊதியம், இந்திய ரூபாய் மதிப்பின் படி சுமார் ரூ.14.22 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1.707 கோடி ஊக்கத் தொகையா?

ரூ.1.707 கோடி ஊக்கத் தொகையா?

இதைக்கேட்டு உங்களில் சிலர் ரூ.14.22 கோடி ஊதியமா என்று ஆச்சரியத்தில் இருப்பீர்கள். உங்களுக்கு அடுத்த அதிர்ச்சியும் காத்திருக்கிறது, அடுத்த மூன்றாண்டுகளில் அமெரிக்கப் பங்குச் சந்தையில் ஆல்பாபெட் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து சுமார் 240 மில்லியன் டாலர்கள் வரை, அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.707 கோடி ரூபாய் சுந்தர் பிச்சைக்கு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் இதுவே முதல்முறை

வரலாற்றில் இதுவே முதல்முறை

மிகப்பெரிய தொகையைப் பரிசாகப் பெறுவது சுந்தர் பிச்சைக்குப் புதிதல்ல என்றாலும் கூட, நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று ஆல்பாபெட் நிறுவனம் அறிவித்துள்ளது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும். இந்த செய்தி தற்பொழுது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகிவருகிறது.

உலகின் முதல் 16 ஜிபி ரேம் ஸ்மார்ட் போன்., எப்போது அறிமுகம்?உலகின் முதல் 16 ஜிபி ரேம் ஸ்மார்ட் போன்., எப்போது அறிமுகம்?

200 மில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை

200 மில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகை

இதற்கு முன்பு, கடந்த 2016ம் ஆண்டில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் ஊக்கத் தொகையாக சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது. இந்த 200 மில்லியன் ஊக்கத்தொகை நிறுவனத்தின் பங்குச் சந்தை செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்க தொகையை நிராகரித்த பிச்சை

ஊக்க தொகையை நிராகரித்த பிச்சை

அதிகமாகச் சம்பளம் பெற்றதாக உணர்கிறேன் என்று கூறி, சுந்தர் பிச்சை கடந்த ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகையை நிராகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிலிகான் வேலியில் சில ஊழியர்கள் வாழ்வதற்கே கஷ்டப்படும்போது, சுந்தர் பிச்சைக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம் என்று ஆல்பாபெட் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷ் கோயங்கா

ஹர்ஷ் கோயங்கா

ஹர்ஷ் கோயங்கா, இவர் 1.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆர்பிஜி குழும கூட்டமைப்பின் தற்போதைய தலைவராக உள்ளார். இவர் இந்தியாவில் 78 ஆவது பணக்காரர் என்றும் உலக பில்லியணர்களில் 1070-வது எண்ணிக்கையிலும் பட்டியலிடப்பட்டுள்ளார்.

டாப் 10 விதிகள்

டாப் 10 விதிகள்

ஹர்ஷ் கோயங்கா, தனது டுவிட்டர் பதிவில் சுந்தர் பிச்சையின் டாப் 10 விதிகள் என குறிப்பிட்டுள்ளார். அது,

1. அடுத்தது பற்றி சிந்தியுங்கள்.
2. அதிகாரம் செய்யுங்கள்
3. ஏதாவது விஷயம் குறித்து சிந்தித்துக் கொண்டே இருங்கள்.
4. கடிணமான செயல்களையே எடுத்து கொள்ளுங்கள்.
5. ஒரு நம்பிக்கையாளராக இருங்கள்.
6. சிக்கல்களை தீர்த்துக் காட்டவும்.
7. உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்.
8. தினமும் உங்களுக்கே இனிய காலை வணக்கம் சொல்லுங்கள்.
9. நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்.
10. உங்களை நீங்களே ஊக்கப்படுத்தி முன்னேறுங்கள்.

சிம்பிள் வேலை: பணியில் இருக்கும் போதே PF பணத்தை எடுக்கலாம்., PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது?சிம்பிள் வேலை: பணியில் இருக்கும் போதே PF பணத்தை எடுக்கலாம்., PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் உள்ளது?

ஏராளமானோர் விருப்பம் தெரிவிக்கின்றனர்

ஏராளமானோர் விருப்பம் தெரிவிக்கின்றனர்

ஹர்ஷ் கோயங்காவின் இந்த டுவிட்டர் பதிவுக்கு ஏராளுமானோர் விருப்பம் தெரிவிப்பதோடு ரீடுவிட் செய்தும் வருகிறார்கள். மேலே வழங்கப்பட்டுள்ள 10 செயல்களும் ஊக்கமளிக்கும் விதமாகவே இருக்கிறது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
The businessman announced the Top 10 Rules of Sundhar pitchai

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X