தி டாப் பெஸ்ட் ஸ்மார்ட்போன்ஸ் 2023: ஒவ்வொரு விலை பிரிவிலும் எந்த போன் டாப்.. வாங்குனா இந்த போனை வாங்குங்க..
இந்த 2023ம் ஆண்டில், எந்த விலை பிரிவில், எந்த ஸ்மார்ட்போன் சாதனம் "தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் 2023" (The Best Smartphone Models 2023) மாடலாக திகழ்ந்தது என்பதை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். 2023ம் ஆண்டின் தலைசிறந்த போன்களின் பட்டியல் இதோ.
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை (Indian Smartphone Market) பார்ட்-பார்ட்டாக பிரித்து, எந்த விலை பிரிவில் (Price range), எந்த ஸ்மார்ட்போன் சாதனம் மிகவும் பெஸ்ட் மாடலாக திகழ்ந்தது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். ரூ.8000 விலை முதல் ரூ.1 லட்சம் விலைக்கும் மேலுள்ள எல்லா விலை பட்டியலிலும் சிறந்த விளங்கிய ஸ்மார்ட்போன்களின் பட்டியல் (Best smartphone list 2023) இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.

1. ரூ.10,000 விலைக்குள் தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் - இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி(The Best Smartphone Under Rs 10,000 Infinix Smart 8 HD):
மலிவு விலையில் பெஸ்டாக ஒரு ஸ்மார்ட்போன் எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான சரியான சான்று தான் இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) சாதனம். இது இப்போது ரூ.6500 விலைக்குள் வாங்க கிடைக்கிறது. பெஸ்டான டிஸ்பிளே, சிப்செட், கேமரா, பேட்டரி என்று நியாயமான அம்சங்களை இது பேக் செய்துள்ளது.
2. ரூ.20,000 விலைக்குள் தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் நார்டு CE லைட் 5G (The Best Smartphone Under Rs 20,000 OnePlus Nord CE 3 Lite 5G):
2023ம் ஆண்டில் என்னதான் அதிகப்படியான ஸ்மார்ட்போன்கள் ரூ.20,000 விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், (OnePlus Nord CE 3 Lite 5G) போல எந்த சாதனமும் சிறப்பானதாக இல்லை. மிரட்டலான அம்சங்களை இந்த போன் ரூ.20,000 விலை பிரிவில் கவர் செய்து, தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் சாதனமாக சிறந்து விளங்குகிறது.
3. ரூ.30,000 விலைக்குள் தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் - மோட்டோரோலா எட்ஜ் 40 5ஜி (The Best Smartphone Under Rs 30,000 Motorola Edge 40 5G):
இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பிளாக்ஷிப் போன்களில் காணப்படும் அம்சங்களை வெறும் ரூ.26,999 விலையில் கிடைக்க செய்துள்ளது. உண்மையில், இந்த விலை பிரிவில் பெஸ்ட் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், 144Hz OLED டிஸ்பிளே போன்ற அம்சங்களை வழங்கி தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக இந்த விலை பிரிவில் தனித்து நிற்கிறது.
4. ரூ.40,000 விலைக்குள் தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் - iQOO நியோ 7 ப்ரோ 5ஜி (The Best Smartphone Under Rs 40,000 iQOO Neo 7 Pro 5G):
இந்த விலை பிரிவில் ஒன்பிளஸ் 11R (OnePlus 11R) ஸ்மார்ட்போனுக்கும் iQOO நியோ 7 ப்ரோ 5ஜி (iQOO Neo 7 Pro 5G) போனுக்கும் இடையில் வலுவான போட்டி நடைபெற்றது. இறுதியில், iQOO Neo 7 Pro 5G தான் வெற்றி அடைந்தது. காரணம், ஒன்பிளஸ் 11R வழங்கிய அதே ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட்டை, iQOO Neo 7 Pro 5G குறைந்த விலையில் வழங்கியுள்ளது.

5. ரூ.50,000 விலைக்குள் தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் - iQOO 12 5ஜி (The Best Smartphone Under Rs 50,000 iQOO 12 5G):
மீண்டும்-மீண்டுமா? என்பது போல iQOO மீண்டும் ஒருமுறை தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் பட்டியலில் தோன்றியுள்ளது. இந்த விலை பிரிவில் பார்த்து-பார்த்து செதுக்கிய பெஸ்ட் ஸ்மார்ட்போனாக இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் ஏகபோக அம்சங்களை பேக் செய்துள்ளது. இது ரூ.53,000 விலைக்கு வருகிறது. இருப்பினும் இதன் அம்சங்களை வேறெந்த நிறுவனமும் இந்த விலைக்குள் கவர் செய்யவில்லை என்பதே உண்மையாகும்.
6. ரூ.60,000 விலைக்குள் தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் 11 5ஜி (The Best Smartphone Under Rs 60,000 OnePlus 11 5G):
இந்த ஆண்டின் தி பெஸ்ட் பிளாக்ஷிப் போனாக இந்த நிமிடம் வரை ஒன்பிளஸ் 11 5ஜி சாதனம் தான் நிலைத்து நிற்கிறது. ஒன்பிளஸ் 12 வரும் ஜனவரியில் தான் இந்திய சந்தைக்குள் வருகிறது என்பதனால், இந்த விலை பிரிவில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் தான் தி பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடலாக மட்டுமின்றி, கிங் ஆப் தி ஸ்மார்ட்போனாக திகழ்கிறது.
7. தி பெஸ்ட் போல்டபில் ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் ஓபன் (The Best Foldable Smartphone - OnePlus Open):
போல்டபில் ஸ்மார்ட்போன்கள் இந்த 2023ம் ஆண்டில் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த ஆண்டு ரிலீஸ் ஆன போல்டபில் ஸ்மார்ட்போன்களில் தி பெஸ்ட் மாடலாக ஒன்பிளஸ் ஓபன் (OnePlus Open) கெத்தாக நிலைத்து நிற்கிறது.


Click it and Unblock the Notifications








